...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, February 21, 2019

                                              முக்கிய செய்திகள்
1.LSG  இடமாறுதல்களை அமுல்படுத்துவதை  நிறுத்திவைக்கும்படி  மதுரை மண்டல அலுவலகத்தில் இருந்து நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வந்துவிட்டன .முதலாவதாக LSG TR மற்றும் இந்த ஆண்டு TENURE முடியும் LSG ஊழியர்கள் அதனை தொடர்ந்து HSG II பதவிகளில் ஏற்கனவே இருக்கும் LSG ஊழியர்களின் இடமாறுதல்கள் அதன்பிறகு தான் புதிய LSG ஊழியர்களுக்கான இடமாறுதல்களை CIRCLE சீனியாரிட்டி அடிப்படையில் வழங்கிடவேண்டும் என்ற நமது தரப்பு கோரிக்கைகளை ஏற்று நமது PMG அவர்கள் இந்த அமுலாக்கத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளார்கள் .நேற்றைய PMG அவர்களுடனான சந்திப்பில் நமது மண்டலச்செயலர் அண்ணன் சுப்பிரமணியன் மற்றும் முன்னாள் மாநிலசெயலர் அண்ணன் சுந்தரமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர் .
2. நமது தென்மண்டல அளவிலான ESTABLISHMENT REVIEW கூட்டம் மதுரை PTC யில் 21.02.2019 மற்றும் 22.02.2019 ஆகிய இருநாட்கள் நடைபெறுகிறது .2000 -ம் ஆண்டிலிருந்து கோட்ட அலுவலகத்தில் பராமரிக்கப்பட்ட ESTABLISHMENT கோப்புகள் இட ஒதுக்கீடு சம்பந்தமான ROSTER பின்பற்றப்பட்ட கோப்புகள் என அனைத்தையும் மூட்டை கட்டிக்கொண்டு வர ஒவ்வொரு கோட்டத்தில் இருந்தும் சம்பந்தப்பட்ட OA கள் ASP (HQS) யுடன் கலந்துகொள்ள உத்தரவு வந்துள்ளது .அதனை தொடர்ந்து 23.02.2019 அன்று அனைத்து கோட்ட கண்காணிப்பாளர்களுக்கும் பயிலரங்கம் ஒன்றும் நமது PMG அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது .இந்த கூட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர் வகுப்பினருக்கான 10 சதம் இடஒதுக்கீடு -VACANCY களை  கணக்கிடுவது விடுபட்ட VACANCY கள் இருந்தால் அதை அடுத்த நேரடி நியமனத்திற்கு கொண்டுவருவது என ESTABLISHMENT சம்பந்தமான அமர்வுகள் நடத்தப்பட உள்ளன .
3.நமது கோட்டத்திற்கு புதிதாக வரும் நமது தபால்காரர் தோழர்களை NELLAI NFPE வாழ்த்தி வரவேற்கிறது .
1.உதயகுமார் சேலம் கிழக்கு 
2.மார்ட்டின் தஞ்சாவூர் 
3.இசக்கியப்பன் கன்னியாகுமரி 
இவர்களுக்கான இடமாறுதல் கமிட்டி 18.02.2019 அன்று முடிவடைந்துவிட்டது .
                    நன்றி 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment