...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, March 6, 2019

LSG பதவி உயர்வினில் மாநிலம் முழுவதும் ஒரே நிலை எடுத்திட வேண்டும் --மாநிலச்சங்கத்திற்கு வேண்டுகோள் 
           கேடர் சீரமைப்பின் இரண்டாவது பட்டியலின் படி பதவி உயர்வினை அளித்திட தமிழகத்தில் சென்னை மணடலத்தில் ஒரு முடிவு ஏனைய மணடலங்களுக்கு ஒரு முடிவு என்ற நிலை மாற்றப்படவேண்டும் .UNFILLED HSG II பதவிகளை LSG ஆக கணக்கிட்டு LSG ஊழியர்களுக்கு அந்த பதவிகளில் இடமாறுதல் கொடுக்கலாம் என்ற CCR மண்டல முடிவுகள் CPMG அலுவலகத்தால் இன்று வரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை .இதற்கிடையில் தென்மண்டலத்தில் UNFILLED HSG II காலியிடங்களை VACANCY கணக்கீட்டிற்கு மட்டுமே எடுக்கப்படும் என்றும் LSG ஊழியர்களுக்கு இடமாறுதலுக்கு அறிவிக்கமுடியாது என்ற நிலை எடுக்கப்பட்டுள்ளது .இதே நிலைதான் மற்ற மண்டலங்களிலும் இருப்பதாக தெரிகிறது .HSG II பதவிகளை LSG பதவியாக தகுதி இறக்கம் செய்யப்பட்டால் புதிய LSG தோழர்களின் இடமாறுதலில் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் என்ற நம்பிக்கைகள் இன்று மெல்ல மெல்ல குறைய தொடங்கிவிட்டன .ஆகவே மாநிலச்சங்கம் இந்த பிரச்சினையில் தீவீரம் காட்டி CCR மண்டலத்தின் முடிவினை தமிழகத்தின் அனைத்து மணடலங்களுக்கும் அமுல்படுத்திடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் 
மாநில சங்கத்தின் முந்தைய பதிவு இதோ !
கேடர் சீரமைப்பு - 
HSG II பதவிகள் 
குறித்த நிர்வாகத்தின்  நிலைப்பாடு 
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கேடர் சீரமைப்பில் தகுதி உயர்த்தப்பட்டு, தகுதியான ஊழியர் மூலம் நிரப்பப்படாத HSG II பதவிகளை இலாக்காவின் 5.12.2018 உத்திரவுப்படி தற்காலிகமாக  மீண்டும் தகுதி இறக்கம் செய்து LSG பதவிகளாக காட்டுவதில் மாநில அலுவலகம் சுணக்கம் காட்டுகிறது. 
ஆனால் இதுகுறித்த நடவடிக்கைகள் சென்னை பெரு நகர மண்டல PMG அவர்களால் எடுக்கப்பட்டு அந்தப் 
பதவிகள் LSG ஆக அடையாளமிடப்பட்டு கோப்புகள் ஒப்புதலுக்காக 
மாநில அலுவலகம் அனுப்பப்பட்டுள்ளது. 
                          எப்போது பதவி உயர்வு வரும் என்று எதிர்பார்ப்பவர்கள் மத்தியில் இப்போது ஏன் பதவி உயர்வு என மனஉளைச்சலில் இருக்கும் ஊழியர்களின் நிலைமைகளை சரிசெய்திடவேண்டும் .
               கேடர் சீரமைப்பு --இது கேடர்களின் சீரழிவிற்கு அல்ல  என்பதனை நமது மாநிலச்சங்கம் விரைந்து நிரூபிக்கவேண்டும் .
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment