...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, February 24, 2020

                                                நெல்லை கோட்ட செய்திகள் 
*மெக்..காமிஷ்  மென்பொருளில் ஏற்பட்டுள்ள அடுத்த மாற்றம் -இனி  PLI /RPLI  பாலிசிதாரருக்கு அவர்களது மொபைல் எண் மற்றும் ஈமெயில்  ID இவைகளை கவுண்டர் PA  மூலம் UPDATE செய்துகொள்ளலாம் .ஆன்லைன் மூலம் பிரிமியம் செலுத்துவதற்காக இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
* LGO வில் இருந்து PA ஆக தேர்ச்சிபெற்றுள்ள தபால்காரர் தோழர்கள் தங்களது புதிய ஊதியத்தை 01.07.2020 முதல்     நிர்ணயம் செய்திட  OPTION கொடுப்பது அதிக பயனுள்ளதாக இருக்கும் ..
*                            புதிதாக  எழுத்தர்களாக பணியில்  சேர்ந்துள்ள ஊழியர்களுக்கான சில நினைவுகள் -தோழர் சிவசங்கரன் தென்காசி  அவர்களின் பதிவினை தொடர்ந்து ....... 
           அன்பார்ந்த தோழர்களே தோழியர்களே வணக்கம்.
1.கடந்த காலத்தில் எழுத்தர் தேர்வில் தேர்ச்சி பெற்று மதுரைக்கு (PTC TRAINING CENTER) பயிற்சிக்கு செல்லும் தோழர் தோழியர்களுக்கும் கடந்த காலத்தில் உதவி தொகை ( STIPEND ONLY) மட்டுமே உண்டு.
2012 வருடத்திற்கு பிறகு  தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஊழியர்களுக்கு பயிற்சிக்கு செல்லும் போதே சம்பளத்துடன் கூடிய அனைத்துவிதமான படிகளும்  வழங்கப்படுகின்றன.
2இரட்டிப்பு மகிழ்ச்சி என்னவென்றால் பயிற்சி காலத்தையும் பணிக்காலத்தோடு சேர்த்துக் கொள்ளப்படும்.
3.பழைய நாட்களில் ரிசல்ட் வந்தபிறகும் வாரக்கணக்கில் /மாதக்கணக்கில்  காத்திருக்கவேண்டிய நிலை இருந்தது .ஆனால் இன்று PTC செல்லும்முன்பே IN HOUSING பயிற்சிகள் கொடுக்கப்பட்டு உங்களை எழுத்தராகவே மாற்றியதெல்லாம்  நமது இயக்கம் பெற்றுத்தந்த வாய்ப்புகள் என்பதனை நினைவில் கொண்டிடவேண்டும் .நமது கோட்டத்தில் அனைத்து புதிய எழுத்தர்களும் (25/25)நமது NFPE யில் இணைந்ததை நாடு வாழ்த்துகிறது -நாமும் வாழ்த்துவோம் 
                
சித்திரச் சோலைகளே
உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே
முன்னர் எத்தனை தோழர்கள் 
ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே... 
உங்கள் வேரினிலே...

ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே
உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ
நீங்கள் ஊர் தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய் அல்லவோ 
உதித்தது மெய் அல்லவோ...(புரட்சி கவிஞர் )
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 



0 comments:

Post a Comment