...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, June 10, 2019

      அன்பார்ந்த தோழர்களே !
                                  
                   நமது அஞ்சல் மூன்று  தமிழ் மாநிலச்சங்கத்தின் சார்பாக இருமாதத்திற்கொருமுறை பத்திரிக்கை ஒன்றை வெளியிட மாநிலச்சங்கம் முடிவெடுத்துள்ளது ..இதழ் ஒன்றின் விலை ரூபாய் 10 மட்டுமே .நமது கோட்டசங்கத்தின் மூலம் எத்தனை இதழ் வேண்டும் என்ற விவரத்தை ஓரிருநாளில் நாம் தெரிவிக்கவேண்டியுள்ளது .தொழிற்சங்க செய்திகளை அறிந்துகொள்ள ஆர்வமுள்ள தோழர்கள் தங்கள் பெயர்களை கோட்ட செயலருக்கு வாட்ஸாப்ப் மூலமாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம் .ஏற்கனவே    நம்மிடம் உழைக்கும் வர்க்கம் மற்றும் திரு .மாலிக் அவர்களின் கலங்கரைவிளக்கம் ஏடுகள் வந்துகொண்டிருக்கின்றன .இருந்தாலும் மாநிலச்சங்கத்தின் அதிகாரபூர்வ ஏடான தமிழக அஞ்சல் முழக்கம்  பத்திரிக்கைக்கும் உங்கள் ஆதரவை நல்கும் படி கேட்டு கொள்கிறோம் 
                                    போஸ்டல் கிளார்க் 
அண்ணன் பாலு அவர்கள் மாநில செயலராக இருந்த காலத்தில் பல்வேறு தடைகளுக்கு இடையில் வெளிவந்த பத்திரிக்கை தான்  போஸ்டல் கிளார்க் எனும் மாத பத்திரிக்கை .அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்கும்  போர்முரசாக  திகழ்ந்தது .கோட்ட மட்ட  அதிகாரிகள் முதல் மாநில மட்ட பெரிய அதிகாரிகளின் அதிகார அத்துமீறல்களை அடக்குமுறைகளை மிக துணிச்சலோடு வெளிக்கொண்டு வந்த பத்திரிக்கை தான் போஸ்டல் கிளார்க்  பத்திரிக்கை .நம்மைவிட பல அதிகாரிகள் மிகமிக ஆவலோடு படித்த பத்திரிக்கை அது .இந்த இதழில் எந்த அதிகாரி சிக்கியிருக்கிறார் அடுத்த இதழில் யார் என்ற அச்சம் கலந்த ஆர்வத்தோடு அதிகாரிகளும் வாங்கி படித்த பொற்காலம் அது .அஞ்சல் மூன்று ஊழியர்கள் தனி போர்க்கோலம் பூண்ட புரட்சி நாட்கள் அது .
                       இருமாதந்திர பேட்டி -நான்கு மாத த்திற்கொருமுறை பேட்டி என வாய்ப்பு கிடைக்கும் இடத்திலெல்லாம்  ஊழியர்நலனுக்காக களமாடிய சங்கம் -ஒட்டுமொத்த இளையவர்களின் நெஞ்சங்களை களவாடிய சங்கம் நமது அன்றைய மாநிலச்சங்கம் என்பதை நினைத்து பார்க்கிறேன் ..
                               மீண்டும் அந்த வரலாறு திரும்பவேண்டும் -அஞ்சல் மூன்றின் பிரச்சினைகள் தீர்வதற்கு எழுத்து மட்டுமல்ல எழுச்சி கலந்த இயக்கம் வேண்டும் என்று நிரூபித்த தலைமை அது 
50% Writing 50% Fighting என 100% வெற்றிகண்ட காலம் அது 
.ஆம் அந்த திசையில் நாமும் பயணிப்போம் .
                          வீரமும் -துணிச்சலும் அடுத்தவர் ஊட்டுவதல்ல -அது 
                          பிறப்பின் பாக்கியம் -இயல்பாய் வளர வேண்டியது 
                          இறுதிவரை உறுதியாய் தொடர வேண்டியது .
                                              தேனி கோட்ட மாநாடு 
                        தேனி கோட்ட புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் 
09.06.2019 அன்று நடைபெற்ற தேனி கோட்ட மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் உமாபதி செயலர் பரமசிவம் நிதிச்செயலர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் மாநாட்டை முன்னின்று நடத்தி காட்டிய தோழர் செல்லத்துரை மோகன் முன்னாள் தலைவர் நாகேந்திரன் அவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் 
வாழ்த்துக்களுடன் SK ஜேக்கப் ராஜ் நெல்லை 

0 comments:

Post a Comment