...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, June 20, 2017


                                  நெல்லை கோட்ட செய்திகள்
LSG பதவியுயர்வில் இடமாறுதலில் மாற்றம் கேட்டு விண்ணப்பித்த ஊழியர்களின் மேல் முறையீடுகள் மண்டல அலுவலகத்திற்குச்சென்று விட்டது .நமது கோட்டத்தில் 7 ஊழியர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள் .
---------------------------------------------------------------------
இன்று 20.06.2017 நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும் படி கேட்டு கொள்கிறோம் .அதனை தொடர்ந்து பாளையங்கோட்டையில் நடைபெறும் அஞ்சல் நான்கின் செயற்குழுவிலும் தாங்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம் .
நெல்லையில் காலியாகவுள்ள HSG II மற்றும் HSG I பதவிகளை தற்காலிகமாக நிரப்ப இன்னும் ஓரிரு நாட்களில் விருப்பமனுக்கள் கோரப்படவிருக்கின்றன .இது CPMG அலுவலக 2017 பெப்ருவரி கடித அடிப்படையில் நிரப்பப்படும் 
---------------------------------------------------------------------------
 விடுபட்ட நமது தோழர்கள்  KG.குருசாமி C.நமச்சிவாய மூர்த்தி அவர்களுக்கும் LSG பதவி உயர்வுகள் கொடுக்கப்பட்டுவிட்டன .நிர்வாக  தவறுகளை சுட்டிக்காட்டியஉடன்  மிக துரிதமாக செயல்பட்ட கோட்ட /மண்டல நிர்வாகத்திற்கு நன்றிகள் .
                    மாநில சங்கத்தில் இருந்து வந்த தகவல் 
திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் நடந்த FSC முறைகேடுகளை விசாரித்து நீதி வழங்க கோரி நாம் நடத்திய ஆர்ப்பாட்ட கோரிக்கைகளில் வெற்றி  கிடைத்திருக்கிறது .அதன் மீதான விசாரணை முடிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவருக்கு தங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது என்று விளக்க கடிதம் கேட்டு கோட்ட அலுவலகத்தில் இருந்து தாக்கீது அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த தகவல்களை கோட்ட நிர்வாகமும் மண்டல அலுவலகத்திற்கு தெரிவித்துள்ளது .
                      மினி டார்கெட்டில் நமது தோழர்களின் பங்கு 
  கடந்த மே 16முதல் ஜூன் 15 வரைக்காலத்திற்கான அறிவிக்கப்பட்ட மினி டார்கெட்டில் நமது கோட்டசங்கத்தின் அமைப்பு செயலர் தோழர் S.முத்துமாலை அவர்களின் தனிப்பட்ட முயற்சியால் 400கணக்குகளுக்கு மேல் தொடங்கப்பட்டுள்ளது என்பதனை தெரிவித்து கொள்கிறோம் .தோழர் முத்துமாலை அவர்களுக்கு நம் பாராட்டுக்கள் .
                   சென்னையில் LSG புயல் 
மிக மிக ஆய்வுக்கு பின் சென்னை மண்டலத்தில் வெளியிடப்பட்ட LSG இடமாறுதல்களில் பல நூறு தோழர்கள் சென்னையில் இருந்து வெளி கோட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் .
          தோழமையுடன்  SK ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 

0 comments:

Post a Comment