அஞ்சல் துறையின் அனைத்து GDS சங்கங்களும் இனைந்து நடத்தும் காலவரையற்ற வேலை நிறுத்தம் வெல்லட்டும்
இனி எத்தனை காலம் தான் ஏமாற்றும் இந்த அரசு
விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டிருந்த GDS ஊழியர்களுக்கு வெற்றி செய்தி .
2012 முதல் பிரிந்த சங்கங்கள் ஒரு கோரிக்கையின் அடிப்படையில் ஒன்றாக சேர்ந்து வேலைநிறுத்தத்தை மே 22 முதல் நடத்துவதாக அறிவித்திருக்கிறது .முதலில் AIGDSU மற்றும் FNPO GDS சங்கமும் வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்தது .ஏற்கனவே வேலைநிறுத்த தயாரிப்பில் இருந்த NFPE GDS சங்கமும் அதே மே 22 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது .இந்த பொன்னான வாய்ப்பை GDS ஊழியர்கள் தவறவிடக்கூடாது .பழைய கதைகளை பேசி யார் மனதையும் காயப்படுத்திடக்கூடாது .அமைப்பு ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் எழுந்திட்ட பிரச்சினைகளை புறந்தள்ளிவிட்டு கமலேஷ் சந்திரா பரிந்துரையை அமுல்படுத்தும் வரை நாம் ஒன்றினைந்து பணியாற்றுவது மிக மிக அவசியம் .தங்கள் கோரிக்கை சிறிதும் இல்லாத போராட்டங்களில் GDS ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்த வரலாறும் இங்கு உண்டு .ஒன்றாக நடைபெறும் வேலைநிறுத்தத்தை குலைக்க அரசும் -அதிகாரமும் செயல்படும் .சதிகளை முறியடித்து வெற்றி சரித்திரம் படைப்போம் .
GDS இந்த இலாகாவின்
முதுகெலும்பு
GDS கிராமப்புற பகுதிகளில்
அரசாங்கத்தின் தூதுவன்
GDS அஞ்சல் துறையின்
அஸ்திவாரங்கள்
கோடிகோடியாய் கணக்குகளையும்
பாலிசிகளையும் பிடித்துக்கொடுத்த
அமுத சுரபி
GDS எவராலும் அலட்சியம் செய்ய முடியாத
உன்னத சக்தி
GDS அடிமைகள் அல்ல -இந்த
இலாகாவின் உடமைகள்
GDS களின் ஒன்றுபட்ட போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் .
தோழமையுடன்
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment