அன்பு தோழியர் MP.விஜயா LSG OA கோட்ட அலுவலகம்அவர்களின் பணிநிறைவு --சிறக்கட்டும் 29.02.2020
நான்காண்டுகளுக்கு ஒருமுறையாம்
பிப்ரவரி 29 யில் பிறந்திட்ட
அதிஷ்டசாலி யில் ஒருவர் நீங்கள்
பிறப்பிற்கும் சிறப்பு சேர்த்திட்ட
பிரபலமானவர்களின் வரிசையில் நீங்களும் ஒருவர்
ஆரம்ப நாட்களில் --
எத்தனை வகையான விடுப்பு --எவையெல்லாம்
எதனோடு இணைப்பு என
விடுப்பு விதிகளுக்கெல்லாம் -புது
விளக்கம் கண்டுபிடித்தவர்
அன்றுபோலவே இன்றும் என்றும்
இயல்பாய் இருக்கும் இனிய வரத்தை
இறைவனிடம் இலவசமாய் பெற்றவர்
பணியாற்றிய இடங்களிலெல்லாம்
தனக்கென்ற தடத்தை பதித்தவர்
சொல்லப்போனால் நடமாடும் ஆங்கில அகராதி
ஆனாலும் ஒருநாளும் அவரிடம் இல்லை அகராதி
கேள்வி ஒன்று கேட்டால் போதும்
கொட்டும் அருவியாய் விளக்கங்கள் வந்து கொட்டும்
நாம் கேட்ட கேள்வியையும் தாண்டி
கதைகளும் உவமைகளும்
வரலாறும் இலக்கியமும்
வற்றாத அருவிபோலல்லவா
நிற்காமல் இங்கு கொட்டும்
LSG பதவி உயர்வை ஏற்று -மிக ஆர்வத்தோடு
கோட்ட அலுவலக்திற்கு வந்தார்கள்
புதிய தொழில்நுட்பங்களும் இவரிடம் கட்டுப்பட்டன
GPF யில் தொடங்கி CEA வரை சளைக்காமல்
சலிக்காமல் சமாளித்து காட்டியவர்
சமகால இளையவர்களைப்போல்
சரிசமமாய் பணியாற்றியவர்
இவர் காலத்தில் தான் குழந்தைகள் கல்விஉதவி
பழைய காலத்திற்க்கும் சேர்த்து கிடைத்திட
நேர்த்தியாய் கோப்புகளை நகர்த்தியவர்
புறநிலைஊழியர்களுக்கான உத்தரவுகளை
தமிழில் சுற்றுக்குவிட்டு மெருகேற்றியவர்
இப்போதுதான்
விருதுநகரில் இருந்து வந்தது போல் இருந்தது
முப்பது வருடங்களை நெருங்கப்போகிறது
அனாலும் அக்கா மாறவில்லை
மாறப்போவதில்லை
அதே பாசம் அதே நேசம்
அதே கேள்வி அதே பதில்
தொழிற்சங்கத்தில் அதே ஈடுபாடு
மாநாடுகளிலும் அதே பங்களிப்பு
வேலைநிறுத்தத்திலும் அதே அர்ப்பணிப்பு
ஓய்வுநாளிலும் அதே பரபரப்பு
அக்கா மாறவில்லை --இனி
மாறப்போவதுமில்லை
மாறாத அன்போடும் --மறவாத நினைவுகளோடும்
ஓய்வுக்காலங்கள் சிறக்க வாழ்த்தி மகிழ்கின்றோம்
தோழமையுடன்-- NELLAI NFPE
-----------------------------------------------------------------------------------------------------
அன்பு தோழியர் K .அனுராதா LSG ACCOUNTANT கோட்ட அலுவலகம் அவர்களின் பணிஓய்வு காலங்கள் சிறக்கட்டும் --29.02.2020
கணக்கு பிரிவிற்கு கிடைத்திட்ட
மற்றுமொரு நிறைகுடம்
LSG கணக்காளர் என்ற பெருமையோடு
ஓய்வு பெறுகிறார்.
தலைவர் சௌந்தர பாண்டியன்
காலம்தொட்டு --அவர் தம்பிகளாம்
எங்கள் காலங்களிலும்
NFPE என்ற பேரியக்கத்தின்
பெருமைமிகு உறுப்பினராய் இன்றுவரை
அங்கம் வகித்தவர்
பரபரப்போ படப்பபோ
முணுமுணுப்போ ஏன்
முகசுளிப்போ சிறிதும் இன்றி
அலுவலக பணியை
ஆர்வத்தோடு செய்து முடித்தவர்
வேலைநிறுத்தம் என்று சொன்னாலும் சரி
தொழிற் சங்க தேர்தல் என்றாலும் சரி
என்னாளும் நமக்கு ஆதரவினை தந்து
பெரும்பான்மைக்கு துணை நின்றவர்
நெருக்கடியான காலங்களிலும்
NFPE க்கு ஆதரவு அளித்தவர்
அம்பைக்கு சென்ற நாட்களிலும்
அசையாத கொள்கையை நிலைநாட்டியவர்
தங்களின் பணிஓய்வு காலங்கள்
சிறந்திட வாழ்த்துகிறோம்
வாழ்த்தி மகிழ்கின்றோம்
--------- NELLAI NFPE --------
நான்காண்டுகளுக்கு ஒருமுறையாம்
பிப்ரவரி 29 யில் பிறந்திட்ட
அதிஷ்டசாலி யில் ஒருவர் நீங்கள்
பிறப்பிற்கும் சிறப்பு சேர்த்திட்ட
பிரபலமானவர்களின் வரிசையில் நீங்களும் ஒருவர்
ஆரம்ப நாட்களில் --
எத்தனை வகையான விடுப்பு --எவையெல்லாம்
எதனோடு இணைப்பு என
விடுப்பு விதிகளுக்கெல்லாம் -புது
விளக்கம் கண்டுபிடித்தவர்
அன்றுபோலவே இன்றும் என்றும்
இயல்பாய் இருக்கும் இனிய வரத்தை
இறைவனிடம் இலவசமாய் பெற்றவர்
பணியாற்றிய இடங்களிலெல்லாம்
தனக்கென்ற தடத்தை பதித்தவர்
சொல்லப்போனால் நடமாடும் ஆங்கில அகராதி
ஆனாலும் ஒருநாளும் அவரிடம் இல்லை அகராதி
கேள்வி ஒன்று கேட்டால் போதும்
கொட்டும் அருவியாய் விளக்கங்கள் வந்து கொட்டும்
நாம் கேட்ட கேள்வியையும் தாண்டி
கதைகளும் உவமைகளும்
வரலாறும் இலக்கியமும்
வற்றாத அருவிபோலல்லவா
நிற்காமல் இங்கு கொட்டும்
LSG பதவி உயர்வை ஏற்று -மிக ஆர்வத்தோடு
கோட்ட அலுவலக்திற்கு வந்தார்கள்
புதிய தொழில்நுட்பங்களும் இவரிடம் கட்டுப்பட்டன
GPF யில் தொடங்கி CEA வரை சளைக்காமல்
சலிக்காமல் சமாளித்து காட்டியவர்
சமகால இளையவர்களைப்போல்
சரிசமமாய் பணியாற்றியவர்
இவர் காலத்தில் தான் குழந்தைகள் கல்விஉதவி
பழைய காலத்திற்க்கும் சேர்த்து கிடைத்திட
நேர்த்தியாய் கோப்புகளை நகர்த்தியவர்
புறநிலைஊழியர்களுக்கான உத்தரவுகளை
தமிழில் சுற்றுக்குவிட்டு மெருகேற்றியவர்
இப்போதுதான்
விருதுநகரில் இருந்து வந்தது போல் இருந்தது
முப்பது வருடங்களை நெருங்கப்போகிறது
அனாலும் அக்கா மாறவில்லை
மாறப்போவதில்லை
அதே பாசம் அதே நேசம்
அதே கேள்வி அதே பதில்
தொழிற்சங்கத்தில் அதே ஈடுபாடு
மாநாடுகளிலும் அதே பங்களிப்பு
வேலைநிறுத்தத்திலும் அதே அர்ப்பணிப்பு
ஓய்வுநாளிலும் அதே பரபரப்பு
அக்கா மாறவில்லை --இனி
மாறப்போவதுமில்லை
மாறாத அன்போடும் --மறவாத நினைவுகளோடும்
ஓய்வுக்காலங்கள் சிறக்க வாழ்த்தி மகிழ்கின்றோம்
தோழமையுடன்-- NELLAI NFPE
-----------------------------------------------------------------------------------------------------
அன்பு தோழியர் K .அனுராதா LSG ACCOUNTANT கோட்ட அலுவலகம் அவர்களின் பணிஓய்வு காலங்கள் சிறக்கட்டும் --29.02.2020
கணக்கு பிரிவிற்கு கிடைத்திட்ட
மற்றுமொரு நிறைகுடம்
LSG கணக்காளர் என்ற பெருமையோடு
ஓய்வு பெறுகிறார்.
தலைவர் சௌந்தர பாண்டியன்
காலம்தொட்டு --அவர் தம்பிகளாம்
எங்கள் காலங்களிலும்
NFPE என்ற பேரியக்கத்தின்
பெருமைமிகு உறுப்பினராய் இன்றுவரை
அங்கம் வகித்தவர்
பரபரப்போ படப்பபோ
முணுமுணுப்போ ஏன்
முகசுளிப்போ சிறிதும் இன்றி
அலுவலக பணியை
ஆர்வத்தோடு செய்து முடித்தவர்
வேலைநிறுத்தம் என்று சொன்னாலும் சரி
தொழிற் சங்க தேர்தல் என்றாலும் சரி
என்னாளும் நமக்கு ஆதரவினை தந்து
பெரும்பான்மைக்கு துணை நின்றவர்
நெருக்கடியான காலங்களிலும்
NFPE க்கு ஆதரவு அளித்தவர்
அம்பைக்கு சென்ற நாட்களிலும்
அசையாத கொள்கையை நிலைநாட்டியவர்
தங்களின் பணிஓய்வு காலங்கள்
சிறந்திட வாழ்த்துகிறோம்
வாழ்த்தி மகிழ்கின்றோம்
--------- NELLAI NFPE --------
0 comments:
Post a Comment