...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, April 21, 2018

அன்பார்ந்த தோழர்களே !
                   நெல்லை கோட்ட மாநாடு 22.04.2018 -சிறப்புகள்
 ஏப்ரல் 22 ம் தேதி நமது கோட்ட மாநாடு என்று அறிவித்தவுடன் ஒரு மூத்த தோழர் எனக்கு வாழ்த்து தெரிவித்து மிக சரியான நாளை தான் நீங்கள் தேர்வு செய்திருக்கிறீர்கள் என்றார் .நமது கோட்ட தோழர்கள் ஏப்ரல் 22 ஞாயிறு ஏகப்பட்ட திருமணங்கள் இருக்கிறேதே என்று சொல்லிக்கொண்டிருக்கையில் தோழரின் ஏப்ரல் 22 குறித்து மேலும் வினவினேன் .அவர் மிக பூரிப்போடும் பெருமையோடும் சொன்னார் ஏப்ரல் 22 தோழர் லெலின் அவர்களின் பிறந்த நாள் என்று .ஒரு மாபெரும் புரட்சியாளனின் பிறந்த நாளில் நெல்லையில் அஞ்சல் ஊழியர்களாகிய நாம் ஒன்று சேர்வதும் -இன்றைய தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து நாம் போராட்ட திட்டங்களையும் உத்திகளையும் வடித்தெடுக்க வாய்ப்பு கிடைத்ததை நினைத்து நான் மகிழ்க்கிறேன் .திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் நம் மாநாடு துவங்கும் .நிர்வாகம் தரவேண்டிய வழிகாட்டி குறிப்புகளான CSI கையேடுகளை நாம் கொடுக்கிறோம் .பணிபுரிவதும் நெட் கிடைக்காமல் பரிதவிப்பதும் நாம் தானே !
நமது அஞ்சல் குடும்ப செல்வங்களின் பரத நாட்டியம் -மற்றும் நடனம் -தோழியர்கள் சிந்தையை குளிர்விக்கும் குறுநாடகம் -பல்வேறு தரப்பட்ட தலைவர்களின் உரைவீச்சு -வடித்தெடுக்கப்படும் தீர்மானங்கள் என புது செய்தியை சொல்லபோகும் நெல்லை மாநாடு -நமது மாநாடு வெற்றிபெற பங்கேற்பீர் ! பங்கேற்பீர் !
மாநாட்டு வாழ்த்துக்களுடன் SK .கோட்ட செயலர் நெல்லை 

2 comments:

  1. நெல்லை மாநாடு சீரும் சிறப்பாக நடைபெற. வீர வாழ்த்துக்கள் தனபால் பொள்ளாச்சி

    ReplyDelete
  2. நெல்லை மாநாடு சீரும் சிறப்பாக நடைபெற. வீர வாழ்த்துக்கள் தனபால் பொள்ளாச்சி

    ReplyDelete