...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, July 1, 2017

                                                 ஜூலை 1
புதிய இன்கிரிமெண்ட் குள் நுழைகிறோம் .
GST எனும் வரி சவுக்கடி களை வா(தா) ங்கதான்   போகிறோம் 
போராட்ட களத்தை இழந்துவிட்டு   நிராயுதபாணியாய்
அலவன்சுகள் எனும் பெயரில் அரசாங்கத்தின் அசைந்துகொடுக்காத நிலையினை ஏற்று கொள்ள போகிறோம்    
மீண்டும் வட்டி குறைப்பு இருந்தாலும் வரிந்துகட்டி கொண்டு புதுக்கணக்குகளை தொடங்க அச்சுறுத்த படப்போகிறோம் 
பேச்சுவார்த்தைக்கு கூட வரமறுக்கும் நிர்வாகத்தை எதிர்த்து அவசர அவசரமாக போராட போகிறோம் 
 அரசாங்கத்தின் துரோகத்தை மறந்து ஏனோ 
திசைமாறி வசைபாடி கொண்டிருக்கிறோம் 
பொறுமை காத்து --யாருக்கோ 
பெருமை சேர்க்கிறோம் 
பொங்க வேண்டிய நேரத்தில் எதற்கோ 
மங்க தொடங்கிவிட்டோம் 
புரட்சிகளை மறந்து விட்டு 
பொதி சுமக்க பழகி விட்டோம் 
இருந்தாலும் 
இறுதி வெற்றி நமதே என்றே 
இனிய வரிகளை உச்சரித்தே 
உறுதி காக்கிறோம் --இயக்கங்களின் 
உயர்வை பார்க்கிறோம் 
ஜூலை வா ! கொடுமைகளை எரிக்க எங்களுக்கு 
அக்கினி ஜுவாலைகளை தா !தா !
   SK .ஜேக்கப் ராஜ் 



0 comments:

Post a Comment