...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, May 26, 2018

                                               நன்றி ! நன்றி ! நன்றி !
புறநிலை ஊழியர்களுக்கு ஆதரவாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அனைத்து அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு தோழர்களுக்கு கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .பெரிய அளவில் வேலைநிறுத்தம் குறித்து பிரச்சார சுற்று பயணங்கள் போகாமலே ஒரு அறிக்கை ஒரு கூட்டம் வாட்ஸாப்ப் வேண்டுகோள் இவைகளை ஏற்று வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் நன்றிகளை உரிதாக்கிக்கொள்கிறோம் .முதல் நாள் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் இரண்டாம் நாள் வள்ளியூரில் நடைபெற்ற எழுச்சி மிகு ஊர்வலம் நேற்று அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற உண்ணாவிரதம் இவைகளில் கலந்துகொண்ட தோழர்களுக்கும் பாராட்டுக்கள் .ஒரு வரலாற்று பதிவாக நெல்லை SC /ST நலச்சங்க கோட்ட செயலர் இரண்டு நாள் வேலைநிறுத்தம் செய்தது MMS தோழர்களின் உற்சாக பங்களிப்பு கோட்ட அலுவலக ஊழியர்களின் முழுமையான ஈடுபாடு இவைகளை நாம் நன்றியோடு நினைத்து பார்க்கிறோம் .அதுமட்டுமல்ல யூனியன் சொன்னால்தான் வேலைநிறுத்தத்தை விலக்கி கொள்வோம் என்று இறுதிவரை உறுதி காத்த அனைவருக்கும் நன்றி .நேற்றைய தமிழ்மாநில ஒருங்கிணைப்பு குழு நேற்று வேலைநிறுத்தத்தை விலக்கி கொண்டது .ஆகவே அனைவரும் இன்று பணிக்கு செல்லுமாறு கேட்டு கொள்கிறோம் .
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
--------------------------------------------------------------------------------------------------------------------
GDS சங்கங்களின் வேலைநிறுத்தம் தொடர்கிறது 

1 comment:

  1. GD5 விடியல் எப்போ? கமிட்டி ஒப்புதல் ஆகுமா (அ) ஆகாதா | கொத்தடிமை மாற்Mத்தை union ஒழிக்குமா?

    ReplyDelete