...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, February 3, 2020

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
     கோவையில் 09.02.2020 முதல் 11.02.2020 வரை நடைபெறும் அஞ்சல் மூன்றின் 39 வது மாநில மாநாட்டிற்கு நமது கோட்டத்தில் இருந்து மொத்தம் 30 தோழர்கள் எழுச்சியோடு கலந்துகொள்கிறார்கள் .இதுவ்ரை விடுப்பு விண்ணப்பிக்காதவர்கள் உடனே விடுப்பு விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம் .சார்பாளர் /பார்வையாளர்கள் கட்டணம் ரூபாய் 2000 என வரவேற்புக்குழுவினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
*LIC  பங்குகளை தனியாருக்கு விற்கும்  மத்திய அரசின் கொள்கை முடிவை எதிர்த்து நாளை 04.02.2020 நாடுமுழுவதும் LIC ஊழியர்கள் பங்கேற்கும் ஒருமணிநேர வெளிநடப்பு போராட்டம் வெல்லட்டும் .
*நெல்லையில் புத்தக திருவிழா --தமிழ்வளர்ச்சி பண்பாட்டு நிறுவனம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள்  இணைந்து நடத்தும் 4 வது புத்தக திருவிழா பாளையம்கோட்டை VOC திடலில் பெப்ருவரி 1 ம் தேதி தொடங்கி 10 ம் தேதிவரை நடைபெறுகிறது .தினமும் மாலையில் கருத்திற்கினிய இலக்கிய கூட்டங்கள் நடைபெறுகிறது .வேலைப்பளு -அலுவலகம் -என தொடர் மனஅழுத்ததில் உள்ள ஊழியர்கள் தங்கள் மனச்சுமையை குறைக்க சென்றுவாருங்கள் .ஒரு புத்துணர்ச்சி பெறுவீர்கள் .
*அரசுப் பள்ளி, அரசு மருத்துவமனை, அரசுப் போக்குவரத்து , அரசுத் தொழிலகங்கள் , பொதுத்துறை நிறுவனங்கள் … என எல்லாம் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது இப்பொது நிலைமை கைமீறிப் போய்க் கொண்டிருக்கிறது .
உழைப்பாளி மக்களே ! 
ஆபத்தை அதன் சகல பரிமாணங்களோடும் அறிவீர் ! 
சமூக அக்கறையோடு விழித்து எழுவீர் ! 
இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment