GDS ஊழியர்களுக்கான ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு தோழர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிதனை தெரிவித்து கொள்கிறோம் .நெல்லையில் முதல் நாள் வேலைநிறுத்தத்தில் SC /ST சங்கம் பங்கேற்றது சிறப்பான ஒன்று .MMS தோழர்களின் முழு பங்களிப்பு நமக்கு புது வேகத்தை தந்தது .கோட்ட அலுவலகத்தில் பணியாற்றும் நமது தோழர் /தோழியர்களின் பங்கு மேலும் வலு சேர்த்தது .புறநகர் பகுதி தோழர்களின்பங்களிப்பு நெல்லை பழைய வரலாறுகளை நினைவூட்டியது .இன்றும் போராட்டம் தொடர்கிறது .நேற்று மத்திய தொழிலாளர் நல ஆணையருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது .மீண்டும் 24.05.2018 அன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது .இந்த பேச்சு வார்த்தையை அழுத்தம் கொடுத்திட நாம் தொடர்ந்து போராடுவோம் .நெல்லையில் இன்று வள்ளியூரில் நமது கோரிக்கைகளை வலியுறுத்து அஞ்சல் ஊழியர்களின் எழுச்சி பேரணி காலை சரியாக 11 மணிக்கு நடைபெறுகிறது .காவல் துறையிடம் முறையான அனுமதி பெற்றுள்ளோம் .ஆகவே தோழர்கள் அனைவரும் வள்ளியூர் நோக்கி புறப்படுவீர் !
போராட்ட வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா --I.ஞானபாலசிங் -E.காசிவிஸ்வநாதன்
கோட்ட செயலர்கள் நெல்லை
போராட்ட வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா --I.ஞானபாலசிங் -E.காசிவிஸ்வநாதன்
கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment