...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, February 14, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                         அஞ்சல் நான்கின் அவசர செயற்குழு கூட்டம் 
நாள் _-14.02.2020  வெள்ளிக்கிழமை 
நேரம் _ மாலை 05.30 மணி 
இடம் _  பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகம் 
தலைமை _ தோழர் A .சீனிவாச சொக்கலிங்கம் 
பொருள் _  1.பாளையம்கோட்டையில் அமுலாகவிருக்கும் பார்சல் நோடல் டெலிவரி சம்பந்தமாக 
                         2.அகிலஇந்திய மாநாடு (ஏப்ரல் 23--25) உடுப்பி கர்நாடகா 
                         3. போஸ்ட்மேன் மொபைல் போன் _ பிரச்சினைகள் 
                        4.இன்னும் பிற தலைவர் அனுமதியுடன் 
பாளையம்கோட்டையில் வருகிற 17.02.2020 முதல் பார்சல் நோடல் டெலிவரி மையம் செயல்படப்போகிறது .இதற்காக ஒரு எழுத்தர் 2 தபால்காரர் ஒரு GDS ஒதுக்கப்பட்டுள்ளது .பாளையம்கோட்டையில் இரண்டு தபால்காரர் பதவிகளை குறைத்து பார்சல் டெலிவரிக்கு கொடுக்கப்படுகிறது .இந்த இரண்டு தபால்காரர் மட்டும் திருநெல்வேலி க லக்ட்ரேட் வரை வரும் பார்செல்களை பட்டுவாடா செய்யவேண்டும் .பாளையம்கோட்டைக்கு மட்டும் சராசரி நாளொன்றுக்கு 60 க்கு மேற்பட்ட பார்சல் வருகிறது .இந்த பார்சல்களை இருவர் மட்டும் எப்படி சுமப்பது ?எத்தனை தூரம் பயணிப்பது ? உள்ளிட்ட பிரச்சினைகளில் நிர்வாகம் என்ன செய்யப்போகிறது ?நாம் என்ன செய்யவேண்டும் ? ஏற்கனவே பணகுடி அஞ்சலகத்திற்கு கூடுதல் தபால்காரர் வள்ளியூர் அஞ்சலகத்திற்கு CO பதவி இவைகளில் நிர்வாகம் மெத்தனப்போக்கை கடைபித்துவருகிறது 
இதுகுறித்து  விவாதிக்க நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் தாங்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுகிறோம் .
இந்த செயற்குழுவில் அஞ்சல் மூன்றின் முன்னனி தோழர்களும் கலந்து கொள்ளும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .
  தோழமையுள்ள SK .பாட்சா கோட்ட செயலர் அஞ்சல் நான்கு நெல்லை கோட்டம் 

0 comments:

Post a Comment