...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, February 19, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                    நெல்லை கோட்ட செய்திகள் 
*நமது கோட்டத்தில் புதிதாக எழுத்தராக பதவி ஏற்ற( 3+22) 25 ஊழியர்களில் இதுவரை 24 ஊழியர்கள் நமது NFPE சங்கத்தில் தங்களை இணைத்துள்ளார்கள் என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம் .இன்று இது 25/25 எனும் 100 சதத்தை நிச்சயம் எட்டிவிடும் .இதற்காக தலமட்டங்களில் உழைத்த NFPE இயக்கத்தின் முன்னனி தோழர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
*மேலும் இந்த ஆண்டு உறுப்பினர் சேர்க்கையில் தோழியர் மீனா கோமதி  போஸ்ட்மாஸ்டர் வண்ணார்பேட்டை மற்றும் கிளாடடிஸ் போஸ்ட்மாஸ்டர் பெருமாள்புரம் ஆகியோர் மீண்டும் NFPE யில் இணைந்துள்ளனர் .அவர்களையும் நாம் வாழ்த்தி வரவேற்கிறோம் .
*இந்த ஆண்டு LRPA பட்டியலில் இருந்து அனைத்து ஊழியர்களும்  PA ஆக RE DESIGNATE ஆகிறார்கள் .அப்படி PA ஆகும் ஊழியர்கள் தங்களுக்கு எந்த அலுவலகத்தில் PA ஆக வேண்டும் என்கின்ற விருப்பகடிதத்தை இன்றே கொடுத்துவிடுங்கள் . 
                          SB /RPLI  முடிஞ்சாச்சு இல்லை முடிச்சாச்சு ? இப்போ IPPB மேளா 
இந்த வாரம் முழுவதும் 17.02.2020 முதல் 22.02.2020 வரை மெகா IPPB மேளா நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .இதை பயன்படுத்தி ஒவ்வொரு உபகோட்ட அதிகாரிகளும் அவரவர் பாணியில் ஊழியர்களை கடுமையாக நடத்த துவங்கியுள்ளனர் .நேற்று இதுகுறித்து நமது கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் கொடுத்துள்ளோம் .இதையும் மீறி ஊழியர்களின் மன உளைச்சலுக்கு ஆளாக்கும்  உபகோட்ட அதிகாரிகள் மீது மாநிலச்சங்கத்தின் மூலம் புகார் கொடுக்கப்பட்டு தொழிற்சங்கநடவடிக்கைகளில் நெல்லை கூட்டு போராட்டக்குழு களம் இறங்கும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .பணிமுடிந்தபின்பும் தபால்காரர்களை காக்க வைப்பது -குறிப்பிட்ட கணக்குகளை பிடிக்காவிட்டால் OFFICIATING வாய்ப்பை பறிப்பது என அப்பாவி  GDS ஊழியர்களின் வயிற்றில் அடிப்பது நியாயமா ?
                           தோழர்களே !சிந்தீப்பீர் ! குட்ட குட்ட குனிபவனும் முட்டாள் குனிய குனிய குட்டுபவனும் முட்டாள் !
                           சிறு புழு கூட தாக்குண்டால் தன் எதிர்ப்பை பதிவு செய்யும் .
                                நிமிரும் பொழுதெல்லாம் 
                                நசுக்க படுவதற்கு 
                                தொழிலாளி சாக்கடை புழுக்கள் அல்ல .......
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
                          

0 comments:

Post a Comment