...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, May 12, 2018

                         வெல்லட்டும் -வெல்லட்டும் 
 வா ! மற்றுமொரு போராட்ட களம் 
விரும்பி உன்னை அழைக்கிறது 
ஒட்டுமொத்த சங்கங்களும் 
ஒருசேர இணைகிறது !

ED அடிமை தலை அறுக்கும் 
லிங்கனும் நீதான் 
இனவேறுபாட்டை அகற்றும் 
லூதர் கிங்கும் நீ தான் 
இந்த சுதந்திரப்போரில் படை நடத்தும் 
நேதாஜியும் நீதான் 
ஜார்களின் கொட்டத்தை ஒடுக்கும் -உன்னத 
பாட்டாளி வர்க்கமும் நீதான் 

ED -சுதந்திர இந்தியாவின் 
அறிவிக்கப்படாத கொத்தடிமைகளா ?
ஊதிய மாற்றத்தை கூட
 ஊதியத்தை இழந்து பெறுவதற்காக 
பிறந்த சாபத்தின் சாட்சிகளா ?
அஞ்சல் துறையின் அட்சய பாத்திரத்தில் 
சிதறி விழும் பருக்கைகளுக்காக 
கையேந்தும் வறுமையின் அடையாளங்களா ?
ஒளிரும் இந்த தேசத்தில் 
ஒடுக்கப்பட்ட இனத்தின் பிறப்புகளா ?

ஆட்சியில் பங்கு கேட்டனா ?
அதிகாரத்தில் ஆசை பட்டானா ?
மல்லையாக்களை  போல் வங்கிளில் 
கடன் கேட்டனா !
கொடுத்த அறிக்கைகை கேட்கிறான் -நீ 
அமைத்த கமிட்டியின் முடிவை கேட்கிறான் 

அஞ்சல் துறையின் தயக்கம் புரியவில்லை -
தாமதம் ஏன் யாருக்கும் தெரியவில்லை 
அமைச்சரவைக்கு சென்ற கோப்பை கானவில்லை -
இனியும் பொறுப்பது யாருக்கும் லாபமில்லை 

தட்டி தட்டி பார்த்தோம் -திறப்பதற்கு ஆள் இல்லை 
கேட்டு கேட்டு பார்த்தோம் கொடுக்க நாதி இல்லை 
கிணற்றில் போட்ட கல்லாய் கிடக்கிறது -ED நிலை பார்த்து 
சுற்றமும் நட்பும் கூட சிரிப்பாய் சிரிக்கிறது 

அழுது வாழ அவசியமில்லை -எவரையும் 
தொழுது பிழைக்கவும் விருப்பமில்லை 
பழுது பட்ட இயக்க ஆயுதங்களை கூற்படுத்தி 
போர் பரணி பாடி இணைந்திடுவோம் 

வேலை நிறுத்த நாளை -திருவிழாபோல் 
எதிர்கொள்வோம் 
எதிர்ப்போரின் விலா ஓடிய 
வீறு கொண்டு எழுந்திடுவோம் 

கந்தர்வ வரிகளை போல் 
கடையடைப்பு நடத்தும் காலமல்ல 
படையெடுக்கும் காலம் 
முதல் சங்கம் -இடை சங்கம் 
கடை சங்கம் போய் -இன்று 
தொழிற்சங்க காலம் -அமைய போவது 
தொழிலாளியின் களம் 
                 போராட்ட வாழ்த்துக்கள் 
                                                                                   ஜேக்கப் ராஜ் -நெல்லை 




























2 comments:

  1. கவிதை வடிவில் ED பிரச்சனை எழுதிய ஜேக்கப் ராஜ்-க்கு 1000 -ம் நன்றி வெல்ட்டும் போரட்டம் | செல்வோம் கொழிற்சங்கத்தோடு . பணிவுடன் அன்ப ழகன் BPM

    ReplyDelete
  2. கவிதை அருமை
    >> >
    ED என்பது GDS ஆக மாறி வருடங்கள் பல கடந்து விட்டது சார்

    ReplyDelete