...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, February 27, 2019

                                        LGO (தபால்காரர் -எழுத்தர் ) தேர்வு முடிவுகள் 
வெற்றிக்கனியை ருசித்து கொண்டிருக்கும் அனைத்து தோழர் /தோழியர்களுக்கு நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .முன்னதாக வினாத்தாளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டிய பின் மொத்த மதிப்பெண்கள் PAPER I -96
PAPER II 94 என நிர்ணயிக்கப்பட்டு UR பிரிவிற்கு தகுதி மதிப்பெண்கள் தலா 38 எனவும் SC /ST பிரிவினருக்கு 31 யில் இருந்து 30 ஆக RELAXATION கொடுக்கப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்க முடிவெடுக்கப்பட்டது .
நெல்லை கோட்டத்தில் கிட்டத்தட்ட மொத்தம் 28 இடங்கள் இருந்தாலும் ஆறு தோழர்கள் தான்  தேர்ச்சி பெற்றுள்ளார்கள் .எழுத்தராக தேர்ச்சிபெற்ற தோழர்களை வாழ்த்துவதுடன் அஞ்சல் மூன்று சங்கத்திற்கு வாழ்த்தி வரவேற்கிறோம் .ஏற்கனவே அனைவரும் நமது NFPE P 4 யில் மகத்தான பங்களிப்பை செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
1.S .சுந்தர தேவி (முலைக்கரைபட்டி ) 60+68= 128
2.J .ரோகினி (கல்லிடை குறிச்சி ) 54+74=            118
3.V.முருகானந்தி (பெருமாள் புரம் ) 46+66=        112
4.R.ஆதி நாராயணன் (அம்பை )      38+ 68 =       106
5.S. நாராயணன் (M.O தி.லி )                 40+ 60=       100
6.M.ஆசை தம்பி  (ராதாபுரம் )             40+60=        100
  இன்று மதுரையில் நடக்கும் கூட்டத்திற்கு அனைத்து கோட்ட அதிகாரிகளும் செல்கிறார்கள் .அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கூட்டம் முடிந்தபின் வெளியிடப்படும் .
                                           மாதாந்திர பேட்டி 
நமது கோட்டத்தில் மாதாந்திர பேட்டி வருகிற 05.03.2019 அன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது .மாதாந்திர பேட்டியில் சேர்க்கவேண்டிய பிரச்சினைகள் இருந்தால் இன்று 27.02.2019 மாலைக்குள் தெரிவிக்கவும் .
                                               இருமாதந்திர பேட்டி 
தென்மண்டல தலைவருடனான இருமாதந்திர பேட்டி 26.02.2019 அன்று மதுரையில் நடைபெற்றது .பேட்டியில் மாநிலத்தலைவர் தோழர் செல்வ கிருஷ்ணன் அவர்களும் மண்டலச்செயலர் தோழர் சுப்பிரமணியன் அவர்களும் கலந்துகொண்டனர் .நமது கோட்டம் சார்பாக கொடுக்கப்பட்ட பேட்டரிகள் மற்றும் புதிய கணினிகள் சம்பந்தமாக பிரச்சினைகள் உரியமுறையில் எடுத்துரைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது .அதற்காக மாநிலத்தலைவர் /மண்டலச்செயலர் ஆகியோருக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் 
 தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்டசெயலர்கள் நெல்லை 
              

0 comments:

Post a Comment