முக்கிய செய்திகள்
1.நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த வியாழன் அன்று MACP பதவியுயர்விற்கான கோப்புகள் முடிக்கப்பட்டு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது .விரைவில் (SSP அவர்கள் தலைமையிடம் வந்தவுடன் )அதற்கான உத்தரவுகள் கோட்ட அலுவலகத்தால் பிறப்பிக்கப்படும் .பதவி உயர்வு பெறுகின்ற அனைவருக்கும் கோட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்
2.விதி 38 இன் கீழ் இடமாறுதல் உத்தரவுகள் கடந்தவாரம் நமது மண்டல அலுவலகம் மூலம் வந்துவிட்டது .இதில் CO உத்தரவில் இடம்பெற்ற தோழியர் பூர்ணிமா நாகப்பட்டினம் அவர்களது பெயர் RO உத்தரவில் இடம்பெறாதது குறித்து நமது திருச்சி மண்டல செயலர் அண்ணன் குமார் அவர்களிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளோம்
3.SAP மூலம் ADVANCE OF TA பெறுவதில் உள்ள சிரமங்களை தோழர்கள் ஏற்கனவே கோட்ட சங்க கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்கள் .முதலில் சம்பளம் கிடைப்பதில் தாமதம் பிறகு GPF தாமதம் இன்று TA என தொடரும் நிர்வாக சிக்கல்களை களைந்தெடுத்து ஊழியர் நலன் காக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் .இது குறித்து ஏற்கனவே GM (PA & F) அவர்களிடம் மாநில நிர்வாகம் தொடர்ந்து வழிகாட்டுதல்களை பிறப்பித்துக்கொண்டுதான் இருக்கிறது .இருந்தாலும் பிரச்சினை முழுமையாக தீரவில்லை .
4.தோழர் பால்பாண்டி விஷயத்தில் சென்னை வங்கி நிர்வாகிகளிடம் தோழர் பால்பாண்டி முன்னிலையில் விவாதிக்கப்பட்டது .அவருக்கு பதில் மறு ஜாமின் போட சென்னை வங்கி கடன்தாரர் இருந்தால் தெரிவிக்கவும் .அல்லது பழைய கடன்தாரர்கள் யாரேனும் இவருடன் TRIANGLE ஜாமின் கொடுக்க முன்வந்தாலும் தெரிவிக்கவும் .மற்றபடி வங்கி குழப்பமே தவிர இதில் நிர்வாக தடை ஏதுமில்லை
5.டெபுடேஷன் செல்பவர்கள் மீண்டும் தலைமையிடம் வந்தபிறகுதான் அடுத்த முறை வரும்போது அவர்கள் செல்லவேண்டும் என்ற உத்தரவையும் பதவியுயர்வில் MACP II பெற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டுதல் பிறப்பிக்கவும் மாதாந்திர பேட்டியில் ஒத்துக்கொண்ட ஒன்றுதான் .இருந்தாலும் நமது கோட்டத்தில் இடைவிடாமல் பெய்யும் மேளா மழையில் (மேளா -மினி மேளா -மெகா மேளா ) இந்த உத்தரவுகள் வெளிவர தாமதம் ஏற்படுகிறது .அடுத்த வாரங்களில் எல்லாம் சரியாகும் .
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா
0 comments:
Post a Comment