...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, April 17, 2018

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                                 22.04.2018 கோட்ட மாநாட்டிற்கு தயாராகுவீர் 
உங்கள் அனைவருக்கும் நமது மாநாட்டு அழைப்பிதழ் இன்று கிடைத்திருக்கும் .நிகழ்ச்சிநிரல் படி திட்டமிட்டபடி மாநாடு சரியாக காலை 10 மணிக்கு தொடங்கும் .கூடுதலாக நமது நிகழ்ச்சியில் அஞ்சல் நான்கின் கோட்ட உதவி செயலர் தோழர் புஷ்பாகரன் அவர்களின் புதல்வி செல்வி .திவ்யபாரதி அவர்களின் பரத நாட்டியமும் இடம்பெறுகிறது .மேலும் நம் அஞ்சல் குடும்ப குழந்தைகளின் தனித்துவமான நிகழ்ச்சிகள் நடத்த விரும்பினால் தாராளமாக வரலாம் .அதற்கான நேரங்கள் ஒதுக்கி தரப்படும் .
விடுபட்ட அலுவலகங்களுக்கு இன்று 17.04.2018 அன்று நமது நிர்வாகிகள் நன்கொடை பிரிக்க வருவார்கள் .---------
--------------------------------------------------------------------------------------------------------------------------
   சுழல் மாறுதலுக்கான விண்ணப்பங்களை அனுப்புகிறவர்கள் 18.04.2018 குள் கோட்ட அலுவலகத்திற்கு கிடைக்கும் படி அனுப்பிவைக்கவும் .
-------------------------------------------------------------------------------------------------------------------------
குரூப் D யில் இருந்து நேரடியாக எழுத்தர் தேர்வான ஊழியர்களுக்கு எழுத்தரில் ஆரம்ப ஊதியம்            நிர்ணயிக்க வேண்டும் -என     பெங்களூரு நிர்வாயக  தீர்ப்பை  சுட்டி காட்டி DOP    
F.No. 2-15/2016-PAP dated 13.04.2018 உத்தரவு பிறப்பித்துள்ளது .இதே போல் தபால் காரர் தோழர்களும்2006 க்கு பிறகு  எழுத்தராக தேர்ச்சி பெற்ற தோழர்களுக்கு  எழுத் தருக்கான ஆரம்ப   ஊதியம் வழங்கப்படவில்லை .பல கோட்ட்டங்களில் Stepping up மூலம்அவர்கள் சுட்டிக்காட்டிய ஜூனியர் ஊதியத்தின் அடிப்படையில்  நிவிர்த்தி செய்யப்பட்டது .     ஆனால் இந்த புதிய உத்தரவின் மூலம் 01.012006 பிறகு பதவி உயர்வு பெற்ற ஊழியர்களுக்கும் ஆரம்ப நிலை ஊதியம் 5200-20200+ GP 2400    நிர்ணயிக்க பட்டால் இன்னும் பல தோழர்களுக்கு மேலும் ஒரு நிலை ஊதிய   உயர்வுக்கு வாய்ப்புகள் இருக்கும் .இது குறித்து இன்று நமது வழக்கறிஞர் திரு .மலைச்சாமி அவர்களைசென்னையில்  நேரில் சந்திக்க நமது தோழர் ஐசக் பால் பாண்டியனிடம் தெரிவித்துள்ளோம் .
மேலும் இதுகுறித்த தகவல்கள் இருந்தால் தோழர்கள் தெரிவிக்கும் படி கேட்டு கொள்கிறோம் .
தோழமையுடன்SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
    

0 comments:

Post a Comment