அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
முக்கிய செய்திகள்
*நமது முன்னாள் பொதுச்செயலர் தலைவர் KVS அவர்கள் தொகுத்துள்ள அஞ்சல் ஓய்வூதியர் எனும் நூல் விற்பனைக்கு உள்ளது .ஓய்வூதியம் குறித்த அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய நூல் ஒன்றின் விலை ரூபாய் 100. தேவைப்படுவோர் கோட்ட சங்கத்தை தொடர்புகொள்ளவும் .
* அஞ்சல் நான்காம் பிரிவு சங்கத்தின் 28 வது அகிலஇந்திய மாநாடு கர்நாடகா மாநிலம் உடுப்பி நகரில் வருகிற ஏப்ரல் 23 முதல் 25 வரை நடைபெறுகிறது .தபால்காரர் சங்க மாநாட்டிற்கு வரவிரும்பும் அஞ்சல் நான்கின் தோழர்கள் P 4 கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா அவர்களை தொடர்புகொள்ளவும் .வருகிற சனிக்கிழமை பயணத்திற்கான ரயில் முன்பதிவு செய்யப்படுகிறது ..
* கோவையில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தென்மண்டல செயலராக மதுரை கோட்ட செயலர் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்கள் .நீண்ட நாட்களுக்கு பிறகு தென்மண்டலத்தில் மதுரையை சார்ந்த தோழர் மண்டலச்செயலராக பொறுப்பேற்றிருப்பது தென்மண்டல அஞ்சல் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது .தோழர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள் .
*கோவையில் நடைபெற்ற மாநில மாநாட்டில் அமைப்புநிலை விவாதத்தில் கலந்துகொண்டு நமது கோட்ட சங்கம் சார்பாக நான் (ஜேக்கப் ராஜ் ) பேசும்பொழுது புதியபென்ஷன் திட்டத்தை மட்டுமே பிரதானப்படுத்தி தனி வேலைநிறுத்தம் செய்யவேண்டும் என வலியுறுத்தினேன் .அதையே NPS குறித்த கருத்தரங்கிலும் வலியுறுத்தப்பட்டது .மத்தியஅரசு ஊழியர்கள் மகா சம்மேளன மாபொது செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட நம்முடைய பொதுச்செயலர் தனது உரையிலும் NPS க்கு எதிரான தனி போராட்டங்கள் நடைபெறும் என அறிவித்துள்ளார் ..மாநிலசங்கமும் அதற்கான தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது .
இளைய தோழர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க இயக்கங்களை நடத்திட முடிவெடுத்துள்ள NFPE பேரியக்கம் 0வென்றெடுக்க வாழ்த்துகிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment