...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, February 7, 2019

                 இது தூத்துக்குடி கோட்ட சங்கத்தின் பதிவு 
SB DAY, PLI DAY, CLEANING DAY எனTARGET FIX   பண்ணி அதை முடிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டுகின்ற பாணியை கைவிட்டு, UPS DAY, GENSET DAY, PRINTER DAY, ACCESSORIES DAY  என வைத்து, ”குறைகளை சரி செய்து தருவதற்கு நிர்வாகம் தயாராக இருக்கிறது: உங்களுக்கு நிர்ணயிக்கபட்ட இலக்குகளை அடைவதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள். உங்கள் முழுதிறமையையும் காட்டுங்கள்” என, உத்திரவாதம் கொடுத்து, உற்சாகபடுத்தினால் ஊழியர்கள் இன்னும் அதிக ஆர்வத்துடனும், அக்கறையோடும் இலக்கை அடைவதற்கான செயலில் ஈடுபாட்டோடும், இலட்சியத்தோடும் இறங்கி செயல்படுவார்கள் என்பது உறுதி. பதவி என்பது உதவி செய்வதற்கான வாய்ப்பு என்பதை பலமுறை சொல்லி இருக்கிறோம். ஆனால், ஊழியர்கள் தங்கள் அலுவலக குறைகளை பதிவிட்டால்,  ஊழியர்களின் குறைகளை சுட்டிக்காட்டி, ’நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதிகாரிகள் பதிவிடுவதும் வேதனையாக இருக்கிறது. தனிமனிதனாக யாரும் எதிர்ப்பை தெரிவிப்பதில் பலனில்லை. ஆர்ப்பாட்டம், போராட்டம், வேலைநிறுத்தம் என ஒட்டுமொத்த எதிர்ப்பை தெரிவிப்பதுதான் சரியாக இருக்கும்.  பல்வேறு பிரச்சனைகளோடு ஊழியர்கள் படும் அவஸ்தைகளையெல்லாம்புரிந்து கொண்டு, அதை தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுப்பதுதான் அதிகாரிகளின் வேலையாக இருக்க வேண்டுமே தவிர, ஊழியர்களை மன உளைச்சலுக்கும், மனவருத்தத்திற்கும் உள்ளாக்குவது எந்த வகையிலும் நியாயமல்ல. இலக்கை அடைவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுவோம். அதேசமயம் நாம் இதயமுள்ள மனிதர்கள் என்பதையும் உணர்த்துவோம்.

0 comments:

Post a Comment