அன்பார்ந்த தோழர்களே !
மத்திய அரசு நமது கோரிக்கைகளை எட்டி உதைக்கிறதா ? தட்டி கழிக்கிறதா ?
ஒவ்வொரு வாரமும் செய்தி சேனல்கள் தவறாமல் ஒரு செய்தியை சளைக்காமல் சொல்லிக்கொண்டு வருகிறது .அதுதான் மீண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு யோகம் ! படிகள் அனைத்தும் உயர்த்தப்படும் !இந்த அமைச்சரவை கூட்டத்தில் வெளியாகும் என்று பரப்பிக்கொண்டு வருகிறது .நாமும் நமது பங்கிற்கு அதை நம்பவும் முடியாமல் நமது தோழர்களுக்கு ஒரு ஆசை வார்த்தைகளை கூறி கொண்டு வருகிறோம் .அமைச்ச கூட்டத்தின் ஆய்வில் இருக்கிறது என்பதெல்லாம் எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை .அதை உறுதி படுத்தவேண்டிய கடமை ஊழியர் சங்கங்களுக்கு இருக்கிறது .ஒருவேளை மத்திய அரசு ஊழியர் மஹா சம்மேளன செயல்பாடுகள் அஞ்சல்துறையோடு நின்றுவிட்டதா ?இதர துறைகளில் இதன் தாக்கம் ஏன் பெரிதாக தெரியவில்லை என்பதையெல்லாம் நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று .இல்லையென்றால் மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தை வழிநடத்துவது --NJCA சார்பாக பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வது ஓய்வு பெற்ற நிர்வாகிகள் என்பதால் மைய அரசு அவர்களை ஊதாசின படுத்துகிறதா என்றும் தெரியவில்லை .
தானாய் மாறும் என்பதெல்லாம் பழைய பொய்யடா !என்ற வரிகளே நம் நினைவுக்கு வருகிறது .இன்னும் எத்தனை காலம் தான் ............
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை .

0 comments:
Post a Comment