LSG பதவியுயர்வு பட்டியல் நேற்று நமது மண்டல அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது .கோட்ட அலுவலகத்தின் தனியான உத்தரவு வந்தவுடன் தோழர்கள் தங்களது புது பதவிகளில் சேரலாம் .இடமாறுதலில் குறைகள் இருப்பின் PMG அவர்களுக்கு மேல்முறையிடு செய்யலாம் .பதவி உயர்வே வேண்டாம் என நினைப்பவர்கள் இந்த உத்தரவு கிடைத்த 15 நாட்களுக்குள் மறுதலிக்கலாம் .
மேல்முறையிடு மற்றும் மறுப்பவர்களுக்கு கோட்ட சங்கம் வழிகாட்ட தயாராக உள்ளது என்பதனை தெரிவித்து கொள்கிறோம் .நமது கோட்டத்தில் தொலைதூர இடங்களுக்கு மாற்றப்பட்ட தோழர்களில் பெரும்பாலோனோர் பணி மூத்ததோழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .இருந்தாலும் எந்த பார்முலா பின்பற்றப்பட்டது என்றும் நடைமுறைப்படுத்துவதற்க்கு முன்னால் எந்தெந்த பதவிகள் LSG என்று மறைத்தது மௌனித்தது நெல்லை கோட்ட நிர்வாகத்தின் மாபெரும் அலட்சியம் ஆகும் .நிச்சயம் ஊழியர்களின் குறைகள் மாநிலச்சங்க துணையோடு நிவிர்த்தி செய்யப்படும் என்று உறுதி கூறுகிறேன் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment