...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, July 18, 2017

நெல்லையில் நடைபெறும் தபால்காரர் சங்கத்தின் 37 வது மாநாடு வெல்லட்டும் 
அன்பார்ந்த எங்களருமை தபால்காரர் /MTS தோழர்களே !
வருகிற 22.07.2017 அன்று மாலை 6 மணிக்கு நமது திருநெல்வேலி கோட்டசங்கத்தின் 37 வது மாநாடு திருநெல்வேலி ராஜ் மகாலில் நடைபெறுகிறது .அதற்கு முன்னதாக  கோட்ட செயற்குழு 17.07.2017 அன்று பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்றது .மாநாட்டினை தொடர்ந்து மாநில செயற்குழு 23.07.2017 மாலை வரை அதே இடத்தில நடைபெறுகிறது .ஆகவே அனைத்து தோழர்களும் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் .
நேற்றைய செயற்குழுவில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் 
1.திருநெல்வேலி மாநகராட்சி B2 --அந்தஸ்தை பெற்றபிறகும் மக்கள்தொகையினை கணக்கில் காட்டி நமக்கு Z பிரிவிற்கான 8 சதம் HRA நிர்ணயிக்கப்பட்டது தவறு ஏற்கனவே மாநகராட்சி தீர்மானத்தின் அடிப்படையில் KTC நகர் விரிவாக்கப்பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் முயற்சிகளை துரிதப்படுத்தவும்நெல்லைக்கு Y அந்தஸ்துக்கான 16 சதம் HRA வழங்க   நடவடிக்கை எடுக்கப்படும் 
2.திருநெல்வேலி அஞ்சல் மருத்துவமனைக்கு ஒரு பெண் மருத்துவரை நியமிக்கவேண்டும் .
3.திருநெல்வேலி அஞ்சலகத்தில் கழிவறை கட்ட அனுப்பப்பட்ட வரைவு திட்டம் --பாளையங்கோட்டையில் அஞ்சலக வளாகத்தில் வாடிக்கையாளர்களுக்கான தனி கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி தர நிர்வாகம் நிதிநிலையை காரணம்காட்டி தாமதித்தால் நமது பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜிலா சதியானந்த் அவர்களை அணுகி அவர்களின் தொகுதி மேம்பட்டு நிதியில் இருந்து உதவிகள் கோருவது 
4.பாளையம்கோட்டையில் மீண்டும் கேண்டீன் தொடங்க புதிய இயக்குனர் அவர்களை மாநிலச்சங்கம் மூலம் முயற்சிகள் எடுப்பது 
5.KTC நகர் அஞ்சலகத்தை  டெலிவரி அலுவலகமாக தரம் உயர்த்தப்படுவதை விரைவு படுத்துவது 
6.பெருமாள்புரம் ,தச்சநல்லூர் விரிவாக்க பகுதிகளின் பட்டுவாடா தூரத்தை கணக்கிட்டு தேவைப்பட்டால் புதிய தபால்காரர் பதவிகளை உருவாக்குவது போன்ற தீர்மானங்கள் கோட்ட மாநாட்டில் நிறைவேற்ற முடிவுகள் எடுக்கப்பட்டது .
 மாநாட்டில் புதிய உறுப்பினர்களை அதாவது இளம் தபால்காரர்களை முழுவதுமாக பங்கேற்க வைப்பதற்காக நமது இளைய தோழர்கள் 
தோழர்சுபாஷ் சிந்து --பெருமாள் புரம் தோழர் பாலசுப்ரமணியன் -பாளையம்கோட்டை தோழர் ருக்மணி கணேசன் வள்ளியூர் முனைப்பாக செயல்பட கோட்ட சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது 
நன்றி .மாநாட்டு வெற்றி வாழ்த்துக்களுடன் 
                             SK .ஜேக்கப் ராஜ் -SK பாட்சா --


0 comments:

Post a Comment