அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
LSG பதவியுயர்வு அதனை தொடர்ந்து பரிசீலிக்கப்பட்ட GENERAL TRANSFER யில் நமது தோழர்கள் தியாகராஜபாண்டியன் (கடையம்0 தோழர் கந்தசாமி (சேரன்மகாதேவி0 மற்றும் தோழர் ரகுமாதவன் (கீழநத்தம் )என ஐந்தில் மூன்று தோழர்களுக்கு இடமாறுதல் கிடைத்துள்ளது மகிழ்ச்சியே .ஆனாலும் LSG PA மேலப்பாளையம் பதவிக்கு கோட்ட நிர்வாகம் எடுத்திட்ட நிலைகுறித்து நமது தோழர்கள் தங்களின் அதிருப்தியை உத்தரவு வந்த நாள் அன்றே தொலைபேசியில் என்னிடம் தெரிவித்துக்கொண்டார்கள் .இப்படி நகரப்பகுதியில் வருகின்ற காலியிடங்கள் எல்லாம் சீனியர் என்கின்ற முறையில் தொடர்ந்து ஒருசிலரே பெற்றுக்கொண்டால் LSG பதவி உயர்வில் வெளியிடஙக்ளுக்கு சென்ற எங்களால் எப்பொழுது தான் நகர் பகுதிக்கு இடமாறுதல் பெற முடியும் என ஆதங்கப்பட்டு கேட்டார்கள் .தோழர்களின் நியாமான கேள்விகளின் அடிப்படையில் இன்று நமது SSP அவர்களை சந்தித்து முறையிடவுள்ளோம் .நேற்றே இதுகுறித்து நமது மண்டலச்செயலர் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி அவர்களிடமும் பேசியிருக்கிறோம் .இடமாறுதலை பொறுத்தவரை யாருக்கும் கொடுக்கவேண்டாம் என்பது நமது நிலைப்பாடல்ல !அதேநேரம் ஒரு இடத்திற்கு பழைய விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கும் பொழுது அதையும் மீறி நிர்வாகம் எடுக்கின்ற முடிவுகளை நம்மால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை ...அதுமட்டுமல்லாமல் இந்த LSG உத்தரவுகளினால் ஏற்பட்ட காலியிடங்களை குறிப்பாக முனைஞ்சிப்பட்டி போன்ற அலுவலகங்களுக்கு நமது மூத்த LSG ஊழியர்களின் மனுக்களை பரிசீலிக்காமல் இருப்பது ஏன் ? நிர்வாகம் அனைவருக்கும் பொதுவாக இருக்கவேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு ..இன்று மாலை SSP அவர்களின் சந்திப்பிற்கு பின் உங்களை மீண்டும் சந்திக்கின்றேன் .நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment