சிறப்புடன் நடைபெற்ற மகளிர் தின விழா
நெல்லை NFPE சார்பாக பாளையில் நடைபெற்ற மகளிர் தினவிழா சிறப்பாக நடைபெற்றது .தோழியர் பசுமதி APM A/CS தலைமைதாங்க தோழியர் முத்துப்பேச்சி அவர்கள் வரவேற்புரை மற்றும் வழக்கமான பாணியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் .தோழியர் ஹேனா அவர்களின் இறைவணக்கம் அரங்கத்தில் ஒரு நிசப்தத்தை நிலைநாட்டியது .அதன்பின் மூத்த தோழியர் விஜயராணி அவர்களின் முன்னுரையுடன் கூட்டம் தொடர்ந்தது .நமது சிறப்பு அழைப்பாளர் முனைவர் J.ஜெபமலர் வின்செஸ் மணிமாலா (துணை முதல்வர் சாராள் தக்கர் மகளிர் கல்லூரி ) அவர்களின் சிறப்புரை தோழியர் ஆனந்த கோமதி அவர்களின் மகளிர் தின உரை அதனை தொடர்ந்து தோழியர் S .முத்துலட்சுமி அவர்களின் அருமையான கவியரங்கம் தோழியர் ஹைருனிசாபேகம் அவர்களின் நெல்லை தொழிற்சங்கத்தில் தோழியர் பங்கு எனும் அனுபமிக்க உரை அதனைத்தொடர்ந்து இறுதியாக தோழியர் விஜயலட்சுமி அவர்களின்
தீர்மானங்களுடன் கூடிய நன்றியுரையோடு விழா இனிதேநிறைவுற்றது .
தீர்மானங்கள்
1.மகளிர் தினவிழாவை ஆண்டுதோறும் சிறப்பாக நடத்துவது
2.மாதாந்திர பேட்டிகளில் தோழியர்களின் பிரதிநிதியாக மாதம் தோழியர் ஒருவருக்கு வாய்ப்பு .
3.ஆர்ப்பாட்டங்கள் /தர்ணா போன்ற இயக்கங்களில் தோழியர்களை முழுமையாக ஈடுபடவைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
தோழியர்கவிஞர் S.முத்துலட்சுமி PA பாளையம்கோட்டை அவர்களின் புரட்சி வரிகள்
பார்த்துவிட்டு சாகட்டும் -பழைய சமூகம்
எட்டி உதைத்த போதும்
எச்சில் உமிழ்ந்த போதும்
எட்டு வைத்து வளர்ந்ததாலோ
எட்டிலே மார்ச் எட்டிலே மகளிர் தினம் ...
ஆசைப்பட்டதெல்லாம் ஆண் ஆக
ஆசிரியராக மட்டுமே ஆகி கொண்டிருந்தவள் -இன்று
கரண்டி தாண்டி கணிணியையும் தீண்டியவள்
விதி என்று வீழ்ந்து கிடந்தவள்
விழி என்று தன்னையே எழுப்பியவள்
வெறும் பாறை என்று ஒதுக்கிய உலகத்தில்
தன்னையே செதுக்கி
சிற்பியும் அவளாய் -சிலையும் அவளாய் !
நின்று காட்டியவள்
புல் என மிதித்த காலில்
முள் என குத்தி நின்றவள்
அங்கங்கே அவலங்கள்
அரங்கேறும் பொழுதெல்லாம்
மழையில் நனைந்த பறவையாய்
மனதை சிலிர்த்து கொண்டு
மீண்டும் பறக்கும் இப்பறவை !
குறுகிய எண்ணங்களில்
சறுக்கியவைதான் நம் கால்கள்
எண்ணங்களை மாற்று -வாழ்வில்
வண்ணங்களை ஏற்று !
கற்றுக்கொள் ஏட்டை மட்டுமல்ல
எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் வரை !
கவலைப்படாமல் தோற்று போ !
நல்லதை செய்ய நாணம் தவிர் !
செல்வது நேர்வழி செல்
பிறர் சொல்லை புறந்தள்ளு !
சமூகம் எப்போதும்
நடந்ததை வைத்தே
நடப்பதை சொல்லும் !
படைப்பதை புதிதாக்கு
பார்த்துவிட்டு சாகட்டும் -இந்த
பழைய சமூகம்
---------------------------------------------
0 comments:
Post a Comment