...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, June 21, 2019

                          பற்றாக்குறையோடு IPPB .......
கடந்த 2018 ஆண்டு தொடங்கப்பட்ட INDIA POST  PAYMENT BANK முற்றிலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனம் என்ற அறிவிப்போடு ஆரம்பிக்கப்பட்டது . தனது முதல் ஆண்டிலேயே 165 கோடி பற்றாக்குறை என்றும் இனி வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கும் என்றும்  IPPB  அறிவித்துள்ளது .
     ஆரம்பத்தில் இதற்காக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த  தொகை 1435 கோடி ..இதை கொண்டுதான் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டன . .அலுவலகம்  முழுவதும் குளிரூட்டப்பட்ட அறை .அதற்கென  சாப்ட்வேர் இணையதள வசதி சுமார் 3500 ஊழியர்களுக்கு ஊதியம் அதுபோக மேல்மட்ட அளவில் நிர்வாக பொறுப்பெக்கென்று ஒப்பந்தஅடிப்படையில் தற்காலிக அதிகாரிகள் (குறைந்தபட்சம் நான்காண்டுகள் -அவர்களுக்கு மிக அதிகமான ஊதியம் ) மொபைல் போன்கள் RBI க்கு செக்யூரிட்டி என கொடுக்கப்பட்ட 400 கோடி போன்ற  நிர்வாக செலவுகள் ஒருபக்கம்  . இவை செலவினங்கள் .வருமானம் என்று பார்க்கும் போது  அதன் வருவாயை பெருக்கும் அளவிற்கு IPPB வளர்ந்திருக்கிறதா அல்லது பிரபல மாகியிருக்கிறதா என்று பார்க்கவேண்டும் .எடுத்த எடுப்பிலே 17 கோடி கணக்குகள் உள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டது .ஆனால் இருக்கின்ற நமது ஊழியர்களுக்கு கணக்குகளை தொடங்குவதும் அதை POSB கணக்கோடு இணைப்பதோடு நின்றிருக்காமல் இன்னும் வெளி வாடிக்கையாளர்களை இழுக்க நமது துறை தவறிவிட்டதோ என நினைக்க தோன்றுகிறது .
         FUND TRANSFER -BILL PAYMENT  -INSURANCE -RECHARGE என இருந்தாலும் இவைகள் எல்லாம் எந்த அளவிற்கு முழுமை பெற்றிருக்கிறது என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும் .உதாரணமாக இன்சூரன்ஸ் செலுத்தும் வசதி இருந்தாலும் நமது PLI -RPLI பிரிமியம் செலுத்தமுடியாத ஒரு அவலநிலை இன்றும் தொடர்கிறது .இன்றைய போட்டிநிறைந்த வங்கி துறைகளின் மத்தியில் நாம் என்ன புதுமையை கொடுக்கப்போகிறோம் .
பஜாஜ் அலைன்ஸ் ஒப்பந்தம் ,பஞ்சாப் நேஷனல் வங்கியோடு ஒப்பந்தம் என சொல்லப்பட்ட  ஒப்பந்தங்களை அமுல்படுத்தியிருக்க வேண்டாமா ? இந்த பற்றாக்குறையை தாண்டி லாபம் கிடைக்க போவது எப்போது ? DOOR STEP  சேவை எந்தஅளவிற்கு பொதுமக்களுக்கு சென்றிருக்கிறது என்பதை ஆய்வு செய்வது யார் ? இருக்கிற QR வசதிகளை மேம்படுத்த அந்தந்த பகுதிகளில் கோட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுத்தால்கூட போதும் .
                    கிளை அஞ்சலகங்களில் உங்கள் அலுவலகம் பற்றாக்குறையில் செயல்படுகிறது .கிளை அஞ்சலக வருவாயை பெருக்கவும் /உங்கள் அலுவலகத்தை நீட்டிக்கவும் என்ன செய்ய போகிறீர்கள் என பக்கம்பக்கமாக BPM தோழர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விடும் இன்றைய காலகட்டத்தில்  முதல் ஆண்டே பற்றாக்குறையோடு 
நிற்கும் IPPB சேவையை உயர்த்த என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறார்களோ ? தெரியவில்லை .
                            அஞ்சல் துறையை காப்போம் !
                                அஞ்சல் சேவையை மேம்படுத்த துணை நிற்போம் !
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் NELLAI NFPE 

0 comments:

Post a Comment