...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, July 26, 2017

                                                  முக்கிய செய்திகள் 
கேடர் சீரமைப்பு அமுலாக்கம் நிறுத்திவைப்பு --இது குறித்து அஞ்சல் வாரியம் 25.07.2017 அன்று வெளியிட்ட கடிதத்தில் கேடர் சீரமைப்பு அமுலாக்கத்திற்கு பிறகு எழுந்த பிரச்சினைகள் குறித்து ஆராய நமது முன்னாள் CPMG இன்றைய கர்நாடகா CPMG திரு சார்லஸ் லோபோ அவர்கள் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதால் கேடர் உத்தரவுகளை அமுல்படுத்துவதை நிறுத்தி வைக்க கூறி உள்ளது .இது சென்றவர்களுக்கு லாபம் --நின்றவர்களுக்கும் லாபம் 
-----------------------------------------------------------------------------------------------------------------------
கேடர் சீரமைப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட கமிட்டியின் முதல் கூட்டம் 02.08.2017 அன்று நமது இயக்குநரகத்தில் நடைபெறுகிறது .நமது சம்மேளனத்தின் சார்பாக அகிலஇந்திய தலைவரும் நமது மாநிலசெயலருமான தோழர் J.ராமமூர்த்தி அவர்கள் பங்கேற்கிறார்கள் .
LSG பதவிகளை கோட்ட மட்ட அளவிலான பதவிகளாக மாற்றுவது -நகர் பகுதிகளில் மேலும் புது LSG பதவிகளை உயர்த்துவது போன்ற ஊழியர்கள் நேரிடையாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எடுக்கப்பட்டுள்ளன .ஏற்கனேவே இதுகுறித்து விரிவான கோரிக்கைமனு நமது சம்மேளனம் சார்பாக அருமை தோழர் KVS அவர்களின் வழிகாட்டுதலில் கொடுக்கப்பட்டுள்ளது .
--------------------------------------------------------------------------------------------------------------------
பயிற்சி காலங்களையும் MACP பதவியுயர்கவுளுக்கும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற உத்தரவுகள் அசாம் ,ஆந்திரா போன்ற மாநிலங்களில் கொடுக்கப்பட்டுள்ளது .நமது மாநிலத்தில் இது குறித்து நமது மாநிலச்சங்கம் வலியுறுத்தி வந்த போதிலும் -எதிர்வரும் CPMG அவர்களுடன் நடக்கும் RJCM கூட்டத்தில் விவாதிக்க சேர்க்கப்பட்டுள்ளது
------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று (26.07.2017 )நமது DPS அவர்களை மாநிலச்சங்க அனுமதியோடு தோழர்கள் சுந்தரமூர்த்தி அவர்கள் தலைமையில் சந்திக்கிறார்கள் 
ஏற்கனவே 03.07.2017 அன்று சந்தித்தபின் அதன் தொடர்ச்சியாக இந்த சந்திப்பு நடக்கிறது .
 .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 
-------------------------------------------------------------------------------------------------------------------


0 comments:

Post a Comment