...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, February 26, 2019

                                                   முக்கிய செய்திகள் 
கடந்த வாரம் மதுரை PTC யில் நடைபெற்ற ESTABLISHMENT REVIEW கூட்டமானது நிர்ணயிக்கப்பட்ட நாட்களை தாண்டி மேலும் ஒரு நாள் (ஞாயிறு ) நீட்டிக்கப்பட்டது .இதில் ஒருசில கோட்ட்டங்களுக்கு 
கூடுதல் இடங்களும் சில கோட்டங்களில் அதிகமாக கொடுக்கப்பட்டதை குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது .
               UNFILLED HSG II பதவிகளை LSG ஆக கணக்கிட்டு நிரப்புவது சம்பந்தமாக நமது தென் மண்டல அலுவலகத்தால் கடந்த வெள்ளியன்று சிலவிளக்கங்கள் கேட்டு மாநில நிர்வாக அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன .அவ்வாறு HSG II பதவிகளை LSG ஆக தகுதி இறக்கம் செய்து நிரப்பினால் ஒருவேளை ரெகுலர் HSG II வந்தவர் அந்த இடங்களை கேட்டு விண்ணப்பிக்கும் பொழுது ஏற்படும் நிலைக்குறித்தும் பரீசீலிக்கவேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள்  கோரிக்கை வைத்துள்ளன .
                              போஸ்ட்மாஸ்டர் கேடர் பதவிகளை மீண்டும் பொதுபிரிவோடு இணைக்க வகைசெய்வதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி ஊழியர் தரப்பு பிரதிநிதிகளிடம் கருத்துக்களை கேட்டு வருகின்றன .அன்று 1/3 LSG என்ற பெயரில்  மாநிலம் முழுவதும் தூக்கி அடிக்கப்பட்ட ஊழியர்கள் பிறகு FAST TRACK என்றபெயரில் தொலை தூர இடமாற்றங்கள் தற்போது நடைமுறையில் இருக்கும் POSTMASTER  GRADE என்ற பெயரில் மண்டலம் முழுவதும் இடமாற்றங்கள் இன்று மீண்டும் பொதுபிரிவோடு இணைப்பு என மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்துநிற்பது எதற்கு என்பது அதிகாரிகளுக்கே வெளிச்சம் .
              நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
 SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

                                   

0 comments:

Post a Comment