...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, February 6, 2019

                                                  முக்கிய செய்திகள் 
   1.IPPB கணக்கு தொடங்கும் அஞ்சலக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை (INCENTIVE ) ரூபாய் 7 வழங்கப்படும் .
இதன்படி சேமிப்பு கணக்குகளை 
POSB உடன் IPPB கணக்கை முப்பது நாட்களுக்குள் இணைத்திருக்கவேண்டும் .அல்லது 90 நாட்களுக்குள் IPPB கணக்கின் மூலம் பிற சேவைகளை நடத்தி (EB பில் உள்பட )வருமானத்தை ஈட்டியிருக்கவேண்டும் 
CURRENT ACCOUNT யை பொறுத்தவரை கணக்கு தொடங்கிய மாதத்தில் இருந்து அடுத்த மூன்று மாதங்களுக்கு ரூபாய் 1000 கணக்கில் இருப்பு இருக்கவேண்டும் மற்றும் 90 நாட்களுக்குள் வருவாய் ஈட்டியிருக்கவேண்டும் 
 2.    PLI /RPLI INCENTIVE பில் இனி மாதந்தோறும் வழங்கிட PLI இயக்குனரகம் 05.02.2019 தேதியிட்ட கடிதத்தின் மூலம் அனைத்து மாநில தலைமை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளது .இதன்மூலம் மார்ச் 2019 வரையிலான பில் களை ஏப்ரல் 2019 குள் பட்டுவாடா செய்யவும் ஏப்ரல் முதல் மாதாமாதம் INCENTIVE வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது .
3.GDS ஊழியர்களுக்கு புதிதாக அறிமுகம் படுத்தப்பட்ட EMERGENCY விடுப்பு சம்பந்தமாக 01.02.2019 அன்று அஞ்சல் வாரியம் ஒரு பின்னிணைப்பு வழிகாட்டுதலை அறிவித்துள்ளது .அதாவது BPM தோழர்கள் EMERGENCY விடுப்பிற்கு கோட்ட அதிகாரிகளிடமும் இதர GDS அவர்களின் நியமன அதிகாரிகளிடமும் முன் அனுமதி பெற வேண்டும் .
4.நேற்றைய பதிவில்  PLI RPLI பிரிமியம் காசோலை மூலம் செலுத்தலாம் என்ற உத்தரவை சுட்டிக்காட்டியிருந்தோம் .ஒருவேளை காசோலை வங்கிகளால் திருப்பப்பட்டால் என்ற கேள்வியை நமது உறுப்பினர்கள்  கேட்டிருந்தார்கள்.அதற்காக  .PLI இயக்குனரகத்தின் அந்த முழு உத்தரவை இங்கே பதிவிட்டிருக்கிறோம் .
                                               கோட்ட மட்ட செய்திகள் 
டெபுடேஷன் நடைமுறையில் மாதாந்திர பேட்டியில் ஏற்றுக்கொண்ட விஷயங்கள் இன்னும் தலைமை அதிகாரிகளுக்கு வரவில்லை என்பதனையும் காந்திநகர் அஞ்சலகத்தில் ஆட்குறைப்பு விஷயத்தையும் குறித்தும் இன்று அல்லது DPS அவர்களின் வருகைக்கு பின்னர் நமது SSP அவர்களை சந்தித்து பேசவிருக்கிறோம் .
            நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் - SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment