...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, June 23, 2017

                                       விடை தருமா  தடை ?
கேடர் உத்தரவுகளை அமுல்படுத்துவதை நிறுத்த கோரி சென்னை GPO கிளை சார்பாக 52 தோழர்கள் தொடர்ந்த வழக்கில் அதை அமுல்படுத்த இடைக்கால தடை பிறப்பித்து இருக்கும் இன்றைய நிலை தொடரும் என  தீர்ப்பு கிடைத்துள்ளது .இந்தத்தகவல்களை தொடர்ந்து இது தமிழகம் முழுவதும் அமுலாகுமா என பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கேட்க தொடங்கியுள்ளனர் .இது குறித்து நாம் வழக்கறிஞர் திரு .மலைச்சாமி அவர்களிடம் கேட்ட போது இது தற்போது GPO தோழர்களுக்கு மட்டும் தான் பொருந்தும் GPO போன்ற யூனிட்டுகளில் C மற்றும் B அலுவலகங்கள் இல்லை பிறகு எங்கிருந்து LSG பதவிகளை அடையாளம் காட்டுவது மற்றும் GPO CHIEF போஸ்ட்மாஸ்டர் பரிந்துரைத்த 42 பதவிகளை GPO வில் LSG ஆக உயர்த்தலாம் என்ற கோரிக்கை நிராகரிக்கபட்டதை சுட்டி காட்டி இந்த தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது .பிற கோட்டங்களில் உள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டினால் மட்டுமே அந்தந்த கோட்டங்களில் அம்முப்படுத்துவதை தடை செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார் .
 நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment