...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, February 28, 2019

அன்பார்ந்த தோழர்களே !
   நீதி வென்றது ...........மீதி வெல்வது நிச்சயம் ...........
  2002& 2003 ஆண்டிற்கான காலிப்பணியிடங்களில் ஊழியர்களை  ..1..1.2004 க்கு பிறகு பணியமர்த்தப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு பழைய பென்ஷன் தான் வழங்கவேண்டும் என்று நமது கோட்ட சங்கத்தின் வழிகாட்டுதலின் பேரில் எட்டு தோழர்களுக்கு வழக்கு தொடர்ந்தோம் .
ஐசக் பால்பாண்டியன் -ஹைருனிசா பேகம் -சங்கரநாராயணன் -ராமலக்ஷ்மி -முருகன் (Dispensary ) -டால்வி -முருகன் (போஸ்ட்மேன் )மற்றும் மூர்த்தி (தேவகோட்டை )
இந்த வழக்கில் 2002-2003 ஆண்டிற்கான காலியிடங்களை தாமதமாக நிரப்பியது அஞ்சல் வாரியத்தின் தவறுதானே தவிர ஊழியர்கள் பொறுப்பேற்கமுடியாது ஆகவே YEAR OF VACANCY (OA 21193/2015)அடிப்படையில் இவர்களுக்கு பழைய ஓய்வூதியம் அனுமதிக்கவேண்டும் என்றும் -இலாகா சேவை 10 வருடங்களுக்கு குறைவாக  இருந்தால் GDS சேவையை கணக்கில் எடுக்கவேண்டும் (OA 1676/2014) என்றும் எடுத்துரைக்கப்பட்டு வாதிக்கப்பட்டது .வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே பழைய ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்ற தீர்ப்பு இவர்களுக்கு பொருந்தும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டியதோடு நில்லாமல் அரசு தரப்பில் மேல்முறையிடு செய்யமுடியாது என்று உன்னத தீர்ப்பை நல்கி வழக்கை முடித்துவைத்தது .இந்த வழக்கில் நமது தரப்பு சார்பாக மதிப்பிற்குரிய R .மலைச்சாமி MA ,ML அவர்கள் பங்கேற்றார்கள் .இந்த வழக்குகளுக்கு எங்களுக்கு உதவி செய்த முன்னாள் மண்டலச்செயலர் அண்ணன் S.சின்ராஜ் அவர்களுக்கும் நெல்லை NFPE சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
                                 மத்திய மண்டலம் முன்னணி.....
தபால்காரரில் இருந்து எழுத்தராக பதவி உயர்வு பெற்ற தோழர்களுக்கு 25.02.2019 முதல் 14.03.2019 வரை IN -HOUSING பயிற்சி அளிக்க உத்தரவை நேற்றே மத்திய மண்டலம் பிறப்பித்துள்ளது .இன்று நமது மண்டலத்தில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
    நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment