...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, February 20, 2019

                                                 முக்கிய செய்திகள் 
LSG பதவி உயர்வுகளை அமுல்படுத்திட கோட்ட அலுவலகத்தால் மீண்டும் Re -Notification கொடுக்கப்பட்டுள்ளது .இதில் நிரப்பப்படாத HSG II பதவிகளை LSG பதவிகளாக கணக்கில்கொண்டு நிரப்பபடவுள்ளன ...அதற்கு முன்னதாக  ஏற்கனவே  2017 யில் LSG பதவியுயர்வு பெற்றவர்களின் விருப்பங்களையும் கேட்டறிந்து (ஏற்கனவே HSG II வில் OFFICIATING பார்க்கின்ற தோழர்களையும் சேர்த்து )சீனியர் LSG ஊழியர்களுக்கு HSG II இடங்களில் முன்னுரிமை வழங்கிடவும் அவ்வாறு HSG II பதவிக்கு வருகிறவர்களிடம் ரெகுலர் HSG II பதவியுயர்வில் யாரேனும் வந்தால் (2022 வரை அதிகப்படியாக ரெகுலர் HSG II யாருக்கும் வரப்போவதில்லை ) இவர்கள் Revert ஆக சம்மதம் என்ற அடிப்படையில் மீண்டும் ஒரு விருப்பமனுக்களை இருக்கின்ற LSG ஊழியர்களிடம் கேட்டு அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்ற நமது கோரிக்கையை நேற்றைய சந்திப்பில் நமது SSP அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்  .இன்று அதுகுறித்த அறிவிப்புகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
                                        1986 க்கு முன் INDUCTION TRAINING முடித்தவர்களுக்கு அவர்களின் பயிற்சிக்காலத்தையும் சேவைக்காலமாக கணக்கிடவேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாத மாதாந்திர பேட்டியில் நாம் எடுத்துரைத்தோம் .பார்க்க MM சப்ஜெக்ட்  (Early implementation of  recent Dte .orders on counting of induction training period prior 01.01.1986 for grant of financial upgradation of TBOP/BCR) அதன் அடிப்படையில் அதற்கான DPC வருகிற 26.02.2019 அன்று நடைபெறுகிறது .ஆகவே விண்ணப்பித்தவர்கள் தங்களது INDUCTION TRAINING உத்தரவு  நகல் ஒன்றை உடனே கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கவும்.அநேக தோழர்களுக்கு TRANINIG ORDER இல்லை என தெரிகிறது . .TRAINING ORDER கிடைக்காமல் யாருக்கும் இந்த பலன்கள் தள்ளிப்போகாமல் பார்த்துக்கொள்ளவும் .மிகமுக்கியம் .அவசரம் .இதை நமது மூத்த தோழர்கள் /தோழியர்களிடம் தெரிவித்து முன்னணி தோழர்கள் விரைந்து செயல்பட்டு அந்த விவரங்களை கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .
                               இந்த மாத மாதாந்திர பெட்டி வருகிற 28.02.2019 அன்று நடைபெறும் என்று தெரிகிறது .ஆகவே தங்கள் பிரச்சினைகள் எதுவாயினும் கோட்ட செயலருக்கு தெரிவிக்கவும் .DEPUTATION குறித்த புதிய வழிகாட்டுதல் மற்றும் குறிப்பிட்ட அலுவலகங்களுக்கே மீண்டும்...... மீண்டும்... DEPUTATION உள்ளிட்ட பிரச்சினைகள் விவாதிக்கப்படவுள்ளன .ஆகவே இன்றே உங்கள் பகுதி பிரச்சினைகளை தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் 
       நன்றி .தோழமையுடன் 
        SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 


0 comments:

Post a Comment