...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, April 28, 2018

                                                 முக்கிய செய்திகள் 
இந்த ஆண்டு புதிய உறுப்பினர்களாக 19 தோழர்கள் NFPE யில் இணைந்துள்ளனர் (.P 3--7  P 4-12 ) புதிய உறுப்பினர்களை நெல்லை NFPE வாழ்த்தி வரவேற்கிறது .
------------------------------------------------------------------------------------------------------------------------
PO &RMS ACCOUNTANT தேர்வு 03.06.2018 அன்று நடைபெறுகிறது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 18.05.2018. ஆர்வமுள்ள தோழர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள கேட்டு கொள்கிறோம் 
-----------------------------------------------------------------------------------------------------------------------
நெல்லை கோட்டத்தில் எழுத்தர்களுக்கான CONFORMATION குறித்து நேற்று விவாதிக்கையில் இதுவரை ஏழு ஊழியர்களுக்கான சான்றிதழ்கள் முழுமையாக VERIFICATION முடிந்து வந்துள்ளது .ஆகவே முதற்கட்டமாக VERIFICATION முடிந்த தோழர்களுக்காக CONFORMATION உத்தரவிற்கான கமிட்டி அமைக்கப்பட்டு உத்தரவு வெளியிடப்படும் 
----------------------------------------------------------------------------------------------------------------------
LRPA பட்டியல் மீண்டும் இழுபறியில் இருக்கிறது .இதுகுறித்து மீண்டும் சில விளக்கங்கள் கேட்டு மண்டல அலுவலகத்திற்கு கோப்புகள் சென்றுள்ளது .
--------------------------------------------------------------------------------------------------------------------
ஆதார் பணிகளை மேற்கொள்ளும் துணை அஞ்சலகங்களில் உள்ள FURNITURE உள்ளிட்ட குறைபாடுகளை சம்பந்தப்பட்ட SPM தோழர்கள் கோட்ட நிர்வாகத்திற்கு முதலில் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம் .
-------------------------------------------------------------------------------------------------------------------
தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

களக்காடு PA தோழர் பெருமாள் அவர்களின் பணிநிறைவு விழா 
   27.04.2018 அன்று களக்காடு அருணா மகாலில் சிறப்பாக நடைபெற்றது .நிகழ்ச்சிக்கு தோழர் விக்னேஷ் அவர்கள் தலைமை தாங்கினார்கள் .திருநெல்வேலி உபகோட்ட ASP திரு .செந்தில்குமார் IPPB சீனியர் மேனேஜர் திரு .விஜய் NFPE கோட்ட  முன்னாள் தலைவர் KG.குருசாமி வண்ணமுத்து அந்தோணிசாமி இசக்கி உள்ளிட்ட முன்னனி தோழர்கள் பங்கேற்றனர் .நிகழ்ச்சிக்கு களக்காடு பத்மனேரி மாவடி டோனவூர் நான்குனேரி பகுதி ஊழியர்கள் பங்கேற்றனர் .





Friday, April 27, 2018

தோழர் பெருமாள் PA களக்காடு -பணி ஓய்வு சிறக்க வாழ்த்துக்கள் 



சிங்கிகுளம் பெருமாள் -எங்கள் 
சிந்தை நிறைந்திட்ட பெருமாள் 
களக்காடு பகுதிகளில் -NFPE இயக்கம் 
காத்திட்ட பெருமாள் 
சலனங்கள் ஏதுமின்றி -இன்றுவரை 
சந்தோசமாக தன்னை தொழிற்சங்கத்தில் 
அர்ப்பணித்த பெருமாள் 
அனைவராலும் புகழப்படுபவர் 
அதிகாரிகளாலும் மெச்சப்படுபவர் 
நம்பிக்கையின் உச்சம் தொட்டவர் -
கள்ளமில்லா சிரிப்பால் -அனைவரையும் 
கவர்ந்தவர்களில் மிச்சம் உள்ளவர் 
தங்கள் பணி ஓய்வு காலம் சிறக்க 
நெல்லை NFPE வாழ்த்துகிறது 
வணங்குகிறது !
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 

                                                        வாழ்த்துகிறோம்  
இன்று 27.04.2018 புதுமனை புகுவிழா கானும் அன்பு தம்பி M .சுந்தர் பாலசிங் தபால்காரர் மஹாராஜநகர் -திருமதி J.மல்லிகா இளவரசி ஆசிரியை இவர்களின் இல்ல  விழா சிறக்க நெல்லை NFPE வாழ்த்தி மகிழ்கிறது .
முகவரி -இளவரசி இல்லம் Stage III TNHB V.M.Chatram 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK பாட்சா 
-------------------------------------------------------------------------------------------------------------------

Thursday, April 26, 2018

அன்பார்ந்த தோழர்களே !
 நாளை 27.04.2018 மதியம் 02.30 மணிக்கு மாதாந்திர பேட்டி நடைபெறுகிறது .
----------------------------------------------------------------------------------------------------------------------
GDS கமிட்டி பரிந்துரை மீதான ஒப்புதல் இந்த வாரம் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படுமா ?என்ற ஏக்கத்தில் GDS ஊழியர்கள் இருக்கிறார்கள் .கடந்த 20.04.2018 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒன்பது விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருந்தன .
-------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்த்துக்களுடன் SK ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Wednesday, April 25, 2018

                                                        வருந்துகிறோம் 
நமது இயக்கத்தின் ஆர்வமிக்க தோழர் 
O .மூக்கையா PA மஹாராஜநகர் அவர்களது தந்தையார் ஒளிமுத்து முன்னாள் BPM (80) அவர்கள் 25.04.2018 அதிகாலை இயற்கை எய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 25.04.2018 மாலை 4 மணிக்கு வசவப்ப புரத்தில் நடைபெறுகிறது .தந்தையரை இழந்துவிடும் தோழர் மூக்கையா அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் நெல்லை NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .

தொழிற்சங்க இலக்கணம் -நூற்றாண்டை கடந்தும் வாழும் வலம் வரும் கவிதை 

தொழிலாளர் இயக்கம்
பத்தாயிரம் முறை விழும்;
எழும்; வடுபடும்; மறுபடியும்; எழும்!
அதன் குரல்வளை இறுக்கப்படும்,
உணர்வற்றுப் போகும் வரை
தொண்டை அடைக்கப்படும்;

                  நீதிமன்றம் கேள்விக்கணை தொடுக்கும்;
                  குண்டர்களால் வசைபாடப்படும்;
                  பத்திரிக்கைகளால் வசைப்பாடப்படும்;
                  பொதுமக்களின் புருவ நெரிப்பும் கூட போர் தொடுக்கும்;
                  அரசியல்வாதிகளால் ஏய்க்கப்படும்;

ஓடுகாலிகளால் மறுப்புரைகள் கூறப்படும்;
கூதாடிகளால் பலிகொடுக்கப்படும்;
உளவாளிகளின் ஒற்றறியும் நோயால் பீடிக்கப்படும்;
கோழைகளால் நடுவீதியில் விடப்படும்;
துரோகிகளால் வஞ்சிக்கப்படும்;
தலைவர்களால் கூட விற்று விடப்படும்!

                  ஓ!
                  இவ்வளவு சோதனைகள் இருந்தாலும்
                  இந்த வையகம்,
                  இதுவரை கண்டிராத
                  உன்னத சக்தி வாய்ந்தது -
                  உழைக்கும் மக்களின் இயக்கம் ஒன்றுதான்!

ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டிருக்கும்
பாட்டாளிகளை விடுதலை செய்வதே
வரலாற்றுக் கடமையாகும்;
இதன் வெற்றி சர்வ நிச்சயமே!

                  - 1904ம் ஆண்டு “தி மெட்டல் ஒர்க்கர்” பத்திரிக்கையில்
                             ஈகிள்ஸ் ஸ்டெப்ஸ் என்னும் தொழிலாளியால் எழுதப்பட்டது.

Tuesday, April 24, 2018

முக்கிய செய்திகள் 
இந்தமாத மாதாந்திர பேட்டி 27.04.2018 அன்று நடைபெறுகிறது .பேட்டியில் அஞ்சல் மூன்று சார்பாக SK .ஜேக்கப் ராஜ் G.நெல்லையப்பன் மற்றும் RV.தியாகராஜ பாண்டியன் அவர்களும் அஞ்சல்நான்கு சார்பாக தோழர்கள் SK .பாட்சா M .ஆசைத்தம்பி மற்றும் R .ஆதிநாராயணன் அவர்களும் கலந்து கொள்கிறார்கள் 
                                                 இந்தவார நிகழ்ச்சிகள் 
27.04.2018 தோழர் பெருமாள் PA களக்காடு அவர்களின் பணிநிறைவு விழா 
28.042018 தோழர் S .குமரேசன்PSD  TVL  அவர்களின் பணிநிறைவு விழா 
29.04.208 தோழர் மகாராஜன் அவர்களின் இல்ல புதுமனை விழா -திசையன்விளை 
29.04.2018 தோழியர் கௌரி GDSBPM அவர்களின் புதல்விகளின் பூப்புனித நீராட்டு விழா -கானர் பட்டி 
30.042018 தோழர் S.ஐயம்பெருமாள் மாநில உதவி தலைவர் அவர்களுக்கு பாராட்டு விழா -நாகர் கோயில் 
அனைத்து விழாக்களும் சிறக்க நெல்லை NFPE வாழ்த்துகிறது 
--------------------------------------------------------------------------------------------------------------------------

அன்பார்ந்த தோழர்களே !
 23.04.2018 அன்று நமது SSP அவர்களிடம் புதிய நிர்வாகிகள் பட்டியல் வழங்கப்பட்டது .இந்நிகழ்வில் தோழர் N .கண்ணன் செயல்தலைவர் தோழர் M .தளவாய் தலைமையிட செயலர் தோழர் S .முத்துமாலை அமைப்பு செயலர் தோழர் SK .பாட்சா கோட்ட செயலர் P 4 ஆகியோர் கலந்துகொண்டனர் .நிர்வாக தரப்பில் நமது SSP திரு .VPC அவர்களுடன் திரு வேதராஜன் ASP(OD) இருந்தார்கள் .புதிய நிர்வாகிகளை SSP அவர்கள் பாராட்டியதோடு மட்டுமல்லாமல் வரும் நாட்களிலும் நிர்வாகம் -தொழிற்சங்கம் இனைந்து பணியாற்றி ஊழியர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தார்கள் .

NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                                                                          TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-GB - dlgs dated at Tirunelvelu - 627002 the23.04.2018

To
The Senior Superintendent of Post Offices
Tirunelveli Divisional Branch
627002
Respected Sir
            Sub:     Submission of office bearers list of AIPEU Group C Tirunelveli Divisional Branch  -reg
            Ref:     This union notification dated 28.03.2018
            The 44th Divisional conference of AIPEU Group C was held at Palayamkottai HO premises on 22.04.2018.ubder the presidentship of com K.G.Gurusamy.The following office bearers were elected as unanimously.
President                                 T.Alagumuthu SPM Tirunelve;i Merku SO
Working President                 N.Kannan APM (G) officiating Palayamkottai
Vice President                          T.Sudalaiyandi SPM Vallioor perundunilaiyam
                                                   S.Avodainayagam SPM Tondarbazar
Secretary                                   S.K.Jacobraj LSG PA CPC Tirunelveli HO
Asst.Secretaries                       M.Thalavai PA Palayamkottai
                                                  V.S.Krishnan LSG Treasurer Vallioor
                                                  A.Subramanian PA Palayamkottai
                                                 S.Parathan Thirumavalan PA Melapalayam
                                                 V.Saravanan PA Palayamkottai
Finance Secrectray                       G.Sivakumar PA Manur
Asst Finance Secretary                 G.Nellaiappan LSG TR Maharajanagar
Organising Secretaries                S. .Muthumalai PA Palayamkottai
                                                       T.Gopalan PA Kalakadu
                                                      M.Haji Ali ME Palayamkottai    
                                   
           

                                          Thanking you
           

                         Yours faithfully


[S.K.JACOBRAJ]


Monday, April 23, 2018

நன்றி நன்றி நன்றி 
நெல்லை அஞ்சல் மூன்றின் 44 வது கோட்ட மாநாடு மிக சிறப்பாக நடைபெற்றது மாநில தலைவர் தோழர் M .செல்வ கிருஷ்ணன் அவர்கள் நமது சம்மேளன கொடியை ஏற்றிவைத்தார்கள் .முதல் நிகழ்ச்சியாக தோழர் புஷ்பாகரன் அவர்களின் புதல்வி செல்வி திவ்ய பாரதி அவர்களின் பரதநாட்டியம் தோழர் பரதன் அவர்களின் புதல்வர் கலைஞர் TV புகழ் தினேஷ் ராஜா அவர்களின் வரவேற்பு நடனம் திருமதி பாப்பா APM  அவர்களின் பேத்தி அவர்களின் பேச்சு மற்றும் மகிளா கமிட்டி சார்பாக குறுநாடகம் என ஆட்டம் பட்டம் என அமர்க்களமாய் தொடங்கியது நம் மாநாடு .மாநாட்டில் புதிய நிர்வாகிகள் அனைவரும் வழக்கம் போலவே ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர் .தலைவராக தோழர் T .அழகுமுத்து செயல்தலைவராக தோழர் N .கண்ணன் செயலராக தோழர் SK .ஜேக்கப் ராஜ் நிதிச்செயலராக தோழர் G.சிவகுமார் அகியோர்களும் மகிளா கமிட்டி தலைவராக தோழியர் A.பசுமதி APM ACS கன்வீனராக தோழியர் S .முத்துபேட்சியம்மாள் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர் .அதன்பின் நடந்த பொது அரங்கில் தோழர் P.சேர்முக பாண்டியன் மாநிலத்தலைவர் தோழர் M.செல்வகிருஷ்ணன் மாநில உதவி தலைவர் தோழர் S.அய்யம் பெருமாள் மாநில டெக்னாலஜி பிரிவு உறுப்பினர் தோழர் P.சங்கர நாராயணன் தோழர் தியாகராஜ பாண்டியன்P3 செல்வபாரதி SBCO அம்பை  ஆதிநாராயணன் P4 அம்பை தூத்துக்குடி முன்னணி தோழர்கள் நாகலிங்கம் பொன்ராம் குமார் சங்கரசுப்பு  சீனிவாச சொக்கலிங்கம் தலைவர் P4ஆகியோர் உரையாற்றனர் .இறுதியாக நன்றி உரையாக தோழர் C .வண்ணமுத்து அவர்களின் சிறப்பான உரையோடு நம் மாநாடு நிறைவுற்றது .மாநாட்டு பணிகளை எங்களோடு இனைந்து பணியாற்றிய அனைத்து அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு GDS தோழர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .நெல்லை கோட்ட மாநாடு குறித்து பரவலாக மாநிலம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்களை தெரிவித்த நமது அஞ்சல் மூன்றின் கோட்ட கிளை செயலர்களுக்கும் முன்னாள் இன்னாள் மாநில சங்க நிர்வாகிகளுக்கும் முன்னணி தளபதிகளுக்கும்  எனது நெஞ்சார்ந்த நன்றிதனை தெரிவித்து கொள்கிறேன் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

                                                   நன்றி நன்றி நன்றி 
நெல்லை அஞ்சல் மூன்றின் 44 வது கோட்ட மாநாடு மிக சிறப்பாக நடைபெற்றது மாநில தலைவர் தோழர் M .செல்வ கிருஷ்ணன் அவர்கள் நமது சம்மேளன கொடியை ஏற்றிவைத்தார்கள் .முதல் நிகழ்ச்சியாக தோழர் புஷ்பாகரன் அவர்களின் புதல்வி செல்வி திவ்ய பாரதி அவர்களின் பரதநாட்டியம் தோழர் பரதன் அவர்களின் புதல்வர் கலைஞர் TV புகழ் தினேஷ் ராஜா அவர்களின் வரவேற்பு நடனம் திருமதி பாப்பா APM  அவர்களின் பேத்தி அவர்களின் பேச்சு மற்றும் மகிளா கமிட்டி சார்பாக குறுநாடகம் என ஆட்டம் பட்டம் என அமர்க்களமாய் தொடங்கியது நம் மாநாடு .மாநாட்டில் புதிய நிர்வாகிகள் அனைவரும் வழக்கம் போலவே ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர் .தலைவராக தோழர் T .அழகுமுத்து செயல்தலைவராக தோழர் N .கண்ணன் செயலராக தோழர் SK .ஜேக்கப் ராஜ் நிதிச்செயலராக தோழர் G.சிவகுமார் அகியோர்களும் மகிளா கமிட்டி தலைவராக தோழியர் A.பசுமதி APM ACS கன்வீனராக தோழியர் S .முத்துபேட்சியம்மாள் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர் .அதன்பின் நடந்த பொது அரங்கில் தோழர் P.சேர்முக பாண்டியன் மாநிலத்தலைவர் தோழர் M.செல்வகிருஷ்ணன் மாநில உதவி தலைவர் தோழர் S.அய்யம் பெருமாள் மாநில டெக்னாலஜி பிரிவு உறுப்பினர் தோழர் P.சங்கர நாராயணன் தோழர் தியாகராஜ பாண்டியன்P3 செல்வபாரதி SBCO அம்பை  ஆதிநாராயணன் P4 அம்பை தூத்துக்குடி முன்னணி தோழர்கள் நாகலிங்கம் பொன்ராம் குமார் சங்கரசுப்பு  சீனிவாச சொக்கலிங்கம் தலைவர் P4ஆகியோர் உரையாற்றனர் .இறுதியாக நன்றி உரையாக தோழர் C .வண்ணமுத்து அவர்களின் சிறப்பான உரையோடு நம் மாநாடு நிறைவுற்றது .மாநாட்டு பணிகளை எங்களோடு இனைந்து பணியாற்றிய அனைத்து அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு GDS தோழர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 










Saturday, April 21, 2018

அன்பார்ந்த தோழர்களே !
                   நெல்லை கோட்ட மாநாடு 22.04.2018 -சிறப்புகள்
 ஏப்ரல் 22 ம் தேதி நமது கோட்ட மாநாடு என்று அறிவித்தவுடன் ஒரு மூத்த தோழர் எனக்கு வாழ்த்து தெரிவித்து மிக சரியான நாளை தான் நீங்கள் தேர்வு செய்திருக்கிறீர்கள் என்றார் .நமது கோட்ட தோழர்கள் ஏப்ரல் 22 ஞாயிறு ஏகப்பட்ட திருமணங்கள் இருக்கிறேதே என்று சொல்லிக்கொண்டிருக்கையில் தோழரின் ஏப்ரல் 22 குறித்து மேலும் வினவினேன் .அவர் மிக பூரிப்போடும் பெருமையோடும் சொன்னார் ஏப்ரல் 22 தோழர் லெலின் அவர்களின் பிறந்த நாள் என்று .ஒரு மாபெரும் புரட்சியாளனின் பிறந்த நாளில் நெல்லையில் அஞ்சல் ஊழியர்களாகிய நாம் ஒன்று சேர்வதும் -இன்றைய தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து நாம் போராட்ட திட்டங்களையும் உத்திகளையும் வடித்தெடுக்க வாய்ப்பு கிடைத்ததை நினைத்து நான் மகிழ்க்கிறேன் .திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் நம் மாநாடு துவங்கும் .நிர்வாகம் தரவேண்டிய வழிகாட்டி குறிப்புகளான CSI கையேடுகளை நாம் கொடுக்கிறோம் .பணிபுரிவதும் நெட் கிடைக்காமல் பரிதவிப்பதும் நாம் தானே !
நமது அஞ்சல் குடும்ப செல்வங்களின் பரத நாட்டியம் -மற்றும் நடனம் -தோழியர்கள் சிந்தையை குளிர்விக்கும் குறுநாடகம் -பல்வேறு தரப்பட்ட தலைவர்களின் உரைவீச்சு -வடித்தெடுக்கப்படும் தீர்மானங்கள் என புது செய்தியை சொல்லபோகும் நெல்லை மாநாடு -நமது மாநாடு வெற்றிபெற பங்கேற்பீர் ! பங்கேற்பீர் !
மாநாட்டு வாழ்த்துக்களுடன் SK .கோட்ட செயலர் நெல்லை 

Friday, April 20, 2018

                                             வருந்துகிறோம் 
நெல்லை அஞ்சல் நான்கின் முன்னணி தோழர் P .டால்வி முத்துச்செழியன் (59) தபால்காரர் பாளையம்கோட்டை அவர்கள் (தோழர் சாய்பாபா  PA  தென் சென்னை கோட்டம்  அவர்களின் உடன்பிறந்த சகோதரர் )உடல்நலக்குறைவால் இன்று 20.04.2018 மாலை இயற்கை எய்தினார்கள் என்பதனை மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் .(அவர்களது இல்லம் மகிழ்ச்சிநகர் ரெட்டியார்பட்டி அருகில் ) தோழரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு நெல்லை NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது .நெல்லை NFPE 

Wednesday, April 18, 2018

அன்பார்ந்த தோழர்களே !
  RICT ஏற்கனேவே DARPAN (Digital Advancement Of Rural Post Office For A New India )என்ற  பெயர் மாற்றத்துடன் செயல்பட்டுக்கொண்டிருந்தது .இதுவரை Finacle மட்டுமே பயன்பாட்டிற்கு இருந்துவந்தது .இனிமேல் PLI &RPLI பணிகளும் மேற்கொள்ளலாம் .இந்த புதிய பயன்பாட்டை நமது துறை அமைச்சர் மாண்புமிகு மனோஜ் சின்கா நேற்று தொடங்கிவைத்தார்கள் .இனி கிளை அஞ்சலகங்களில் After sale service சம்பந்தமான பணிகளை செய்யலாம் .
------------------------------------------------------------------------------------------------------------------------
கிட்டத்தட்ட 15 நாள் இடைவெளிக்கு பிறகு நமது கண்காணிப்பாளர் அவர்கள் இன்று பணியில் சேருகிறார்கள் .வருகிற 20.04.2018 அன்று கண்காணிப்பாளர் அவர்களுடன் தேங்கிக்கிடக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இருக்கிறோம் .வேறு விஷயங்கள் கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுடன் பேச வேண்டியதிருந்தால் தகவல்களை தெரிவிக்கவும் .
---------------------------------------------------------------------------------------------------------------------
சென்னையில் 17.04.2018 முதல் 19.04.2018 வரை GDS கமிட்டிக்காக நடைபெறும் தர்ணா போராட்டத்தில் தென்மண்டலத்திற்கு 19.04.2018 அன்று ஒதுக்கப்பட்டுள்ளது .நமது கோட்டத்தில் இருந்து 4 தோழர்கள் பங்கேற்கிறார்கள் .
------------------------------------------------------------------------------------------------------------------------
நமது கோட்ட மாநாடு சிறக்க வாழ்த்துக்களை மாநிலச்சங்க Whatsapp மூலம் தெரிவித்த மாநிலசெயலர் தோழர் JR அவர்களுக்கு நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் 
--------------------------------------------------------------------------------------------------------------------
நமது NELLAI NFPE Whatsapp யில் அரசியல் பதிவுகள் வேண்டாம் என்று பலமுறை சொன்ன பிறகும் கூட சில தோழர்கள் தெரிந்தோ தெரியாமலோ பதிவிடுகிறார்கள் .நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்வதெல்லாம் முதலில் நாம் ஒரு அரசு ஊழியர் .அரசு ஊழியருக்கான நன்னடத்தை விதிகள் நம்மை கட்டுப்படுத்தும் ..அரசியல் குறித்து Maintain Political Neutrality என்று CCS வீதிகளிலும் தெளிவாக இருக்கிறது .அரசை விமர்சிக்கும் உரிமைகூட சில கட்டுப்பாட்டுடன் தான் இருக்கிறது .தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் .
நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
---------------------------------------------------------------------------------------------------------------
                                  
       

Tuesday, April 17, 2018

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                                 22.04.2018 கோட்ட மாநாட்டிற்கு தயாராகுவீர் 
உங்கள் அனைவருக்கும் நமது மாநாட்டு அழைப்பிதழ் இன்று கிடைத்திருக்கும் .நிகழ்ச்சிநிரல் படி திட்டமிட்டபடி மாநாடு சரியாக காலை 10 மணிக்கு தொடங்கும் .கூடுதலாக நமது நிகழ்ச்சியில் அஞ்சல் நான்கின் கோட்ட உதவி செயலர் தோழர் புஷ்பாகரன் அவர்களின் புதல்வி செல்வி .திவ்யபாரதி அவர்களின் பரத நாட்டியமும் இடம்பெறுகிறது .மேலும் நம் அஞ்சல் குடும்ப குழந்தைகளின் தனித்துவமான நிகழ்ச்சிகள் நடத்த விரும்பினால் தாராளமாக வரலாம் .அதற்கான நேரங்கள் ஒதுக்கி தரப்படும் .
விடுபட்ட அலுவலகங்களுக்கு இன்று 17.04.2018 அன்று நமது நிர்வாகிகள் நன்கொடை பிரிக்க வருவார்கள் .---------
--------------------------------------------------------------------------------------------------------------------------
   சுழல் மாறுதலுக்கான விண்ணப்பங்களை அனுப்புகிறவர்கள் 18.04.2018 குள் கோட்ட அலுவலகத்திற்கு கிடைக்கும் படி அனுப்பிவைக்கவும் .
-------------------------------------------------------------------------------------------------------------------------
குரூப் D யில் இருந்து நேரடியாக எழுத்தர் தேர்வான ஊழியர்களுக்கு எழுத்தரில் ஆரம்ப ஊதியம்            நிர்ணயிக்க வேண்டும் -என     பெங்களூரு நிர்வாயக  தீர்ப்பை  சுட்டி காட்டி DOP    
F.No. 2-15/2016-PAP dated 13.04.2018 உத்தரவு பிறப்பித்துள்ளது .இதே போல் தபால் காரர் தோழர்களும்2006 க்கு பிறகு  எழுத்தராக தேர்ச்சி பெற்ற தோழர்களுக்கு  எழுத் தருக்கான ஆரம்ப   ஊதியம் வழங்கப்படவில்லை .பல கோட்ட்டங்களில் Stepping up மூலம்அவர்கள் சுட்டிக்காட்டிய ஜூனியர் ஊதியத்தின் அடிப்படையில்  நிவிர்த்தி செய்யப்பட்டது .     ஆனால் இந்த புதிய உத்தரவின் மூலம் 01.012006 பிறகு பதவி உயர்வு பெற்ற ஊழியர்களுக்கும் ஆரம்ப நிலை ஊதியம் 5200-20200+ GP 2400    நிர்ணயிக்க பட்டால் இன்னும் பல தோழர்களுக்கு மேலும் ஒரு நிலை ஊதிய   உயர்வுக்கு வாய்ப்புகள் இருக்கும் .இது குறித்து இன்று நமது வழக்கறிஞர் திரு .மலைச்சாமி அவர்களைசென்னையில்  நேரில் சந்திக்க நமது தோழர் ஐசக் பால் பாண்டியனிடம் தெரிவித்துள்ளோம் .
மேலும் இதுகுறித்த தகவல்கள் இருந்தால் தோழர்கள் தெரிவிக்கும் படி கேட்டு கொள்கிறோம் .
தோழமையுடன்SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
    

Monday, April 16, 2018

தோழர் தா .கிருஷ்ணன் RMS திருநெல்வேலி அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா 15.04.2018 அன்று பாளை சுபம் திருமண மண்டபத்தில் தோழர் P .சேர்முகபாண்டியன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .விழாவில் அகிலஇந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவர் தோழர் பொன்னீலன் -R 3 முன்னாள் மாநிலசெயலர்கள் M கண்ணையன் -K .சங்கரன் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர் .தோழர் கிருஷ்ணன் அவர்களின் சமூக -இலக்கிய பணிகள் தொடர வாழ்த்துக்கள் .




நமது மத்திய சங்கத்தின் மூன்றாம் கட்ட போராட்டம் 
25.04.2018 அன்று அனைத்து CPMG அலுவலகம் முன்பு தர்ணா 
                                 கோரிக்கைகள் 
1.எழுத்தர் பகுதியிலுள்ள அனைத்து காலி பணியிடங்களை நிரப்பிடவேண்டும் 
2.HSGI &HSGII பதவிகளை நியமன விதிகளை தளர்த்தி நிரப்பிட வேண்டும் 
3.RICT அமுலுக்கு பின்னரே CSI அமுல்படுத்த வேண்டும் 
   4. தொழிற்சங்க பழிவாங்கல் -பணி பங்களிப்பில் அலட்சியம் என்பதனை காரணம் காட்டி பழிவாங்கல் கூடாது 
5.அவுட் சோர்சிங் -ஒப்பந்த அடிப்படையில் பணியாட்கள் -தனியார் அனுமதி நிறுத்தப்பட வேண்டும் .
 உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி சென்னையில் நடைபெறும் 25.04.2018 நடைபெறும் தர்ணாவில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் கோட்ட செயலரை தொடர்பு கொள்ளவும் .
-----------------------------------------------------------------------------------------------------------------------
நமது கோட்ட மாநாட்டிற்க்கான நன்கொடைகளை விடுபட்ட பகுதிகளில் பிரிக்க நாளை நமது நிர்வாகிகள் வருகிறார்கள் 
---------------------------------------------------------------------------------------------------------------------
மாநாட்டு வாழ்த்துக்களுடன் SK.ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 
S


5.

Friday, April 13, 2018

         அன்பார்ந்த தோழர்களே !
நமது கோட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம் கோட்ட தலைவர் தோழர் KG.குருசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது .ஈராண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது .சென்ற ஆண்டைப்போல இந்த மாநாட்டிலும் வரவேற்பு நடனமாக நமது கோட்ட உதவி செயலர் தோழர் பரதன் அவர்களின் புதல்வன் அவர்களின் சிறப்பு நடனமும்தோழியர்களின் குறு நாடகமும்  இடம்பெறுகிறது .தீர்மானங்கள் வடிப்பது இளைய தோழர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .மாநாடு திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் தொடங்கும் .அழைப்பிதழ் இன்று வெளியிடப்படுகிறது ஆகவே தோழர்கள் /தோழியர்கள் குறிப்பிட்ட நேரத்தில் கலந்து கொள்ள கேட்டு கொள்கிறோம் .சுழல் மாறுதல் குறித்தும் தோழர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது .நன்றி .மாநாட்டு வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 






Thursday, April 12, 2018

                                           முக்கிய செய்திகள் 
போஸ்ட்மாஸ்டர் கிரேடு II பதவி உயர்வுகள் தமிழகத்தில் 27 தோழர்களுக்கு வந்துள்ளன .நமது கோட்டத்தில் மஹாராஜநகர் போஸ்ட்மாஸ்டர் திருமதி T ..K .மீனா கோமதி அவர்களும் தோழர் C .சந்துரு அவர்களும் பதவி உயர்வு பெறுகிறார்கள் .தோழர்கள் இருவரையும் நெல்லை NFPE வாழ்த்துகிறது 
--------------------------------------------------------------------------------------------------------------------------NPS  விஷயத்தில் சில நல்ல மாற்றங்கள் இருக்கும் என்று தோழர் சிவகோபால் மிஸ்ரா (செயலர் NJCM ஊழியர் தரப்பு ) அவர்கள் 10.04.2018 அன்று கேபினெட் செயலரை சந்தித்தபின் தெரிவித்தார் 

Today, i.e. on 10th April, 2018, met the Cabinet Secretary, Government of India, and handed him over a copy of the enclosed letter.

He said that, the issue of the NPS is under finalization and Secretary(Pension), Government of India, had very recently given presentation. He further said that, there would be some visible changes in the NPS.
-----------------------------------------------------------------------------------------------------------------------
நெல்லையில் OFFICIATING பார்க்கின்ற GDS ஊழியர்களுக்கு இந்தமாதம் ஏற்பட்ட காலதாமதத்தை போக்கும் வகையில் நேற்று ASP (HQS ) அவர்களே அனைத்து BILL களையும் SANCTION செய்து அனுப்பிவிட்டார்கள் .GDS ஊழியர்களின் ம(ப )ண நிலையை கருத்தில் கொண்டு செயல்பட்ட ASP (HQS ) அவர்களுக்கு எங்கள் நன்றிகள் 
-----------------------------------------------------------------------------------------------------------------------
வருகிற 14.04.2018 சனிக்கிழமை DR.B.R. அம்பேத்கார் அவர்களின் 
பிறந்தநாளை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது CPMG அலுவலக கடிதம் 09.04.2018  இதை அஞ்சல் பகுதிக்கும் பொருந்தும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது .
----------------------------------------------------------------------------------------------------------------------
இன்று 12.04.2018 நமதுஅஞ்சல் மூன்றின்  கோட்ட செயற்குழு திருநெல்வேலி HO வில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது 
------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா 

Wednesday, April 11, 2018

அன்பார்ந்த தோழர்களே !
  நமது கோட்ட மாநாடு 22.04.2018 அன்று நடைபெறுகிறது என்பதை தாங்கள் அறிந்ததே .மாநாட்டில் நமது உறுப்பினர்களுக்கு CSI கையேடு ஒன்று வழங்கப்படுகிறது .மாநாட்டிற்கு நன்கொடை ரூபாய் 200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது .மூன்று நாட்கள் விடுப்பெடுத்து சுமார் 147 தோழர்களிடம் நன்கொடை பிரித்திருக்கிறோம் .விடுபட்ட தோழர்களிடம் அடுத்த வாரம் நேரிடையாக சந்திக்க இருக்கிறோம் .விடுபட்ட  தோழர்கள் நன்கொடைகளை அனுப்ப விரும்பினால் POSB 0072772744 (ஜேக்கப் ராஜ் ) என்ற கணக்கிற்கு அனுப்பிவிட்டு கோட்ட செயலருக்கு தகவல் தெரிவிக்கவும் .
 நாளை 12.04.2018 நடைபெறும் செயற்குழுவிற்கு செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமல்ல RT சம்பந்தமாக விளக்கங்கள் கேட்கின்ற தோழர்களும் பங்கேற்கலாம் .
நன்றி .மாநாட்டு வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

                                                       வாழ்த்துக்கள் 
  PSS Group B தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன .IP பகுதியில் தமிழகத்தில் மொத்தம் 17 பேரும்  பொது பிரிவில் 7 தோழர்களும்  தேர்வாகியுள்ளனர் ..அதில் குறிப்பாக நமது கோட்ட ASP (HQS ) திரு .பொன்னையா அவர்கள் தேர்வாகி இருப்பது நமக்கும் நமது கோட்டத்திற்கும் பெருமை .RMS பகுதியில் SA ஆக பணியில் சேர்ந்து படிப்படியாக IP ASP என்று பல நிலைகளில் விரைவாக உயர்ந்தவர் .அவர் இன்று SP அந்தஸ்திற்கு உயர்ந்திருக்கிறார் .அவரது பனிக்காலங்களில் மென்மேலும் சிறக்க -இன்னும் உயர்பதவிகளில் செல்ல நெல்லை NFPE வாழ்த்துகிறது .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
----------------------------------------------------------------------------------------------------------------------

Monday, April 9, 2018

அன்பார்ந்த தோழர்களே !
  AAO தேர்விற்கான பாடத்திட்டங்கள் வந்துவிட்டன .இனி தேர்வு குறித்த அறிவிப்புகள் வர இருக்கின்றன .கிட்டத்தட்ட அகிலஇந்திய அளவில் 940 பதவிகள் இருக்கின்றன .இது அஞ்சல் பகுதியில் உள்ள இளைய தோழர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் .ஆனால் இங்கும் சில மாநிலங்களில் இதற்கு எதிராக ஆடிட் பிரிவு ஊழியர்களே இந்த தேர்வை எதிர்த்து வழக்கு போட்டிருப்பதாகவும் அவர்களுக்கு கூடுதலாக இடங்களை ஒதுக்கி தரவேண்டும் என்றும் நீதி மன்றத்தை அணுகியிருக்கிறார்கள் ..ஒருவேளை வழக்கு நமது தோழர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் தேர்விற்கு தகுதியுள்ள தோழர்கள் அதே வழக்கில் தங்களையும் இணைத்துக்கொண்டு வழக்கை வென்றெடுப்போம் .நீண்ட நாட்களுக்கு பிறகுஅஞ்சல் பகுதியில்  இளைய தோழர்களுக்கு கிடக்குத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்த வழிகாட்டுவோம்
 .தோழர்களின் வளர்ச்சிகளுக்கு ஒளி ஏற்றுவோம் .
---------------------------------------------------------------------------------------------------------------------
  நெல்லை RMS யின் துடிப்புமிக்க தோழர் T.கிருஷ்ணன் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா 15.04.2018 ஞாயிறு பாளை சுபம் மண்டபத்தில் நடைபெறுகிறது .பல மூத்த RMSபகுதி தலைவர்கள் பங்கேற்கிறார்கள் .நமது தோழர்களுக்கும் அழைப்பு வந்து கொண்டிருக்கிறது .அவர் சார்பாக நமது நண்பர்களை நெல்லை NFPE அழைக்கிறது 
--------------------------------------------------------------------------------------------------------------------
நமது கோட்ட சங்க செயற்குழு 12.04.2018 அன்று நடைபெறுகிறது .RT முடித்தவர்கள் தங்களுக்கு ஏதேனும் ஆலோசனைகள் தேவைப்பட்டால் செயற்குழுவிற்கு வரலாம் அல்லது கோட்ட சங்கத்தை தொடர்புகொள்ளலாம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

                                               முக்கிய செய்திகள் 
CCL குறித்து மேலும் சில சலுகைகளை அரசு அறிவித்துள்ளது .தோழியர்கள் CCL நாட்களிலும் LTC செல்லலாம் உள்ளிட்ட புது சலுகைகளை 03.04.2018 அன்று DOPT வெளியிட்டுள்ளது .
---------------------------------------------------------------------------------------------------------------------
IPPB கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள் வந்துள்ளன .
3.5 சதம் ஒவ்வொரு காலாண்டிற்கும் கூட்டுவட்டியாக கணக்கிடப்படும் .குறிப்பாக கிராம புறங்களில் வங்கி சேவைதனை IPPB மூலம் செயல்படுத்த அரசுஎடுத்திருக்கும்  பெரும் முயற்சியாக பார்க்கப்படுகிறது .நகர் பகுதிகளில் வங்கிகளுடன் நாம் போட்டியிட முடியாது என்ற எதார்த்தத்தை உணர்ந்து இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன .நகர் பகுதிகளிலும் Net Banking -Fund Transfer போன்றவைகளை பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் நமது ஊழியர்களுக்கும் இது ஒரு வகையில் பயன்தரும் .எல்லா அலுவலகங்களிலும் IPPB கிளை செயல்படும் .இதை பயன்படுத்தி BO களின் வேலைநேரத்தை  8 மணி நேரமாக மாற்ற வேண்டும் என்றும் ஊக்கத்தொகைக்கு பதிலாக GDS ஊழியர்களுக்கு வேலை நேரத்தில் இதை கணக்கில் கொள்ளவேண்டும் என்ற புதிய பார்வையில் நமது அகிலஇந்திய சங்கங்கள் செயல்பட்டால் GDS எதிர்காலங்கள் சிறப்புடன் அமையும் .
--------------------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா 
கோட்ட செயலர்கள்  நெல்லை 

தோழர் S .சேர்முகபாண்டியன் Accounts officer அவர்களுக்கு 08.04.2018 ஞாயிறு அன்று சிவகங்கையில் நடைபெற்ற பாராட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது ..தோழர் ராஜேந்திரன் அவர்கள் தலைமைதாங்கினார்கள் சிவகங்கை கோட்டத்தின் பிதாமகன் என்றழைக்கப்படும் தோழர் KR  தோழர்கள் ஆதிமூலம் CPI முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் S .குணசேகரன் உள்ளிட்ட சிவகங்கை நகரின் அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்தனர் .தோழர் பாண்டியனின் ஓய்வு காலங்கள் இனி தொழிற்சங்கங்களுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்ற தோழர்களின் கோரிக்கைகளை இன்முகத்தோடு ஏற்று கொண்டார் .வாழ்க தோழர் பாண்டியன் 



Saturday, April 7, 2018

                                                       வருந்துகிறோம் 
நமது NFPE இயக்கத்தின் முன்னணி தோழர் சிவஞானம் SPM பேட்டை கிழக்கு அவர்களின் தந்தையார்
 திரு .சோமசுந்தரம் (87) அவர்கள் 06.04.2018 மாலை 6.30 மணியளவில் இயற்கை ஏய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 07.04.2018 மாலை 4 மணியளவில் NGO B காலனி மெயின் ரோட்டில் உள்ள மைதானத்தில் தகனம் செய்ய படுகிறது .தந்தையை இழந்து வாடும் தோழர் தம் குடும்பத்தினருக்கு நெல்லை NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .
------------------------------------------------  NELLAI NFPE -----------

                                              சுழல் மாறுதல் -2018
இந்த ஆண்டிற்க்கான சுழல் மாறுதல் அறிவிப்புகள் வந்துவிட்டன .நமது கோட்டத்தில் PA கேடரில் 54 ஊழியர்கள் இதில் உள்ளனர் .
1.இதில் விடுதல் /சேர்த்தல் இருந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் கோட்ட நிர்வாகத்திற்கு 10.04.2018 குள் தெரிவிக்கவும்
2.extension வேண்டுவோர்   மண்டல அலுவகத்திற்கு கோட்ட அலுவலகம் வாயிலாக 12.04.2018 குள் அனுப்பவும் .
extension என்பது DPS அவர்களால் ஓராண்டிற்கு வழங்கப்படும் .உடல் நலக்குறைவு அல்லது ஓய்விற்கு ஓராண்டு காலத்திற்குள் இருப்பவர்களுக்கு இந்த நீட்டிப்பு வழங்கப்படுகிறது .
3.மற்றவர்கள் விண்ணப்பிக்க கடைசிதேதி 18.4.2018 Tenure முடிந்தவர்கள் கோட்ட அலுவலகம் அனுப்பியுள்ள proforma  விலும் Tenure முடிக்காதவர்கள் தனி கடிதத்திலும் தகுந்த காரணங்களை விளக்கி விண்ணப்பிக்கவும்
 4..LSG பதவிகளில் (C &B )பணிபுரிய விரும்புவோர் ரூபாய் 2800 தகுதி ஊதியம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் .இது கேடர் இரண்டாவது பட்டியலில் LSG ஊழியர்கள் பணியமர்த்தும் வரை அனுமதிக்கப்படுவார்கள் என ஏனைய கோட்ட அறிவிப்பில் தெளிவாக இருக்கிறது .
                                            கோட்ட சங்க செயற்குழு 
நாள் 12.04.2018    மாலை 6 மணி 
இடம் திருநெல்வேலி HO 
தலைமை .தோழர் KG.குருசாமி அவர்கள் 
பொருள் 
1.ஈராண்டறிக்கை சமர்ப்பித்தலும் -ஒப்புதலும் 
2.தணிக்கை செய்யப்பட்ட வரவு -செலவு அறிக்கை சமர்ப்பித்தலும் -ஒப்புதலும் (2016-2017 &2017-2018)
3.சுழல் மாறுதல் --கேடேர் சீரமைப்பு இன்றைய நிலை குறித்த அறிக்கை 
4.இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )
              செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சுழல் மாறுதலில் உள்ளவர்கள் கலந்து கொண்டு தங்களின் மேலான ஆலோசனைகளை தெரிவிக்கும் படி கேட்டு கொள்கிறோம் .
--------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு Accounts Cadre பதவிகளில்  Assistant Accounts Officer, பதவிக்கு தேர்வெழுத  நமது கோட்டத்தில் பல தோழர்கள் ஆர்வம் காட்டி வருவது பாராட்டுதலுக்குரியது .நமது மாநாட்டில் கலந்துகொள்ளும் தோழர் சேர்முகபாண்டியன் (Sr.Accounts Officer ஆக இருந்து ஓய்வு பெற்றவர்) .அவர் இளைய தோழர்களுக்கு இது குறித்து வழிகாட்டுதல்களை வழங்குவார்கள் .
         நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Thursday, April 5, 2018

                                           முக்கிய செய்திகள் 
1.கேடேர் சீரமைப்பு இரண்டாவது பட்டியல் வெளியாகும் வரை தமிழகத்தில் RT -2018 யை நிறுத்திவைக்கவேண்டும் என்ற நமது மாநிலச்சங்க கோரிக்கையை மாநில நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை .பல கோட்டங்களில் RT அறிவிப்புகள் வர தொடங்கிவிட்டன .
2.IPPB செயல்படத்தொடங்கினால் தபால்காரருக்கான வேலைநேரம் என்ன ?பணிகள் என்ன ? என்ற சந்தேகத்தை தோழர் அரிகிருஷ்ணன் தபால் காரர் VK புரம் அவர்கள் கேட்டிருந்தார்கள் .
தபால்காரருக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் .அதன் மூலம் அவர்கள் BANKING சர்வீஸ் செய்திடவேண்டும் .இதற்காக மைக்ரோ சிம் அந்த போஸ்ட்மேன் APP உடன் கொடுக்கப்படும் .இரேகை மிசினும் மினி ப்ரின்டரும் இணைந்திருக்கும் .இதற்காக டெலிவரி ஸ்டாப் களுக்கு இன்சென்டிவ் மட்டும் பெயரளவில் வழங்கப்படும் ..
3.GDS கமிட்டிக்கு நிதியமைச்சகம் ஒப்புதல் கொடுத்துவிட்டது .கடைசி கட்டமாக அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது .அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு அமுலாக்க உத்தரவு அஞ்சல் வாரியத்தால் வெளியிடப்படும் .
4.திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் அவர்களிடம் நேற்று எழுத்துபூர்வமான வாக்குமூலங்கள் ASP  (PLCSUBDN ) மூலம் பெறப்பட்டுள்ளது .விசாரணை தொடர்கிறது ..............
5.நமது கோட்டத்தில் ஆதார் பதிவிற்கான உபகரணங்கள் அடையாளம்காட்டப்பட்ட 46 அலுவலகங்களுக்கு வந்துவிட்டன .
ஆனால் இந்த சாதனங்களை வைக்க தனி மேஜை இல்லை -பொதுமக்கள் வந்து அமர நாற்காலிகள் இல்லை .ஆகவே அந்தந்த SPM தோழர்கள் தங்கள் அலுவலக நிலை குறித்தும் தேவைப்படும் FURNITURE குறித்தும் கோட்ட அலுவலகத்திற்கு கடிதம் மூலம் தெரிய படுத்துங்கள் .
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Wednesday, April 4, 2018

            அன்பார்ந்த தோழர்களே ! திருநெல்வேலி தலைமை அஞ்சல் அதிகாரியின் பாரபட்ச போக்கை கண்டித்து நாம் நடத்திய போராட்ட அறிவிப்பின் எதிரொலியாக நேற்றே (03.04.2018 ) பாளையம்கோட்டை ASP அவர்களை விசாரணைக்கு அனுப்பிய கோட்ட நிர்வாகத்திற்கு நன்றி !
மாலை 4.30 மணிக்கு திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் அறையிலேயே  ASP அவர்கள் போஸ்ட்மாஸ்டரிடம் விசாரணை தொடங்கினார்கள் .ஆனாலும் அறிவித்தபடி நமது ஆர்ப்பாட்டமும் திருநெல்வேலி HO முன்பு நடைபெற்றது .ஒருபக்கம் போஸ்ட்மாஸ்டர் ASP யிடம் சாட்சியம் அளித்துக்கொண்டிருக்க மறுபக்கம் நமது ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது வரலாற்று சிறப்புமிக்க ஒரு வெற்றியாகவே பார்க்கப்பட்டது .நேற்றைய விசாரணையின் முடிவில் போஸ்ட்மாஸ்டர் திருநெல்வேலியில் பணியாற்றிய நாள்முதல் நேற்றுவரையிலான ORDERBOOK -DEPUTATION TURN REGISTER ஆகியவைகள் நகல் எடுத்து செல்லப்பட்டது .இறுதியாக இரவு கோட்டசெயலர் என்ற முறையில் என்னிடமும் நாம் கொடுத்த புகார்  கடிதத்தின் அடிப்படையில் சில விளக்கங்கள் கேட்கப்பட்டது .நானும் ASP அலுவலகம் சென்று டெபுடேஷன் விஷயத்தில் நடக்கும் முறைகேடுகளை விளக்கமாக சொல்லியிருக்கிறேன் .இன்றும் விசாரணை தொடர்கிறது .ஊழியர்களின் மனநிலையை புரிந்துகொண்டு  நமது ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாகவே விசாரணைக்கு உத்தரவிட்ட நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கு நெல்லை NFPE சார்பாக நன்றிதனை தெரிவித்துக்கொள்கிறோம் .விசாரணையின் அடிப்படையில் போஸ்ட்மாஸ்டர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் டெபுடேஷன் விஷயத்தில் சீரான அணுகுமுறைக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு சிலமணிநேரங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் எங்கள் நன்றிதனை தெரிவித்து கொள்கிறோம் .நேற்றைய சிறப்பு நமது ஆர்ப்பாட்ட செய்திகளை தினகரன் -தினமலர் -தினத்தந்தி -தினமணி நாளேடுகள் வெளியிட்டிருந்தது நமக்கு மேலும் ஒரு வெற்றியாகும் .






தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 

Tuesday, April 3, 2018

                                                வாழ்த்துகிறோம் 
சென்ற வாரம் புது டெல்லியில் நடைபெற்ற அகிலஇந்திய அளவிலான (சிவில் )பளு தூக்கும் போட்டியில் முதல் பரிசும் பெஸ்ட் லிப்ட்டர் விருதும் பெற்ற தோழர் மணிகண்டன் PA திருநெல்வேலி HO அவர்களை நெல்லை NFPE வாழ்த்தி மகிழ்கிறது .முன்னதாக தோழர் மணிகண்டன் அவர்களுக்கு நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு .VPC அவர்கள் நேரில் அழைத்து வாழ்த்திய காட்சி .இது நமது சக விளையாட்டு வீரர்களுக்கு புது உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கும் .வாழ்த்துங்கள் சத்தம் இல்லாமல் சாதிக்கும் நம் மணிகண்டனை வாழ்த்துக்கங்கள்