...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, July 25, 2017

                                            முக்கிய செய்திகள் 
24.07.2017 அன்று நமது கோட்டத்தில் முதுநிலை கண்காணிப்பளர்களுடனான மாதாந்திர பேட்டி நடைபெற்றது .காலை 10.45 க்கு தொடங்கிய பேட்டி மதியம் 1.30 வரை நீடித்தது .மீண்டும் இரவு 7.30 மணிக்கு விடுபட்ட ஒரு முக்கிய பிரச்சினை குறித்தும் மிக அழுத்தமாக விவாதிக்கப்பட்டது .
1.தோழர் .N .கண்ணன் அவர்களுக்கு பிடிக்கப்பட்ட HRA சம்பந்தமாக நாம் கொடுத்த ஆலோசனை ஏற்கப்பட்டு தோழர் அவர்களை விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது .
2.RT வரை ACCOUNTANT பதவிகளை அந்தந்த HEAD POST MASTER அவர்களே தேர்வான கணக்கர்களை வைத்து நிரப்பிட முடிவெடுக்கப்பட்டது .
3.திருநெல்வேலி CPC பிரிவிற்கு உள்ள தொலைபேசியில் 2322274 OUT GOING வசதி கேட்டு GM திருநெல்வேலி அவர்களுக்கு எழுதிய கடித நகல் நம்மிடமே கொடுக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களை அணுக அனுமதிக்கப்பட்டது .
4.திருநெல்வேலி தெற்கு அஞ்சலகத்திற்கு மேலும் ஒரு ஊழியரை இணைப்பதற்கான முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது .
5.நான்குனேரிக்கு புதிதாக நாற்காலிகள் வாங்கப்பட்டு கோட்ட அலுவலகத்தில் இருக்கிறது .விரைந்து அனுப்பப்படும் .
6.பொட்டல்புதூர் அஞ்சலகத்தில் காலியான தபால்காரர் பதவியை GDS மூலம் நிரப்பிட அனுமதிக்கப்பட்டது .
7.HSG I மற்றும் HSG II பதவிகளை தற்காலிகமாக நிரப்பிட தற்சமயம் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு மண்டல அலுவலக வழிகாட்டுதல்களை கேட்டுள்ளது .இருந்தாலும் LSG பெற்றவர்களின் விண்ணப்பங்களில் மருத்துவ காரணங்களுக்கான விண்ணப்பங்கள் பரீசிக்கப்படும் 
8.நமது கோட்டத்திற்கு நம்மிடம் GDS ஆக பணிபுரிந்து இன்று APS இல் பணியாற்றும் தோழர் நாகராஜ்  (PA திருவண்ணாமலை )அவர்களுக்கு மீண்டும் திருநெல்வேலிக்கு மறு ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது .தோழர் நாகராஜ் அவர்களை வாழ்த்துகிறோம் .
                                       மண்டல செய்திகள் 
விருதுநகர் கோட்டத்தில் 16 ஊழியர்களின் விருப்பத்திற்கு மாறாக இடப்பட்ட உத்தரவுகள் நேற்று நமது மாநிலசெயலரின் தலையீட்டினாலும் நமது மூத்த தோழர்கள் S.சுந்தரமூர்த்தி மற்றும் L.சண்முகநாதன் அவர்களின் அனுபவ ரீதியான முயற்சிகளின் விளைவாலும் ஊழியர்களின் விருப்பத்திற்கு மாறாக போடப்பட்ட உத்தரவுகள் ரத்து செய்ய ஏற்றுக்கொள்ளப்பட்டது  --மாநிலசெயலர் ,தூத்துக்குடியில் ஆய்வில் இருந்த நமது PMG அவர்களிடமும்  -தல்லாகுளம்HO விற்கு  வந்த நமது இயக்குனர் அவர்களை தோழர் சுந்தரமூர்த்தி அவர்களும் நிலைமையை விளக்கி கூறி மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்திட முயற்சிகளை எடுத்துள்ளனர் .தோழர் JR -SS அவர்களின் கூட்டு முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் .நமது மண்டலத்தில் வரலாறு திரும்புகிறது --ஊழியர்களிடையே புது நம்பிக்கை அரும்புகிறது --கோட்ட கிளைகள் இந்த ஒற்றுமையைத்தான் விரும்புகிறது 
நன்றி SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment