...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, July 27, 2017

                                                          முக்கிய செய்திகள்
நெல்லை கோட்டத்தில் இன்று சுழல் மாறுதலுக்கான கமிட்டி கூடுகிறது 
அகில இந்திய மாநாட்டிற்கு வருகிறவர்கள் கவனத்திற்கு .......
GST நேரடி தாக்குதலை  இப்பொழுது தான் நேரடியாக உணர முடிந்தது .ஆம் .GST யை காரணம் காட்டி அகில இந்திய மாநாட்டு சார்பாளர் கட்டணம் /பார்வையாளர் கட்டணம் ரூபாய் 1500 இல் இருந்து ரூபாய் 2000 ஆக  உயர்வு .மேலும் மாநாட்டிற்கு வருகிறவர்கள் தங்களது அடையாள அட்டையின் நகல் ஒன்றை கொண்டு வரவும் .நமது கோட்டத்தில் 32 தோழர்கள் அகிலஇந்திய மாநாட்டிற்கு வருகிறார்கள் .ஆகவே ஏற்கனேவே சிறப்பு விடுப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களும் தனியாக தங்களது சொந்த EL விடுப்பு விண்ணப்பத்தையும் 05.08.2017 முதல் 10.08.2017 வரை கொடுக்கவும் 
------------------------------------------------------------------------------------------------------------            
   
27.07.2017 அன்று நடைபெறும் BSNL ஊழியர்களின் ஒரு வேலை நிறுத்தம் வெல்லட்டும் 
 பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் நடைபெற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விதித்துள்ள கடுமையான நிபந்தனைகளை எதிர்த்து 
இன்று BSNL ஊழியர்கள் சங்கமும் அதிகாரிகள் சங்கமும் இனைந்து ஒரு நாள் வேலைநிறுத்தத்தை நடத்துகின்றனர் .ஊதிய மாற்றம் நடைபெறும் ஆண்டிற்கு முந்தைய மூன்றாண்டுகளின் வரிக்கு முந்தைய லாபத்தின் சாராரியில் 20 % க்கு மிகாமல் கூடுதல் செலவீனம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பார்த்தால் BSNL ஊழியர்கள் ஊதிய மாற்றத்திற்கு தகுதி அற்றவர்களாகின்றனர் .இந்த பிரதான கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் வேலைநிறுத்தம் வெல்லட்டும் .
------------------------------------------------------------------------------------------------------------------------
அஞ்சல் துறையில் வருகிற 23.08.2017 ஒருநாள் வேலைநிறுத்தம் --தயாராகுவீர் 
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE சம்மேளனம் சார்பாக வருகிற 23.08.2017 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது .அதற்கான வேலைநிறுத்த நோட்டீஸ் நேற்று 26.07.2017 அன்று கொடுக்கப்பட்டுள்ளது
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் நெல்லை  
--------------------------------------------------------------------------------------------------------------------------
                      

0 comments:

Post a Comment