...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, July 31, 2017

அன்பார்ந்த தோழர்களே !
 உங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துவிட் டீர்களா ?
பழைய காலங்களை போல் கால நீட்டிப்பு வழங்கப்படவில்லை 31.07.2017 கடைசிநாள் மறந்து வீடாதீர்கள் .
-----------------------------------------------------------------------------------------------------
 மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழுதான் கடைசி ஊதியகுழுவாம் --இனி ஊதியக்குழு கிடையாதாம் --இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ள செய்தியில் அரசு ஊழியர்களுக்கு சம்பளங்களை மாற்றியமைக்க  இனி பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டியதில்லை .அவ்வப்போது இது குறித்து Review செய்யப்படும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இருப்பதுபோல் wage review கமிட்டி போல் செயல்படுத்தப்படுமாம் ..இது  .விலை குறீயீட்டு அடிப்படையில் இருக்கும் .மேலும் DR.அக்ரோய்ட் பார்முலா பின்பற்றப்படுமாம் .இது நம்மீது அரசு காட்டும் பாசமா ? வேசமா ?
-----------------------------------------------------------------------------------------------------------------
அமிர்தசரஸில் 176 தபால்காரர்களுக்கு 27.07.2017 அன்று ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டுள்ளது .இது உடனுக்குடன் பட்டுவாடா தகவல்களை பதிவேற்ற பயன்படும்  .கூடிய  விரைவில் பார்சல் சேவைக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் 
நன்றி .தோழமைவாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை .
---------------------------------------------------------------------------------------------------------------------






0 comments:

Post a Comment