...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, April 4, 2018

            அன்பார்ந்த தோழர்களே ! திருநெல்வேலி தலைமை அஞ்சல் அதிகாரியின் பாரபட்ச போக்கை கண்டித்து நாம் நடத்திய போராட்ட அறிவிப்பின் எதிரொலியாக நேற்றே (03.04.2018 ) பாளையம்கோட்டை ASP அவர்களை விசாரணைக்கு அனுப்பிய கோட்ட நிர்வாகத்திற்கு நன்றி !
மாலை 4.30 மணிக்கு திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் அறையிலேயே  ASP அவர்கள் போஸ்ட்மாஸ்டரிடம் விசாரணை தொடங்கினார்கள் .ஆனாலும் அறிவித்தபடி நமது ஆர்ப்பாட்டமும் திருநெல்வேலி HO முன்பு நடைபெற்றது .ஒருபக்கம் போஸ்ட்மாஸ்டர் ASP யிடம் சாட்சியம் அளித்துக்கொண்டிருக்க மறுபக்கம் நமது ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது வரலாற்று சிறப்புமிக்க ஒரு வெற்றியாகவே பார்க்கப்பட்டது .நேற்றைய விசாரணையின் முடிவில் போஸ்ட்மாஸ்டர் திருநெல்வேலியில் பணியாற்றிய நாள்முதல் நேற்றுவரையிலான ORDERBOOK -DEPUTATION TURN REGISTER ஆகியவைகள் நகல் எடுத்து செல்லப்பட்டது .இறுதியாக இரவு கோட்டசெயலர் என்ற முறையில் என்னிடமும் நாம் கொடுத்த புகார்  கடிதத்தின் அடிப்படையில் சில விளக்கங்கள் கேட்கப்பட்டது .நானும் ASP அலுவலகம் சென்று டெபுடேஷன் விஷயத்தில் நடக்கும் முறைகேடுகளை விளக்கமாக சொல்லியிருக்கிறேன் .இன்றும் விசாரணை தொடர்கிறது .ஊழியர்களின் மனநிலையை புரிந்துகொண்டு  நமது ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாகவே விசாரணைக்கு உத்தரவிட்ட நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கு நெல்லை NFPE சார்பாக நன்றிதனை தெரிவித்துக்கொள்கிறோம் .விசாரணையின் அடிப்படையில் போஸ்ட்மாஸ்டர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் டெபுடேஷன் விஷயத்தில் சீரான அணுகுமுறைக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு சிலமணிநேரங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் எங்கள் நன்றிதனை தெரிவித்து கொள்கிறோம் .நேற்றைய சிறப்பு நமது ஆர்ப்பாட்ட செய்திகளை தினகரன் -தினமலர் -தினத்தந்தி -தினமணி நாளேடுகள் வெளியிட்டிருந்தது நமக்கு மேலும் ஒரு வெற்றியாகும் .






தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 

0 comments:

Post a Comment