தென்மண்டல புதிய இயக்குனர்
திரு .பவன்குமார் சிங் IPS அவர்களுடன் ஒரு சந்திப்பு --மாநிலச்சங்கத்திற்கு நன்றி !நன்றி
தென்மண்டலத்தில் புதிதாக பொறுப்பேற்ற இயக்குனர் திரு .பவன்குமார் சிங் IPS அவர்களை நேற்று 03.07.2017 அன்று மதுரையில் தோழர்கள் மதுரை கோட்ட செயலர் சுந்தரமூர்த்தி ,திண்டுக்கல் கோட்டசெயலர் மைக்கேல் சகாயராஜ் கன்னியாகுமரி கோட்டசெயலர் சுரேஷ் குமார் உள்ளிட்ட தோழர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களையும் நமது எதிர்பார்ப்புகளையும் தெரிவித்தோம் ..இதற்கு எங்களுக்கு அனுமதி அளித்து ஊக்கப்படுத்திய மாநில செயலர் தோழர் JR அவர்களுக்கும் எங்கள் நன்றியை முதலில் தெரிவித்து கொள்கிறோம் .நமது கருத்துக்களை மிகவும் பொறுமையுடனும் பெருந்தன்மையுடனும் கேட்டுக்கொண்ட இயக்குனர் அவர்கள் கடந்த கால நிகழ்வுகள் இனி தொடராது குறிப்பாக ஒழுங்கு நடவடிக்கைகளில் ரிவியூ மற்றும் தண்டனைகளை உயர்த்துவது என்பதெல்லாம் இருக்காது ஒரு இணக்கமான சூழலில் நாம் இணைந்து பணியாற்றுவோம் என்று மிக நம்பிக்கையான வார்த்தைகளை சொன்னது எங்களுக்கெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சியாக இருந்தது .கடந்த காலங்களில் சிறு சிறு CLERICAL ERROR கும் வழங்கப்பட்ட தண்டனைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலை --RULE 16 யை அவர்களே RULE 14 ஆக மாற்றிய கொடுமை இவைகளையெல்லாம் மிக தெளிவாக இயக்குனர்களின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளோம் .நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மனிதாபிமானமிக்க ஒரு இயக்குனரை தென்மண்டலம் பெற்றிருக்கிறது .அவர்களுக்கு நாம் அனைவரும் முழுமையான ஒத்துழைப்புகளை நல்கி ஊழியர்களின் பாதிப்புகளை களைய மாநிலச்சங்கத்தின் வழிகாட்டுதல்களோடு நம்பிக்கையோடு பணியாற்றுவோம் .
PMG அவர்களுடன் சந்திப்பு
முன்னதாக நமது மாநில சங்க வழிகாட்டுதலின் படி நமது PMG அவர்களை முன்னனுமதி பெற்று சந்தித்து தென்மண்டல பிரச்சினைகளை குறித்து விவாதித்தோம் .முதலாவதாக தென்மண்டலத்தில் கேடர் சீரமைப்பில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கான இடமாறுதல்களில் மாற்றங்கள் குறித்து விவாதித்தோம் .நிட்சயமாக CLEARVACANT உள்ள இடங்களை சுட்டிக்காட்டி விண்ணப்பிப்பவர்களுக்கு உதவி செய்வதாக உறுதி அளித்தார்கள் (கேடர் இடமாறுதலில் மேல்முறையிடு செய்தவர்கள் யாரும் புதிய இடங்களில் கோட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்தினாலும்JOIN பண்ண வேண்டாம் )மேலும் நமது மண்டலத்திற்குள்ளான RULE 38 இடமாறுதல் --TEMPORARY இடமாறுதல் குறித்தும் பேசினோம் .இனிமேல் RULE 38 இடமாறுதல் பதிவுகள் வெளிப்படையாக இருக்கும் யார் வேண்டுமானாலும் தங்களது WAITING LIST என்ன என்பதை தெரிந்துகொள்ள ஒரு வெளிப்படையான தன்மை கடைப்பிடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்கள் .PMG அவர்களுடனான சந்திப்பும் மிக பயனுள்ளதாக இருந்தது .
மதுரை பயிற்சி மையமும் பொலிவு பெறுகிறது
நமது இயக்குனர் அவர்கள்தான் மதுரை PTC கும் பொறுப்பு இயக்குனர் என்பது நமது ஊழியர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி .இனி மனஉளைச்சல்கள் இன்றி ஊழியர்கள் பயிற்சி மையங்களுக்கு செல்லலாம் காரை கும்பிடனும் யாரை கும்பிடனும் என்ற குழப்பங்கள் இருக்காது .
மாநிலச்சங்கத்திற்கு ஒரு வேண்டுகோள்
கடந்த 7 ஆண்டுகளில் தென்மண்டலத்தில் நடந்த ப ழிவாங்கல்களை நிவிர்த்தி செய்யும் ஒரு நல்ல தருணம் கிடைத்திருக்கிறது .இனிமேல் எந்த கோட்ட அதிகாரிகளும் மேலிடத்து உத்தரவு என்று ஊழியர்களை சிரமப்படுத்த முடியாது .ஆகவே தேங்கிக்கிடக்கும் தென்மண்டல பிரச்சினைகளை சேகரித்து மண்டல நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தென்மண்டல ஊழியர்களுக்கு நமது பேரியக்கத்தின் மீது புது நம்பிக்கை ஏற்பட மாநில சங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க ஒட்டுமொத்த தென்மண்டல கோட்ட /கிளை செயலர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் ..முதலில் திருநெல்வேலி பிரச்சினைகளை பேசமட்டும் தான் அனுமதி பெற்றிருந்தாலும் மாநில செயலர் தோழர் JR அவர்களின் முழு முயற்சியால் அநேக கோட்ட பிரச்சினைகளை சேர்த்து பேசிட எங்களுக்கு நல்லதொரு ஆலோசனைகளை வழங்கிய தோழர் அருமைத்தலைவர் KVS அவர்களுக்கும் சுந்தரமூர்த்தி அவர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment