...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, May 30, 2018

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
 சுழல் மாறுதல் குறித்து புதிய Notification வரவிருக்கிறது .பழைய அலுவலகங்கள் மற்றும் பதவிகள் தவிர சென்சிடிவ் பதவிகளையும் சேர்த்து இடமாறுதலுக்கான அறிவிப்பு இடம்பெறும் .ஜூன் மாதம் தொடங்கவுள்ள நிலையில் குழந்தைகள் புதிய பள்ளிகளில் சேர்ப்பதில் ஊழியர்களுக்கு உள்ள சிரமங்களை நிர்வாகம் கருத்தில் கொண்டு விரைந்து அறிவிப்புகளை வெளியிடவும் மாறுதல் உத்தரவுகளை பிறப்பிக்கவும் நேற்று வலியுறுத்த பட்டுள்ளது .
---------------------------------------------------------------------------------------------------------------------
தேக்கமடைந்துள்ள தபால்களை பட்டுவாடா செய்ய மாவட்ட ஆட்சி தலைவர் நிர்ணயித்த குறைந்தபட்ச கூலி ரூபாய் 320 வழங்கவும் பெரிய அலுவலகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது ..மேலும் தேவைப்படும் அலுவலகங்கள் கோட்ட நிர்வாகத்திற்கு தகவல்கள் தெரிவிக்கவும்
-------------------------------------------------------------------------------------------------------------------------
Strike காலத்திற்கு முன் மற்றும் அதனை தொடர்ந்து விடுப்பில் உள்ளவர்களை Absent என கருத கூடாது என்றும் கோட்ட அலுவலகத்தால் Leave Sanction கிடைத்தவர்கள் இதுகுறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .(மருத்துவ விடுப்பு மற்றும் LTC யில் சென்றவர்களுக்கு  விலக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது ) அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு சங்கம் போராட்டத்தை விலக்கிக்கொண்டதற்கான அதிகாரப்பூர்வமான கடிதம் இன்று மண்டல அலுவலகத்திற்கு சேர்ந்துவிட்டால் விடுப்பு எடுப்பதில் உள்ளகட்டுப்பாடு தளர்த்தப்படும் .
--------------------------------------------------------------------------------------------------------------------
GDS தோழர்களின் வேலைநிறுத்தம் வீர வரலாற்றை படைத்துக்கொண்டிருக்கிறது .GDS சங்கத்தின் மூன்று பொதுச்செயலர்களும் தலைநகரிலே முகாமிட்டு ஒற்றுமையாக வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள் .மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனம் மற்றும் NFPE சம்மேளனமும் இன்று ஆதரவு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது மேலும் நமக்கு வலு சேர்க்கும் 
நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment