...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, April 9, 2018

                                               முக்கிய செய்திகள் 
CCL குறித்து மேலும் சில சலுகைகளை அரசு அறிவித்துள்ளது .தோழியர்கள் CCL நாட்களிலும் LTC செல்லலாம் உள்ளிட்ட புது சலுகைகளை 03.04.2018 அன்று DOPT வெளியிட்டுள்ளது .
---------------------------------------------------------------------------------------------------------------------
IPPB கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள் வந்துள்ளன .
3.5 சதம் ஒவ்வொரு காலாண்டிற்கும் கூட்டுவட்டியாக கணக்கிடப்படும் .குறிப்பாக கிராம புறங்களில் வங்கி சேவைதனை IPPB மூலம் செயல்படுத்த அரசுஎடுத்திருக்கும்  பெரும் முயற்சியாக பார்க்கப்படுகிறது .நகர் பகுதிகளில் வங்கிகளுடன் நாம் போட்டியிட முடியாது என்ற எதார்த்தத்தை உணர்ந்து இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன .நகர் பகுதிகளிலும் Net Banking -Fund Transfer போன்றவைகளை பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் நமது ஊழியர்களுக்கும் இது ஒரு வகையில் பயன்தரும் .எல்லா அலுவலகங்களிலும் IPPB கிளை செயல்படும் .இதை பயன்படுத்தி BO களின் வேலைநேரத்தை  8 மணி நேரமாக மாற்ற வேண்டும் என்றும் ஊக்கத்தொகைக்கு பதிலாக GDS ஊழியர்களுக்கு வேலை நேரத்தில் இதை கணக்கில் கொள்ளவேண்டும் என்ற புதிய பார்வையில் நமது அகிலஇந்திய சங்கங்கள் செயல்பட்டால் GDS எதிர்காலங்கள் சிறப்புடன் அமையும் .
--------------------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா 
கோட்ட செயலர்கள்  நெல்லை 

0 comments:

Post a Comment