...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, May 9, 2018

                                     முக்கிய செய்திகள் 
சென்சிடிவ் பதவிகளில் பணியாற்றுவோரின் TENURE மூன்று ஆண்டுகள் தான் என்ற உத்தரவு இந்த ஆண்டின்  சுழல் மாறுதலில் இருந்து அமுலாகிறது .இதன்படி ASP முதல் C &B கிளாஸ் போஸ்ட்மாஸ்டர்கள் மற்றும் In charge of CPC  BPC கோட்ட அலுவலகத்தில் விஜிலென்ஸ்  இடமாறுதல் நியமன பிரிவு மற்றும் சிஸ்டம் மேனேஜர்  மார்க்கெட்டிங் இவைகளில் பணிபுரிகிறவர்கள் SENSITIVE பதவிகளில் வருகிறார்கள் .இதன்படி 2015  முதல் பணியாற்றுகிறவர்கள் இந்த ஆண்டு சுழல் மாறுதலில் இடம் பெறுவார்கள் .ஏற்கனவே அறிவிக்கப்பட்ட RT NOTIFICATION போக புதிய அறிவிப்புகள் விரைவில் வரும் .LSG ஊழியர்களுக்கு கோட்ட அளவிலே இடமாற்றம் செய்திடவும் நேற்று ஒரு வழிகாட்டுதல்கள் மண்டல அலுவலகத்தில் இருந்து வந்துள்ளன .சில கோட்டங்களில் RT உத்தரவு அமுலாக்கப்பட்ட நிலையில்  ஒவ்வொரு கோட்டம் ஒவ்வொரு நிலைபாடு எடுப்பது சரியாகுமா ? ஆக அடுத்த ஆண்டில் 
இருந்து இந்த உத்தரவை அமுல்படுத்தினால் முறையாகவும் சரியாகவும் இருக்கும் என ஊழியர்கள் கருதுகின்றனர்  .
பள்ளி /கல்லூரிகளில் குழந்தைகளை சேர்ப்பது -இடமாற்றத்தினால் புதிய குடியிருப்புகளை தேடுவது இவையெல்லாம் பாவப்பட்ட எழுத்தர்களுக்கு தான் .அதிகாரிகளுக்கு அவ்வளவு சிரமங்கள் இருக்காது .மாநில நிர்வாகம் என்ன முடிவெடுக்கப்போகிறது தெரியவில்லை.
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment