...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, June 14, 2017



அன்பார்ந்த தோழர்களே !
                    ஆர்ப்பாட்டம் --20.06.2017
நமது சம்மேளன அறைகூவலை ஏற்று வருகிற 20.06.2017 அன்று கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .தாங்கள் அனைவரும் தவறாமல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .


நாள் 20.06.2017 செவ்வாய்
நேரம் மாலை 6 மணி
இடம் பாளையம்கோட்டை
கூட்டு தலைமை   KG.குருசாமி P 3
                              A .சீனிவாச சொக்கலிங்கம் P 4
கோரிக்கைகள்


























.1.அஞ்சல் பகுதியில் காலியாகவுள்ள அனைத்து இடங்களையும் நிரப்ப வேண்டும் .

2.GDS ஊழியர்களுக்கான கமேலேஷ் சந்திரா பரிந்துரையை உடனே அமுல்படுத்த வேண்டும் 
3.அஞ்சலகத்தில் புகுத்தப்படும் புதுப்புது திட்டங்களின் பெயரில் ஊழியர்களை துன்புறுத்த கூடாது 
4.பார்ட் டைம்  கன்டிஜென்ட் ஊழியர்களுக்கு 01.01.2006 மற்றும் 01.01.2016 தேதிகளில் அமுல்படுத்தப்பட்ட ஊதியக்குழு அடிப்படையில் ஊதியம் வழங்கு 
5.அஞ்சல் துறையில் தனியார் மயத்தை புகுத்தாதே 
6.அஞ்சலகங்களுக்கு வாரம் 5  நாள் வேலைநேரத்தை அமுல்படுத்த !எல்லா சனிக்கிழமைகளிலும் பொது விடுமுறையாக்கு 
7.NPS திட்டத்தை கைவிடு -குறைந்தபட்சம் 50 சதம்( LASTPAY DRAWN )பென்ஷன் என்பதனை உறுதிப்படுத்து 
 உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் முதற்கட்ட ஆர்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க கேட்டு கொள்கிறோம் .
                                    தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ்                                       SK .பாட்சா    
கோட்ட செயலர் P3                             கோட்ட செயலர் P4  
-----------------------------------------------------------------------------
               நெல்லை அஞ்சல் நான்கின் செயற்குழு 
நாள் 20.06.2017 நேரம் மாலை 6.30 மணி 
இடம் பாளையங்கோட்டை 
தலைமை தோழர் A.சீனிவாச சொக்கலிங்கம் 
பொருள் 1.நெல்லை கோட்ட 37 வது கோட்ட மாநாடு நடத்துவது சம்பந்தமாக 
              2.மாநில சங்கத்தின் வேண்டுகோளின் படி நெல்லையில் ஜூலை மாதம் மாநில செயற்குழு நடத்துவது சம்பந்தமாக 
              3.இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )
                  அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்களின் மேலான ஒத்துழைப்பை நல்கும் படி கேட்டு கொள்கிறோம் .
                           தோழமையுடன் 
                                                               SK .பாட்சா 
   12.06.2017                              கோட்ட செயலர் அஞ்சல் நான்கு நெல்லை 
--------------------------------------------------------------------



.

0 comments:

Post a Comment