GDS ஊழியர்களின் போராட்டம் இன்று எட்டாவது நாள் தொடர்கிறது -போராடும் தோழர்களை வாழ்த்துகிறோம் .
நேற்று நமது துறை செயலருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது .கமேலேஷ் சந்திரா அமுலாக்கம் தொடர்பான கோப்புகள் அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டதில் வரிசை எண் 27 யில் இருக்கிறதாம் .ஒரு கூட்டத்திற்கு 4 அல்லது 5 கோப்புகளின் மீதுதான் அமைச்சரவை முடிவெடுக்கிறதாம் .ஆகவே விரைந்து நமது கோப்புகளை அரசாங்கம் ஒப்புதலுக்கு எடுக்க அமைச்சர்களின் கவனத்தை ஈர்க்க அரசியல் தலைவர்களின் /பாராளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தம் தேவைப்படுவதால் ஆங்காங்கே மக்களவை /மாநிலங்களவை உறுப்பினர்களை சந்திக்க வலியுறுத்த படுகிறது
------------------------------------------------------------------------------------------------------------------------
நேற்று கர்நாடக தோழர்கள் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி சென்று ஆளுனரிடமும் கர்நாடக முதல்வரிடமும் மனு அளித்துள்ளனர்
--------------------------------------------------------------------------------------------------------------------
கேரளாவில் தொடர்ந்து முழு வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது
------------------------------------------------------------------------------------------------------------------
நமது தமிழ்மாநில COC சார்பாக 30.05.2018 அன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்துவது 31.05.2018 அன்று CPMG அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது
--------------------------------------------------------------------------------------------------------------------
GDS கோரிக்கைகள் வெல்லும்வரை GDS அகிலஇந்திய சங்கங்கள் காட்டும் ஆர்வத்தையும் உறுதியையும் தொடர வேண்டுகிறோம்
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை
---------------------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Post a Comment