...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, February 15, 2020

ன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                            சங்கம்  சாதித்தது ! சோதனைகளை தகர்த்து நெல்லையில் NFPE சங்கம் சாதித்துக்கொண்டிருக்கிறது 
  பாளையம்கோட்டையில் பார்சல் நோடல் பட்டுவாடா மையம் தொடங்கப்படுவதை ஓட்டி இரண்டு தபால்காரர்களை குறைக்க போடப்பட்ட உத்தரவை நமது NFPE பேரியக்கத்தின் முயற்சியால் 
மாற்றப்பட்டுள்ளது .தற்காலிகமாக இரண்டு OUTSIDER களை வைத்து தினக்கூலி + 100 என்கிற அடிப்படையில் நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது .இனிமேல் போஸ்ட்மேன் DIVERSION என்றால் தொழிற்சங்கத்தை கலந்து முடிவுகள் எடுக்கப்படும் என்று அறிவித்த நெல்லை கோட்ட  நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
     அடுத்த வெற்றிக்காக விரைவில் காத்திருப்போம் .
நேற்றைய அஞ்சல்நான்கின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட ஏனைய முடிவுகள் 
1.வள்ளியூர் பணசேர்ப்பாளர் மற்றும் பணகுடி கூடுதல் தபால்காரர் இவைகளை விரைந்துமுடித்திடவேண்டும் .
2.தபால்காரர் மொபெல் முழுமையாக மாற்றப்பட்டு அனைவருக்கும் புதிய  மொபெல் வழங்கவேண்டும் 
3.தமிழக அஞ்சல் மூன்று மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானமான புதியபென்ஷனை ரத்துசெய்யவேண்டும் என்ற ஒரேகோரிக்கையை மட்டும் வைத்து வேலைநிறுத்தம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை அஞ்சல்நான்கு அகிலஇந்திய மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றவேண்டும் 
4.தபால்காரரில் இருந்து எழுத்தராக தேர்வுபெற்ற இளைய தோழர்  ராமேஸ்வரன் மற்றும் நமது கோ(கூ )ட்டத்திற்கு வந்திருந்த தோழர் தங்கமணி SPM முன்னிர்பள்ளம் ஆகியோருக்கு பொன்னாடைபோர்த்தி வரவேற்பு கொடுக்கப்பட்டது 
5. 2019 இல் LSG நிரப்பப்பட்ட இடங்களில் ஏற்கனவே 2019 ல் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற LGO. க்களை கொண்டு பதவி உயர்வு வழங்கிட கோரிதீர்மானம் நிறைவேற்றப்பட்டது .நேற்றே இதுகுறித்து NFPE அஞ்சல்மூன்று  மாநிலச்சங்கம் மாநில நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதை  இந்தசெயற்குழு வரவேற்கிறது .
6.உடுப்பியில் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் அகிலஇந்திய மாநாட்டிற்கு இதுவரை 13 தோழர்கள் தங்கள் பெயர்களை பதிவுசெய்துள்ளனர் .
7 செயற்குழுவில் நல்லதொரு ஆலோசனைகளை வழங்கிய அஞ்சல் மூன்றின் செயல்தலைவர் தோழர் கண்ணன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
8.HSG II பதவி உயர்வு பெற்றவர்களில் விடுபட்டுப்போன நம் மண்ணின் மைந்தர் தோழர் ரவிமோகன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் 
                                    நெல்லையில் எழுத்தராக தேர்வுசெய்யப்பட்ட அனைத்து தோழர்களுக்கும் செயற்குழுவில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது .கிட்டத்தட்ட புதிய தோழர்களில் 16 தோழர்களை நமது NELLAI NFPE II வாட்ஸாப்ப் யில் இணைத்துள்ளோம் .விடுபட்ட தோழர்களின் வாட்ஸாப்ப் எண் பெற்றுக்கொண்டு மற்றவர்களையும் இணைத்திடுவோம் .
நன்றி ..நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் ..இப்படை தோற்கின் எப்படை வெல்லும் .
அஞ்சல் துறையை பாதுகாக்க NFPE யை வலுப்படுத்துவோம் .
போராடுவோம் !வாதாடுவோம் ! செயல்படுத்துவோம் !
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 





0 comments:

Post a Comment