...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, March 12, 2019

                                         முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !
  நமது நெல்லை கோட்டத்தில் LSG பதவிகளை நிரப்புவதற்கான ஒரு ஆலோசனை கூட்டத்தை நமது கோட்ட கண்காணிப்பாளர் உயர்திரு R .சாந்தகுமார் அவர்கள் கூட்டி இருந்தார்கள் .அதன் படி மூன்று சங்க செயலர்களையும் ஒன்றாக அழைத்து கருத்துக்கள் கேட்கப்பட்டது .மொத்தம் உள்ள 59 பதவிஉயர்வு பெறும் ஊழியர்களில் ஏழுபேர் (பார்த்தீபன் கற்பகம் கனகவள்ளி அருணாரணி கீதா வெங்கடேசன் ஹேனா ) நீங்கலாக 52 ஊழியர்களுக்கு பணி மாறுதல் கொடுக்கவேண்டும் என்றும் அதில் 24 ஊர்களுக்கு விருப்பங்கள் இல்லை என்றும் நிர்வாக தரப்பில் விளக்கப்பட்டது .அதனை தொடர்ந்து இன்று ரெகுலர் LSG மூன்றுபேர் மற்றும் காசாளர் பதவியில் உள்ள இருவருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு மீதமுள்ள காலிப்பணியிடங்களை அறிவித்துவிட்டு நிரப்பலாம் என்றும் தமிழகத்திலே முன்மாதிரியாக இடமாறுதலுக்குள் வரும் ஊழியர்களை நாளை மாலை 6 மணிக்கு கோட்ட அலுவகத்திற்கு வரவழைத்து கவுன்சிலிங் அடிப்படையில் இடமாறுதல் வழங்கிடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது .ஆகவே நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் இடமாறுதல் குறித்த 
கலந்தாய்வுக்கு LSG பதவி உயர்வு பெறும் ஊழியர்கள் அனைவரும் பங்கேற்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .முறையான அறிவிப்பு கோட்ட அலுவலகம் மூலம் அறிவிக்கப்படும் .நாளை நடக்கும் கூட்டத்திற்கும் SSP ,ASP (OD ), OA மற்றும் மூன்று கோட்ட செயலர்களும் பங்கேற்கிறார்கள் .இந்த புதிய முயற்சியை செய்வதற்கு ஒப்புக்கொண்ட நமது SSP அவர்களுக்கும் ASP (OD )அவர்களுக்கும் நெல்லை அனைத்து சங்கங்களின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment