...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, May 9, 2018

தேவையில்லாத பதிவுகளை தவிர்ப்பீர் 
நெல்லை NFPE வாட்ஸாப் குழுவிலில் நமது உறுப்பினர்களுக்கு நன்மை பயக்கும் விசயங்களை மட்டுமே பதியுங்கள் .குறிப்பிட்ட பிரிவு ஊழியர்களை குற்றம்சாட்டுவது சீனியர் /ஜூனியர் என புது தேவையற்ற பார்வையோடு விமர்சிப்பது மறைமுக கேலி சித்திரங்கள் இவைகள் உறுப்பினர்களின் மனதை புண்படுத்துமே தவிர வேறு எந்த பிரயோஜனமும் இல்லை .கோட்ட சங்க செயல்பாடுகளை தாராளமாக விமர்சியுங்கள் -உங்கள் பார்வையில் தவறாக தெரிந்தால் சுட்டி காட்டுங்கள் . .ஒவ்வொரு RT யிலும் நம் உறுப்பினர்களின் விருப்ப இடத்தை ஏன் பிரிவை கூட அவர்களுக்கு வாங்கிக்கொடுக்கத்தான் கோட்ட சங்கம் இருக்கிறது .யார் வேலை செய்வார்கள் யார் வேலை செய்யமாட்டார்கள்  என்பதை கண்காணிக்க கண்காணிகள் இருக்கிறார்கள் .நமக்குஅதுவல்ல வேலை ..அஞ்சல் மூன்றின் முக்கிய பிரச்சினையே நான்கு ஆண்டுக்கு ஒருமுறை இடமாறுதல் தான் .இப்பொழுது அதுவும் சில பதவிகளுக்கு மூன்றாண்டுகள் .இது மேலும் நமது கோட்ட சங்கத்திற்கு கூடுதல் சுமைதான் .ஆனாலும் தொடர்ந்து முயற்சித்து ஊழியர் நலன் பாதுகாப்போம் .
                                                 உதவாவிட்டாலும் பரவாயில்லை 
                                                 உபத்திரம் செய்யாதீர்கள்  
வருத்தத்துடன் இந்த பதிவை பதிகிறேன் .தோழமையுடன் ஜேக்கப் ராஜ் 
                                                 
                                                

0 comments:

Post a Comment