...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, April 18, 2018

அன்பார்ந்த தோழர்களே !
  RICT ஏற்கனேவே DARPAN (Digital Advancement Of Rural Post Office For A New India )என்ற  பெயர் மாற்றத்துடன் செயல்பட்டுக்கொண்டிருந்தது .இதுவரை Finacle மட்டுமே பயன்பாட்டிற்கு இருந்துவந்தது .இனிமேல் PLI &RPLI பணிகளும் மேற்கொள்ளலாம் .இந்த புதிய பயன்பாட்டை நமது துறை அமைச்சர் மாண்புமிகு மனோஜ் சின்கா நேற்று தொடங்கிவைத்தார்கள் .இனி கிளை அஞ்சலகங்களில் After sale service சம்பந்தமான பணிகளை செய்யலாம் .
------------------------------------------------------------------------------------------------------------------------
கிட்டத்தட்ட 15 நாள் இடைவெளிக்கு பிறகு நமது கண்காணிப்பாளர் அவர்கள் இன்று பணியில் சேருகிறார்கள் .வருகிற 20.04.2018 அன்று கண்காணிப்பாளர் அவர்களுடன் தேங்கிக்கிடக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இருக்கிறோம் .வேறு விஷயங்கள் கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுடன் பேச வேண்டியதிருந்தால் தகவல்களை தெரிவிக்கவும் .
---------------------------------------------------------------------------------------------------------------------
சென்னையில் 17.04.2018 முதல் 19.04.2018 வரை GDS கமிட்டிக்காக நடைபெறும் தர்ணா போராட்டத்தில் தென்மண்டலத்திற்கு 19.04.2018 அன்று ஒதுக்கப்பட்டுள்ளது .நமது கோட்டத்தில் இருந்து 4 தோழர்கள் பங்கேற்கிறார்கள் .
------------------------------------------------------------------------------------------------------------------------
நமது கோட்ட மாநாடு சிறக்க வாழ்த்துக்களை மாநிலச்சங்க Whatsapp மூலம் தெரிவித்த மாநிலசெயலர் தோழர் JR அவர்களுக்கு நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் 
--------------------------------------------------------------------------------------------------------------------
நமது NELLAI NFPE Whatsapp யில் அரசியல் பதிவுகள் வேண்டாம் என்று பலமுறை சொன்ன பிறகும் கூட சில தோழர்கள் தெரிந்தோ தெரியாமலோ பதிவிடுகிறார்கள் .நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்வதெல்லாம் முதலில் நாம் ஒரு அரசு ஊழியர் .அரசு ஊழியருக்கான நன்னடத்தை விதிகள் நம்மை கட்டுப்படுத்தும் ..அரசியல் குறித்து Maintain Political Neutrality என்று CCS வீதிகளிலும் தெளிவாக இருக்கிறது .அரசை விமர்சிக்கும் உரிமைகூட சில கட்டுப்பாட்டுடன் தான் இருக்கிறது .தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் .
நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
---------------------------------------------------------------------------------------------------------------
                                  
       

0 comments:

Post a Comment