...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, January 30, 2020

இன்று பணிநிறைவு பெறுகின்ற  NFPE  பேரியக்கத்தின் பெருமைமிகு தோழர்களாக வலம்வந்த இனிய 
நண்பர்கள் செல்வராஜ் PA டவுண் சந்தானம் தபால்காரர் வண்ணார்பேட்டை  நடராஜன் தபால்காரர் டவுண் ஆகியோர்களை வாழ்த்துகிறோம் 
                                                  தோழர் செல்வராஜ் 
அன்பெனும் ஆடையணிந்து                                 
அமைதியெனும் அலங்காரம் கொண்டு 


சூழ்ந்துகொண்ட நெருக்கடிகளிலும் 
சிரிப்பொன்றையே பதிலாக்கி 
நல்லபடியே நீ ஓய்வு பெறுகிறாய் !
உள்ளபடியே நாங்க ளெல்லாரும் 
உவகை கொள்கிறோம் -
உன்போல் ஒரு தோழன் 
உண்டா இனி என்று 
உலகை கேட்கிறோம் !

சத்தியத்திற்கு கட்டுப்பட்டதை போலல்லவா 
சங்கம் அழைத்த அனைத்து போராட்டத்திலும் 
சொல்லும் முன்னே செயல்படுத்தினாய் !
பதவி உயர்வில் எழுத்தரான காலத்திலும் 
பழசை மறக்காமலே பழகி பார்த்திருக்கிறாய் !
துணை அஞ்சலகங்களில்-எவர் 
துணையில் லாமே சாதித்து காட்டினாய் !

தங்கள் பணிஓய்வு காலங்கள் சிறக்க வாழ்த்துகிறோம் 
-----------------------------------------------------------------------------------------------------
                                      தோழர் சந்தானம் தபால்காரர் 

சந்தனம் மணக்கும் சுந்தர தோழன் 
தொலைத்த சந்தர்ப்பத்தை நோகாமல் 
கிடைத்த வாய்ப்பினை சாதகமாக்கி கொண்டவன் 

சீருடைக்காய் வேறிடம் போனதெல்லாம் 
உன்னோடு போகட்டும் -இன்றோடு விலகட்டும் 
சீர்மிகு இயக்கத்தின் போர்முரசு தொடரட்டும் 
நாளைய நாட்கள் நமக்கு  புதிதாய் பிறக்கட்டும் 

ஆளை பார்த்தால் அறுபது தெரியவில்லை 
நாளை கேட்டால் நம்பாமலும் முடியவில்லை 
ஆரோக்கியத்தோடு இன்னும் ஆயிரமாய் 
சந்தனகுணம் மாறாமல் நிலைத்திட வாழ்த்துகிறோம் 
-------------------------------------------------------------------------------------------------------
                               தோழர் நடராஜன் தபால்காரர் 
நடராஜனும் ஓய்வுபெறுகிறர் 
அடுத்தவர் காதுகளுக்கு 
வலிக்கக்கூடாது என்பதற்காகவே 
மெதுவாய்  பேசுபவர் ---இன்னும் 
பொதுவாய் பேசுபவர் 

ஈடியாய் பணியாற்றிய நாட்களிலும் 
இலாகா  ஊழியராய் பவ ணி வந்த நாட்களிலும் 
அதே நடராஜன் --அன்றும் இன்றும் 
ஒரே நடராஜன் --என்றும் 
இதே நடராஜன் 
பணிஓய்வுக்காலங்கள் சிறக்க வாழ்த்துகிறோம் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 










Wednesday, January 29, 2020

 எழுத்தர் பிரிவில் குறிப்பாக பதவிஉயர்வில் செல்பவர்களுக்கான அதிரடி மாற்றங்கள் .
            1/3 LSG வந்த பொழுது  LSG பதவி உயர்வுக்காக நாடுகடத்தப்பட்ட காலங்கள் உண்டு .HSG II மற்றும் HSG I என்றால் நிச்சயம் சொந்தகோட்டம் கிடையாது .அதன்பிறகு FAST TRACK கடைசியாக போஸ்ட்மாஸ்டர் கிரேடு இவையெல்லம் ஊழியர்களை அவ்வளவாக சொந்தகோட்டத்திற்குள் வராமலே தேர்வில் தேர்ச்சிபெற்ற காரணத்திற்காக ஆரம்பத்தில் வேலிபோட்டு அடைக்கப்பட்ட  சபிக்கப்பட்ட காலங்கள் அது . .ஆனால் இன்று ஒருகோட்டத்திற்குள்ளே பரவலாக  HSGII &HSGI பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன .இருக்கும் இடத்திலே பதவிஉயர்வுகள் .பதவி உயர்வை மறுத்தாலும் நிர்வாகம் மறுக்கப்போவதில்லை என்ற நிலையில் நாம் பணியாற்றிவருகிறோம் .
     போஸ்ட்மாஸ்டர் கிரேடு பொதுபிரிவோடு 31.10.2019 அன்று இணைக்கப்பட்ட பின்னணியில் தமிழகத்தில் CPMG அலுவலகமும் 27.01.2020 அன்று புதிதாக அடையாளம் கட்டப்பட்ட பதவிகளை பட்டியலிட்டுள்ளது ...இந்த உத்தரவுகள் ஒருவாரத்திற்கு முன்பு வந்திருந்தால் கூட LSG பதவிஉயர்விற்காக நமது கோட்டத்தில் 12 ஊழியர்கள் வேறுகோட்டத்திற்கு அனுப்பப்பட்டிருக்கமாட்டார்கள் .
பருவம் மாறி பெய்திட்ட மழைபோல -பந்திமுடிந்தபின் விருந்துக்கு அழைப்பது போல யாருக்கும் பயனற்று போக கூடாது என்பதே நமது கருத்து .
அதன்படி நமது கோட்டத்தில் கீழ்கண்ட பதவிகள் HSG I ஆகிறது
1.போஸ்ட்மாஸ்டர் திலி 2.துணை போஸ்ட்மாஸ்டர் திலி 3துணை போஸ்ட்மாஸ்டர் பாளை ..4.போஸ்ட்மாஸ்டர் அம்பை 5.SPMவள்ளியூர்
6.SPMசங்கர்நகர் 7SPM.நாங்குநேரி 8.SPM VK .புரம் 9.SPMடவுன் 10.மேனேஜர் PSD நெல்லை
                                                  நமது கோட்டத்தில்    HSG II பதவிகள்
.பாளையம்கோட்டை -HO --8
 தலைமை காசாளர், PRI (P )பாளை  ,APM SB -2 APM (G) -2  APM A/CS -1 ACCOUNTANT -1  PSD ASST மேனேஜர் -1
களக்காடு ,திசையன்விளை ,ஏர்வாடி
திருநெல்வேலி HO -4
APM SB --2 PRI (P)--1  APMA/CS -1
மஹாராஜநகர் ,மேலப்பாளையம் ,பெருமாள்புரம் ,வண்ணார்பேட்டை  ASPM டவுன்
அம்பாசமுத்திரம்--2
APM(G) APM SB  APM (G )  1 
சேரன்மகாதேவி ,கடையம் ,கல்லிடைக்குறிச்சி .வீரவநல்லூர்
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 



Tuesday, January 28, 2020

                                                   முக்கிய செய்திகள் 
*BSNL ஊழியர்களின்      தன்விருப்ப ஓய்வை நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது .      அகிலஇந்திய அளவில் 90000 ஊழியர்களும் தமிழகத்தில் 11000 ஊழியர்களும் நெல்லையில் 300   ஊழியர்களும் ஓய்வை விரும்பி ஏற்கிறார்கள் .இதன் எதிரொலியாக திருநெல்வேலி தொலைத்தொடர்பு மாவட்டத்தில் 30 வாடிக்கையாளர் சேவைமையங்கள் மூடப்படுகின்றன .
*LSG பதவியுயர்வை மறுக்கும் ஊழியர்களுக்கான படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது .PLACE OF POSTING போட்டபிறகு இதை கோட்ட நிர்வாகத்திற்கு அனுப்பலாம் .
*நமது மாநாட்டிற்கு வருகின்ற ஊழியர்கள் 08.02.2020 முதல் 12.02.2020 வரை சிறப்பு விடுப்பு விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம் .அப்படி விண்ணப்பித்தவர்கள் அந்த தகவலை கோட்ட சங்கத்திற்கு  உடனே தெரிவிக்கவேண்டுகிறோம் 
  நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -P.பாலகுருசாமி (பொ ) கோட்ட செயலர்கள் நெல்லை 

                                                     வருந்துகிறோம் 
நமது NFPE இயக்கத்தின் முன்னணி இளைய தோழர் ஆனந்தராஜ் PA மஹாராஜநகர் அவர்களின் தந்தையர் திரு .சௌந்தரராஜ் (72) அவர்கள் 27.01.2020 இரவு 8 மணி அளவில் இயற்கை ஏய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் .அன்னாரது இறுதிச்சடங்கு இன்று 28.01.2020 பிற்பகல் 12.30 மணியளவில் AP நாடனுரில் வைத்து நடைபெறுகிறது .தந்தையை இழந்து தவிக்கும் தம்பி ஆனந்தராஜ் அவர்களுக்கு NELLAI NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது ----NELLAI NFPE 

Monday, January 27, 2020

                                                  நன்றி !நன்றி !நன்றி !
நெல்லை கோட்டத்தில் LSG பதவியுயர்வு பெற்றவர்களுக்கான இடமாறுதல் குறித்த அறிவிப்பாணை கோட்ட அலுவலகத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ளது .நமது கோரிக்கைகளின் படியே அனைத்து காலியிடங்களும் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது ..முன்னதாக சில இடங்கள் மறைக்கப்பட்ட சூழ்நிலையில் நமது மாநிலச்சங்கத்தின் தலையீ ட்டினால் இன்று முறையான அறிவிப்பு வந்துள்ளது .மீண்டும் நமது பேரவை தலைவர் அண்ணன் அறிவுஜீவி KVS அவர்களுக்கும் மாநிலசெயலர் சகோதரர் வீரமணி  அவர்களுக்கும் தென் மண்டலசெயலர் அண்ணன் சுப்பிரமணியன் அவர்களுக்கும் நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொளிறோம் .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

                                                   முக்கிய செய்திகள் 
LSG பதவியுயர்வு பெற்றவர்களுக்கான இடமாறுதல் குறித்த அறிவிப்பாணை கோட்ட அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது .நமது கோரிக்கைகளின் படியே அனைத்து காலியிடங்களும் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது ..இந்த பட்டியலில் உள்ள அலுவலகங்களில் ஒன்பது அலுவலகங்கள் மட்டுமே குடியிருப்புடன் இணைந்த அலுவலகங்கள் .(1.பத்மனேரி 2.சமூகரெங்கபுரம் 3.திருக்குறுங்குடி 4.விஜயநாராயணன் 5.கங்கைகொண்டான் 6.மாஞ்சோலை 7.நாலுமுக்கு 8.பொட்டல்புதூர் 9.ரவணசமுத்திரம் )
இதில் LSG PA ஆக சேரன்மகாதேவி ,களக்காடு மற்றும் பேட்டை ஆகிய மூன்று இடங்கள் உள்ளன .விருப்ப விண்ணப்பங்களளை 30.01.2020 தேதிக்குள் அனுப்பிவைக்க கேட்கப்பட்டுள்ளது .
பதவி உயர்வைஏற்பதும் அல்லது மறுப்பது தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் கோட்ட சங்கத்தை அணுகும்படி கேட்டுக்கொள்கிறோம் .
 நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Saturday, January 25, 2020

                                                        முக்கிய செய்திகள் 
* நமது CPMG அவர்கள் 29.02.2020 அன்று பணிஓய்வு பெறுவதை அடுத்து  தமிழ் மாநில CPMG ஆக திரு .B .செல்வகுமார் அவர்கள் பொறுப்பேற்கவிருக்கிறார்கள் .திரு .B .செல்வகுமார் அவர்கள் நமது மண்டலத்தில் பணியாற்றியபோதும் சென்னையில் மாநிலநிர்வாக அலுவகத்தில் பணியாற்றியபோதும் ஊழியர்நலன் சார்ந்த விஷயங்களை மிக ஆர்வத்தோடு செய்து தந்த மனிதாபிமானமிக்க ஒரு நல்ல அதிகாரி ஆவார்கள் .மதுரை மண்ணின் மைந்தரை நாம் வாழ்த்தி வரவேற்கிறோம் 
*நமது கோட்டத்திற்கு மிகவும் அறிமுகமான திரு VP.சந்திரசேகர் SSPOS கன்னியாகுமரி அவர்கள் சென்னை சிட்டி தெற்கு கோட்டத்திற்கும் திரு .M .ஸ்ரீராம் SSPOS விருதுநகர் அவர்கள் சென்னை சிட்டி மத்திய கோட்டத்திற்கும் இடமாறுதல் பெற்று செல்கிறார்க்ள .இதன் மூலம் தென் மண்டலத்தில் நெல்லை ,கன்னியாகுமாரி ,கோவில்பட்டி விருதுநகர் போன்ற பெரிய கோட்டங்கள் புதிய SSP களை எதிர்நோக்கியுள்ளது .
*SMR மற்றும் Special Error இவைகளை பழையமுறையில் பராமரிப்பதை நிறுத்திட வலியுறுத்தி நமது மாநிலச்சங்கம் சார்பாக மாநில நிர்வாகத்திற்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது .
*நெல்லை கோட்டத்தில் எழுத்தர்தேர்வுக்கான அடுத்தகட்ட கணினி தேர்வுக்கு தகுதிபெற்ற அனைத்து தபால்காரர் ,MTS,மற்றும் GDS தோழர்களுக்கு NELLAI NFPE தனது புரட்சிகர வாழ்த்துக்களை  கொள்கிறது .
                                              இந்த வார நமது உறுப்பினர்களின் இல்ல விழாக்கள் 
*26.01.2020 தோழியர் B.முப்பிடாதி PA திருநெல்வேலி அவர்களின் புதுமனை புகுவிழா -மேலப்பாளையம் 
*27.01.2020 தோழர் C.குமார் GDS திருநெல்வேலி தெற்கு அவர்களின் மகள் திருமண விழா -மேலப்பாளையம் 
*30.01.2020 தோழர் பெருமாள் MTS பாளை அவர்களின் மகள் திருமணவிழா -பாளையம்கோட்டை 
*30.01.2020 தோழர் நரசிம்மன் தபால்காரர் காவல்கிணறு அவர்களின் திருமண வரவேற்புவிழா --பணகுடி 
  அனைத்து விழாக்களும் சிறப்பாக நிகழ வாழ்த்துக்கள் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Friday, January 24, 2020

                                            நன்றி !நன்றி !நன்றி !
நெல்லை கோட்ட பிரச்சினையில் நல்லதொரு தீர்வை பெற்றுத்தந்த மாநிலச்சங்கத்திற்கும் பிரச்சினைகளை மிக சரியாக கையாண்ட நம் தலைவர் அறிவுஜீவி அண்ணன் KVS அவர்களுக்கும் உடனடியாக தலைவரின் கட்டளையை ஏற்று செயல்பட்ட மாநிலசெயலர் சகோதரர் வீரமணி அவர்களுக்கும் தென்மண்டல அலுவலகத்தின் நேரடி கவனத்திற்கு உடனடியாக கொண்டுசென்ற தென்மண்டல செயலர் அண்ணன் சுப்பிரமணியன் அவர்களுக்கும் மண்டலச்செயலருடன் இனைந்து பணியாற்றிவரும் மதுரை கோட்ட செயலர் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .மாநிலச்சங்க தலையீ ட்டினால்  நெல்லை கோட்ட கண்காணிப்பாளர் 31.01.2020 அன்று பணிநிறைவு பெறுவதை ஒட்டி தேவையில்லாத எந்த உத்தரவையும் போடக்கூடாது என தொலைபேசியிலும் வழிகாட்டுதலும் மண்டல அலுவலகத்தில் இருந்து வந்துள்ளது என்ற மண்டலச்செயலரின் செய்தி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது .
                                               நாம் (NFPE )எதிர்ப்பதும் வாழ்த்துவதும் -நிர்வாகத்தின் நடவடிக்கையை மட்டும் தானே தவிர தனிப்பட்ட எந்த  .அதிகாரியையும் அல்ல என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம் ...
மீண்டும் நமது மாநிலச்சங்கம் தலமட்டங்களில் நடக்கும் போராட்டத்தை ஊக்கப்படுத்துவதும் உற்சாகமூட்டுவதும் உடனிருப்பதும் பழைய தொழிற்சங்க பொற்(போர் )காலத்தை நினைவு படுத்துகிறது ..இன்குலாப் ஜிந்தாபாத் !
நன்றி .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Thursday, January 23, 2020

                                                          முக்கிய செய்திகள் 
* நாளை (24.01.2020) நடைபெறுவதாக இருந்த மாதாந்திர பேட்டி நிர்வாக காரணங்களுக்காக தள்ளிவைக்கப்பட்டுள்ளது .
*இன்று நமது மண்டல செயலர் அண்ணன் சுப்பிரமணியன் அவர்கள் இன்று நமது DPS அவர்களை சந்தித்து நமது கோட்ட பிரச்சினைகளை குறித்து பேசுகிறார்கள் 
*நமது கோட்ட LSG இடமாறுதலுக்கான  கமிட்டிக்கு கோவில்பட்டி SSP ஒரு உறுப்பினராக செயல்படுவார் .
 *நமது கோட்டத்திற்கு RULE 38 யின் கீழ் வருகிற தோழர்கள் தங்கள் விருப்பமனுக்களை விரைந்து அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
 நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -P .பாலகுருசாமி (பொ ) கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, January 22, 2020

                                                    முக்கிய செய்திகள் 
*நமது தென்மண்டலத்திற்கு PMG ஆக திருமதி சீலி பர்மன்  PMG மேற்குமண்டலம் அவர்கள் கூடுதல் பொறுப்பேற்கிறார்கள் .
*நமது மாநில மாநாட்டில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக 10.02.2020 அன்று மாலை மகிளா கமிட்டி சார்பாக சிறப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது .வரவிரும்பும் தோழியர்கள் கோட்ட சங்கத்தை தொடர்புகொள்ளலாம் .மேலும் விவரங்களுக்கு நமது அகிலஇந்திய மகிளா கமிட்டி உறுப்பினர் திருமதி வளர்மதி கோவை (9244219317) அவர்களை தொலைபேசியில் தொடர்புகொள்ள கேட்டுக்கொள்கிறோம் ..
*இந்த மாத மாதாந்திர பேட்டி திட்டமிட்டபடி 24.01.2020 நடக்கும் ? என எதிர்பார்க்கப்படுகிறது .
*                                                திருமண வாழ்த்து 
தோழர் ஜான்ராஜன் GDS பெருமாள்புரம் அவர்களின் இல்ல மணவிழா நாள் 22.01.2020 இடம் KRR திருமண மண்டபம் 
                                               மணமக்கள் 
                        J.ஜெமிமா BE ---E .பென்னி சிபின் BE 
மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம் 
தோழமை வாழ்த்துக்களுடன்  NELLAI NFPE 
                                                 

Tuesday, January 21, 2020

                                                       வருந்துகிறோம் 
  NFPE இயக்கத்தின் துடிப்புமிக்க தோழர் A .ஹரி கிருஷ்ணன் (28)தபால்காரர் VK புரம் அவர்கள் நேற்றிரவு மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தியை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன் .  எழுத்தர் தேர்வு முடிவை  ஆர்வத்தோடு 
எதிர்பார்த்துக்கொண்டிருந்த  தோழர் ஹரி ..சில வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது .அருமை தோழரின் மறைவிற்கு NELLAI NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது .
                                                                            ---NELLAI NFPE --------------------
                                                                   
   

Monday, January 20, 2020

                                                    முக்கிய செய்திகள் 
வருகிற பெப்ருவரி 9-11 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெறும் அஞ்சல் மூன்றின் மாநில மாநாட்டில் நமது கோட்டத்தின் சார்பாக சார்பாளர்களாக தோழர்கள் ஜேக்கப் ராஜ் வண்ணமுத்து அழகுமுத்து பிரபாகர் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள் .பார்வையாளர்களாக தோழர்கள் சங்கர் ஆவுடைநாயகம் நெல்லையப்பன் சுடலைமுத்து ஆசைத்தம்பி அனந்த ராஜ் அர்ஜுனன் நாகராஜ் இளங்கோ மற்றும் அண்ணன் குருசாமி கலியபெருமாள் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள் .சார்பாளர் /[பார்வையாளர் கட்டணம் ரூபாய் 2000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது .மேலும் வரவிரும்பும் தோழர்கள் நமது இளைய தோழர்கள் ஆனந்தராஜ் அர்ஜுனன் நாகராஜ் ஆகிய தோழர்களில் யாரையாவது தொடர்புகொண்டு ரயில் டிக்கெட் எடுக்க தொடர்புகொள்ளலாம் .நேரிடையாக வரவிரும்புகிறவர்கள் கோட்ட செயலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம் .
   வங்கி ஊழியர்களின் இரண்டு நாள் வேலைநிறுத்தம் வெல்லட்டும் 
   வருகிற 31.01.2020 மற்றும் 01.02.2020 ஆகிய இரண்டுநாட்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் வெல்லட்டும் .ஏற்கனவே இந்தமாதம் 8 ம் தேதி பொதுவேலைநிறுத்தத்திலும் வங்கி ஊழியர்கள் பங்கேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -P.பாலகுருசாமி (பொ ) கோட்ட செயலர்கள் நெல்லை 

Saturday, January 18, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் .
           கடந்த 08.01.2020 ஒருநாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றவர்களின் பட்டியல் நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது .வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற உங்கள் ஒவ்வொருவருக்கும் நெல்லை NFPE சார்பாக மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .பதவி உயர்வை எதிர்நோக்கியுள்ளவர்கள் பணிஒய்வை நெருங்கியவர்கள் புதிதாக பணிக்கு சேர்ந்தவர்கள் OUTDOOR பணிசெய்கின்ற PRI ,ME,DSM மற்றும் PLI DEVELOPMENT OFFICER  என எல்லாதரப்பு ஊழியர்களும் பங்கேற்றது பாராட்டத்தக்கது .மேலும் MMS யில் நான்கு மெயில்வேன்  ஓட்டுநர்களும் புதிதாக SBCO யில் இரண்டு தோழர்கள் என தோழர்களின் பங்களிப்பு விரிவடைந்துவருகிறது .
இதோ தலைமை அஞ்சலக வாரியாக வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற தோழர்கள் 
பாளை - P3&P4            131            GDS-126
நெல்லை P3&P4         113           GDS--88
அம்பை  P3&P4           87             GDS---92
--------------------------------------------------------------------------------------------------------------------------                                           திருமண வாழ்த்துக்கள் 
நமது NFPE இயக்கத்தின் ஆற்றல்மிகு  இளைய தோழர்A.  நியூட்டன்  BE  PA   ராதாபுரம் -S.சுஜா ஜேனட் BE  இவர்களது திருமணம் 20.01.2020 அன்று தூத்துக்குடியில் நடைபெறுகிறது .வரவேற்பு 21.01.2020 அன்று மதியம் வள்ளியம்மை புரம் (வள்ளியூர் )  அவரது இல்லத்தில் நடைபெறுகிறது .இல்லறவாழ்வில் இணையும் தம்பதிகளுக்கு நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்கள் .
----------------------------------------------------------------------------------------------------------------------
             இந்த மாத மாதாந்திர பேட்டியில் அஞ்சல் மூன்று சார்பாக தோழர்கள் SK .ஜேக்கப் ராஜ் ,D.பிரபாகர் மற்றும் RV.தியாகராஜ பாண்டியன் ஆகியோர் பங்கேற்கிறார்கள் .யூனியன் கூட்டம் நடத்த கோட்ட அலுவலக அனுமதி பெற்றுத்தான் போஸ்ட்மாஸ்டர் அவர்கள் நமக்கு கூட்டங்கள் நடத்த அனுமதி தர வேண்டும் என்ற நிர்வாகத்தின் 06.01.2020 தேதியிட்ட அதிரடி உத்தரவை ரத்து செய்யவேண்டும் .இடஒதுக்கீடுகள் முறையாக நடக்கிறதா ? இன்னும் எல்லா பிரிவிலும் நிரப்பப்படாத பதவிகள் எத்தனை ? ROSTER பராமரிக்கும் கோப்புகளை தொழிற்சங்கங்களுக்கு வழங்கவேண்டும், பாளையில் பெண் ஊழியர்களுக்கான RESTROOM  உள்ளிட்ட கோரிக்கைகள் மாதாந்திர பேட்டியில் வைக்கப்பட்டுள்ளன .
நன்றி !    தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை             

Thursday, January 16, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                                கடைசியாக 01.11.2019 அன்று மாநில நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட LSG பதவி உயர்வு பட்டியல் இறுதியாக  04.12.2019 அன்று நமது மண்டல அலுவலகத்தால் கோட்ட அலுவலகத்திற்கு வந்தது .இதில் 9 தோழர்கள் கோவில்பட்டி கோட்டத்திற்கும் 3 தோழர்கள் தூத்துக்குடி கோட்டத்திற்கும் நமது கோட்டத்தில் இடமின்மையால் மறு ஒதுக்கீடு பெற்றுள்ளனர் .மீதமுள்ள 22 ஊழியர்களுக்கு நமது கோட்டத்தில் பதவிஉயர்வு &இடமாறுதல் வழங்கிட நமது கோரிக்கைகளான CALL FOR பண்ணும் பொழுது VACANCY முழுமையாக தெரிவிக்கவேண்டும் யாருக்கும் முன்பதிவு செய்யக்கூடாது மேலும் பழைய காலங்களைப்போல கவுன்சிலிங் முறையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டால் அதிகப்படியான ஊழியர்கள் LSG பதவி உயர்வை ஏற்பார்கள் என்பதனை வலியுறுத்தி நமது கோட்ட சங்கம் சார்பாக நமது கோட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது ..சென்ற முறையும் களக்காடு LSG PA VACANT என அறிவிக்க மறுத்த நிர்வாகம் இறுதியாக நமது மாநிலச்சங்க முயற்சியால் மண்டல நிர்வாகம் மூலம் கோட்ட நிர்வாகம் போட்ட உத்தரவை கோட்டநிர்வாகத்தாலே ரத்துசெய்யவைத்தோம்  .இப்பொழுதும் எங்கள் நிலை பழைய LSG ஊழியர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்பினால் கோட்டம்  முழுவதும் வேறு LSG ஊழியர்கள் இடமாறுதல் கேட்டு விரும்பினால் அவர்களின் விருப்பமனுவையும் சேர்த்து பரிசீலிக்க கோட்ட நிர்வாகம் முயற்சி எடுத்திருக்கவேண்டும் .இந்த பட்டியலில் தான் அதிகப்படியான ஊழியர்கள் MACP II  பதவியுயர்விற்காக காத்திருப்பவர்கள்என்பதனையும் கோட்ட நிர்வாகம் கணக்கில் கொள்ளவேண்டும் . இது தான் வெளிப்படையான நிர்வாகம் .பாரபட்சமற்ற நிர்வாகம் எல்லோருக்கும் பொதுவான நிர்வாகம்.
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்


NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                                                      TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-LSG / dated at Palayankottai- 627002 the 16.01.2020
             
To,
                   The Senior  Superintendent of Post Offices,
                   Tirunelveli Division. Tirunelveli  627 002.
            Sir,
                   Sub:- Request for filling up of Posts in LSG Cadre-preference            to the  Officials promoted under LSG Scheme- reg.
                   Ref:-Memo.No. :-STA/80-7/LSG/C.R/MA dt.04.12.2019 of                                                PMG    Southern Region, Madurai.
                                             ------------------
                    A kind reference is invited  to the Regional Office Memo. cited.
                   As per the Memo. cited , 34 Officials  in P.A. cadre from Tirunelveli    Division have been promoted to LSG cadre.   Out of which, nine officials have         been allotted to Kovilpatti and three officials for Tuticorin Division.  Remaining  22 Officials    have to be posted in the existing vacant posts in Tirunlevelli Division.
                   At this juncture, it is kindly requested that filling up of the  post may           kindly be considered to be posted by getting options from  the  officials           concerned  or conducting counseling from among the  officials to be           promoted, as done in the past, keeping the wider interest of the officials  under consideration.
                   Further, this Divisional Union is constrained to bring the notice of           Divisional Administration about the proposal sent by  SSPos, Tirunleveli   Division to Regional Office  for filling up of the some  post without  completing  tenure .
                   It is a very sorry state of affair, that the above said officials     proposed  to be transferred  on promotion,  . if        implemented , it  will be an injustice to the other officials and purely it is    
         Discrimination  and it shows the  whimsical play by the  Divisional           Administration.
                             Therefore,  it is kindly requested that all  the Posts keeping vacant in           LSG cadre  may be brought under   Vacant List,    willingness is called for      and  then filled as done in the past.  And avoid trade union action in this       issue.
                                              Thanking you, Sir.
                                                                                         Yours faithfully

                                                                                        /S.K.JACOB  RAJ/


Copy to
1.The Circle Secretary
AIPEU GR C TN.Circle
2.The Regional Secretary
AIPEU GR C @Dindugul




அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                       நெல்லை கோட்ட நிர்வாகத்தின் கடைசி நேர ஆட்டங்கள் --
                        (நெல்லை NFPE உறுப்பினர்களுக்கு மட்டும் )
நமது கண்காணிப்பாளர் அவர்கள் வருகிற 31.01.2020 அன்று பணிநிறைவு பெறப்போகிறார்கள்  .பொதுவாக பணிநிறைவு நெருங்க நெருங்க சில அதிகாரிகள் ஊழியர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை (சட்டத்திற்குட்பட்டு )செய்வது உண்டு .சில அதிகாரிகள் தன்னை எதிர்த்தவர்கள் தனக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை ஏதாவது ஒரு வழக்கில் சிக்கவைத்து தண்டனையை கொடுத்துவிட்டு தனது பகையை தீர்த்துகொள்ளுபவர்களும் உண்டு .அந்த அடிப்படையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு ஊழியர்களுக்கு ரூல் 16 இன் கீழ் குற்றப்பத்திரிகையை பொங்கல் பரிசாக கொடுத்திருக்கிறார் .
ஆதார் போராட்டத்திற்கு முன் -ஆதார் போராட்டத்திற்கு பின் என நமது நிர்வாகம் நமது இயக்கம் கொடுத்த  பிரச்சினைகளை தீர்ப்பதில் அணுகிய விதமே இதற்கு சாட்சி ..இந்த நிலையில் வருகிற 24.01.2020 அன்று நடைபெறும் மாதாந்திர பேட்டியில் நாம் கலந்துகொள்ள வேண்டுமா என்ற சிந்தனை என்னுள் எழுகிறது .கண்காணிப்பாளர் அவர்களின் கடைசி நேர நடவடிக்கைகளில் சில 
*பாளையம்கோட்டையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்ததின் அடிப்படையில் இரண்டு ஊழியர்களுக்கு ரூல் 16 தண்டனை ( 14.01.2020 )அன்று குற்றப்பத்திரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது  .நிர்வாகம் வழக்கமாக கொடுக்கும் 10 நாள்அவகாசம்  குற்றம்சாட்டப்பட்ட ஊழியர்கள் கேட்கும் கால அவகாசம் நிச்சயம் 31.01.2020 க்கு பிறகுதான் நிர்வாகத்திற்கு பதில் கிடைக்கும் .இதற்காக முன்கூட்டியே தண்டனையை தீர்மானிக்க முடியுமா ?) தீர்மானிக்கப்பட்டுவிட்டதா ? கேமிராவை பாருங்கள் பாருங்கள் என்று நாம் சொன்னபொழுதெல்லாம் கண்களை மூடிக்கொண்டு சென்ற நிர்வாகம் மாதாந்திர பேட்டியில் தனக்கு எதிராக கேள்விகேட்ட குற்றத்திற்காக ) நெற்றிக்கண்ணை திறந்து இன்று குற்றம் சுமத்தியிருக்கிறது 
*பாளையங்கோட்டையில் பணிபுரியும்  பெண் ஊழியர்களுக்கு மதிய உணவு அமர்ந்து சாப்பிட ஒரு இடம் ஒதுக்கி தருகிறேன் என்று கொடுத்த உறுதிமொழிகள் ஆதார் போராட்டத்தில் நமது தோழியர்கள் பங்கேற்றத்தின் காரணமாக இன்றுவரை இடம்கொடுக்காமலே இழுத்தடிக்கப்பட்து .  மனதில் இடமில்லை போலும் ?
*காசாளர் பதவிகளை நிரப்புங்கள் மாதம் 1000 ரூபாய் அலவன்ஸ் கிடைக்கும் என்ற கோரிக்கை மாதாந்திர பேட்டியில் ஒத்துக்கொள்ளப்பட்டும் புதுப்புது காரணங்களை கண்டுபிடித்து தள்ளிப்போடுவது ஏன் என்று தெரியவில்லை ?
*மண்டல அலுவலகம் மாற்றிக்கொடுத்த இடமாறுதல் உத்தரவை (தோழர் துளசிராமன் ) அமுல்படுத்திட மாதக்கணக்கில் தள்ளிப்பட்டது எதற்காக ?
*புதிதாகி LSG பதவி உயர்வு பெற்றவர்களுக்கு VACANT இடங்களை வெளிப்படையாக அறிவிப்போம் என்று சொல்லிவிட்டு மாநில சர்க்கார் போல் சில இடங்களை மறைத்து வைத்தது யாருக்காக ?
*மூத்த தோழர்களுக்காவது (ஓய்வுபெறும் ஊழியர்களுக்காவது )சீனியாரிட்டி அடிப்படையில் HSG 1 மற்றும் HSG II OFFICIATING கொடுக்க இன்றுவரை மறுப்பதின் மர்மம் புரியவில்லை 
*  கோட்ட அலுவலக OA  பதவி  நிரப்பிட பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் நமது சங்க உறுப்பினர்கள் என்பதற்காகவே OA பதவியை நிரப்பிட காட்டும் மௌனம் ஏன் ?
*இடமாறுதல் கமிட்டி அனுமதித்த தபால்காரர் இடமாறுதல்களை மறுக்கும் போக்கு எதற்கு என்று தெரியவில்லை 
*புதிதாக நியமனம் பெற்ற ஒரு BPM ஊழியரிடம் எந்தவித விளக்கமும் கேட்காமல் அவர் அந்த கிராமத்தில் தங்கவில்லை என்ற காரணத்திற்காக (ஆனால் அதிகாரிகளின் கேள்விக்கு துணிச்சலாக பதில் சொன்னதற்காக ) PUT OFF செய்யப்பட்டுள்ளார் .
             இப்படி பல விஷயஙக்ளில் நமது நிர்வாகத்தின் சமீபகால நடவடிக்கைகள் ஏற்புடையதாக இல்லை .இருந்தாலும் மாதாந்திர பேட்டி எனும் கோட்டமட்டத்தில் இருக்கின்ற உட்சபட்ச உரிமையை விட்டுக்கொடுப்பதும் தொழிசங்கத்திற்கு அழகல்ல ...
ஆகவே தங்கள் பகுதி பிரச்சினைகள் இருந்தால் இன்று மதியத்திற்குள் தெரிவிக்கவும் .நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
  


Monday, January 13, 2020

பாளையம்கோட்டை முன்னாள் கிளை செயலர் தோழர் T .சுடலையாண்டி அவர்களின் தன்விருப்ப ஓய்வுவிழா 
   தென்பகுதியில் நம் இயக்கத்தின் ஆற்றல்மிகு தலைவராக பணியாற்றிய அண்ணன் T .சுடலையாண்டி அவர்களின் தன்விருப்ப ஓய்வுவிழா 13.01.2020 அன்று வள்ளியூர் அஞ்சலகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது .வள்ளியூர் அஞ்சலக தலைவர் அண்ணன் எட்வர்ட் அவர்கள் தலைமை தாங்கினார்கள் .வள்ளியூர் உப கோட்ட  ஆய்வாளர் திரு .ஸ்ரீகுமார் சிறப்புஅழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் .விழாவில் தென் பகுதியை சேர்ந்த நமது முன்னனி தோழர்கள் VS .கிருஷ்ணன் .கோபாலன் சங்கரகுமார் ருக்மணி கணேசன் வள்ளியூர் முருகேசன் முத்தையா ஓய்வூதியர்சங்க துணை தலைவர் அண்ணன் குருசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் .அதனை தொடர்ந்து பணகுடி அவரது இல்லத்தில் நடைபெற்ற விழாவில் கோட்ட தலைவர் அழகுமுத்து வண்ணமுத்து பிரபாகர் பரதன் இளங்கோ உள்ளிட்ட நண்பர்கள் கலந்துகொண்டனர் .விழா நிகழ்வில் சில அன்புடன் -SKJ 







                                                முக்கிய செய்திகள்     
*புதிதாக தேர்வுசெய்யப்படும் அனைத்து GDS ஊழியர்களுக்கும் பணிநியமனத்திற்கு முன் இரண்டு வார காலம்  பயிற்சி இனிமேல் அளிக்கப்படும் என 13012.2019 தேதியிட்ட அஞ்சல் வாரிய உத்தரவில் கூறப்பட்டுள்ளது .
*ஐந்து வருட திட்ட செயல்பாடு குறித்து (2019-2020) 31.12.2019) வரை நமது நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளில் உள்ள நிலை குறித்து நமது அமைச்சகம் தெரிவித்த தகவல்களில் சில....
 .ஆதார் சேவையில் அதிக அளவில் செயல்பட்ட முதல் ஐந்து மாநிலங்களில் தமிழ் மாநிலம் இல்லை (ஞாயிறு சேவைகூட கைகொடுக்கவில்லை  போலும் )
*IPPB கணக்கு தொடங்குவதிலும் இதே நிலை நீடிக்கிறது .ஆனால் பரிவர்த்தனையில் முதல் ஐந்து இடத்தில் ஒன்றாக தமிழகம் வந்துள்ளது 
*SSA மொத்த கணக்குகளில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது .
*PLI /RPLI (பீமா கிராம யோஜனா )களிலும்  தமிழகம் முதல் ஐந்து இடத்தில் ஒன்றாக தமிழகம் வந்துள்ளது .
    நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Friday, January 10, 2020

    திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் இன்று 11.01.2020 அன்று பொங்கல் விழா போஸ்ட்மாஸ்டர் திரு .கடற்கரையாண்டி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .நிகழ்ச்சியை தோழியர் பூர்ணகலா அவர்கள் அருமையாக ஒரு      கவிதையோடு தொகுத்துவழங்கினார்கள் .காலை பொங்கல் மதியம் விருந்து அதனை தொடர்ந்து மாலையில் விளையாட்டு    போட்டிகளும் மிக சிறப்பாக நடைபெற்றது .ஒரு கிராமத்தில் என்னென்ன  விளையாட்டுகள் நடைபெறுமோ அனைத்தும் நமது வளாகத்தில் நடைபெற்றது .நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நமது கோட்ட ASP (OD ) திரு .வேதராஜன் முன்னாள் நமது மகிளா கமிட்டி நிர்வாகி திருமதி H .பொன்னம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் . பொங்கல் நிகழ்ச்சிகள் மற்றும்     விளையாட்டு    விழாக்களை சிறப்புற அமைத்து தந்த அனைத்து தோழியர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து   கொள்கிறோம் .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள்  நெல்லை              







           

                                                    முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
   *நமது  கோட்ட   கண்காணிப்பாளர் அவர்களுடனான இந்த மாத மாதாந்திர பேட்டி வருகிற 24.01.2020 அன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது .தங்கள் பகுதி பிரச்சினைகள் இருந்தால் 13.01.2020 குள் கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவும் .
  * தென்பகுதியில் நமது இயக்கத்தை இயக்கி வந்த அருமை அண்ணன் T .சுடலையாண்டி SPM வள்ளியூர் பேருந்துநிலையம் அவர்கள் 13.01.2020 அன்று தன்விருப்ப ஓய்வில் செல்கிறார்கள் .அன்று மாலை அண்ணனது இல்லத்தில் நடைபெறும் நிகழ்வில் (பணகுடியில்) நமது முன்னணி தோழர்கள் அனைவரும் கூடிடுவோம் .
 * CSI யின் அடுத்த கட்டமாக கணக்கு பிரிவு மீண்டும் DECENTRALIZE ஆகின்றது .அதன்படி மீண்டும் மாத சம்பளம் அந்தந்த தலைமை அஞ்சலகத்தில் கொடுத்திட உத்தரவுகள் விரைவில் வரவிருக்கிறது .இதற்கு முன்னோட்டமாக சென்னை அண்ணாசாலை தலைமைஅஞ்சலகத்தில் டிசம்பர் மாத ஊதியமே அண்ணாசாலை தலைமைஅஞ்சலகத்தில் 31.12.2019 அன்று வழங்கப்பட்டுள்ளது .இனி ஊதியத்திற்காக அடுத்தவரை கையேந்தி காத்திருக்கும்  நிலை வராது .....ஆகவே இனிமேல் கணக்கு பிரிவு என்பதே இருக்காது அல்லது நீடிக்காது என்ற கூற்று பொய்யாகிறது ...
* ஓவ்வொரு DDO (தலைமைஅஞ்சலகத்திற்கும் )ஒரு AAO நியமிக்கப்பட உள்ளார்கள் .அதேபோல் ஒவ்வொரு கோட்ட அலுவலகத்திலும் ஒரு ACCOUNTS OFFICER (AO ) நியமிக்கப்படவுள்ளார்கள் ..இனிமேல் வவுச்சர் செக்கிங் உள்ளிட்ட எதுவும் ஆடிட் அலுவலகத்திற்கு செல்லவேண்டிய அவசியம் இருக்காது ...
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் P3    -P.பாலகுருசாமி  கோட்டசெயலர் P4 (பொறுப்பு ) 

Thursday, January 9, 2020

08.01.2020 வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றி --நமது நெல்லை கோட்டத்தில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற உங்கள் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த வீர வாழ்த்துக்கள் 
                      இழப்பதற்கு ஒன்றுமில்லை ...அடைவதற்கோ ஒரு பொன்னுலகம் இருக்கிறது தோழர்களே !
               19991 யில் இருந்து நேற்று நடந்த வேலைநிறுத்தம் 19 வது வேலைநிறுத்தம் .இதில் நாடெங்கிலும் 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர் .அஞ்சல் துறையில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களான NFPE -FNPO-AIGDSU சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்றன .கோட்ட அலுவலகம் தொடங்கி இதர தலைமை அஞ்சலங்கள் (ஒருசிலரை தவிர ) முழுமையாக வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தந்தன .MMS மற்றும் PSD முழுமையாக வேலைநிறுத்தத்தில் பங்கேற்றன .எப்படியாவது பட்டுவாடாவை நடத்திடவேண்டும் என்ற முனைப்பில் நேரடியாகவே கோட்டநிர்வாகம் களத்தில் இறங்கியும் 5 அலுவலகத்தில் மட்டுமே பட்டுவாடா நடைபெற்றதாக காட்டிக்கொண்டனர் .பாளையங்கோட்டையில் அவர்களின் பட்டுவாடா முயற்சி படு தோல்வி அடைந்தது .துணை அஞ்சலகங்களை பொறுத்தவரை NFPE -FNPO ஊழியர்கள் பணியாற்றிய அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டன .திசையன்விளை சங்கர்நகர் பெருமாள்புரம் என HSG I &HSG II அலுவலகங்கள் மூடப்பட்டன .பணிஒய்வை ஒட்டியுள்ள தோழர்களுக்கு   பணியாற்றிட  அனுமதிக்கப்பட்டது .அதனால் அவர்கள் யாரும் வருத்தப்படத்தேவையில்லை .மேலும் சங்கங்களை தாண்டியும் சில சங்கடங்களை தாண்டியும் நம்மோடு வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற அனைவருக்கும் NELLAI NFPE சார்பாக மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .முன்னதாக பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் C.வண்ணமுத்து அவர்கள் தலைமை தாங்கினார்கள் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்டசெயலர்கள் நெல்லை .


Wednesday, January 8, 2020

            புனித போரில் உன்பெயரை எழுது !
வா போராடு ! எல்லோரோடு சேர்ந்து போராடு !
போராட சொல்வதுதான் சங்கம் 
போராட வேண்டாம் என்பதற்கு 
எதற்கு ஒரு சங்கம் ?

சிலுவை என்றாலும் 
சிறைச்சாலை என்றாலும் 
சித்திரவதை என்றாலும் 
சிரித்துக்கொண்டு ஏற்றவர்கள் 
நம் தலைவர்கள் 

சஸ்பென்ஷன் --வேலைநீக்கம் இவைகளையும் 
எதிர் கொண்டவர்களே இந்த தலைவர்கள் 
அச்சுறுத்தல் அடக்குமுறைகள் என 
அனைத்தையும் சந்தித்தவர்களே 
எங்கள் தலைவர்கள் 

இடமாற்றம் -தண்டனைகள் என 
அடுத்தடுத்த தாக்குதல்களை சந்தித்தவர்களே 
எங்கள் தலைவர்கள் 
சுகம் காண சங்கம் அல்ல -தொழிலாளியின் 
சுமை தாங்கவே தொழிற்சங்கம் 

அரசாங்கத்தை -ஆட்சியாளர்களை 
அச்சுறுத்தும் அபார சக்தி 
சங்கத்திற்கு மட்டுமே உண்டு 
அதிகாரங்களை -அதிகாரிகளை 
அலட்சியம் செய்யும் ஆற்றலும் 
என் சங்கத்திற்கே உண்டு 

வேலைநிறுத்தம் வேடிக்கை காட்டுவதற்கு அல்ல 
தொழிலாளியின் உள்ளத்தில் வெடிக்கும் உணர்வை 
வெளிக்கொணரவே போராட்டங்கள் 
தீர்வை நோக்கி எங்களின் புனித பயணங்கள் 
இன்றல்ல நேற்றல்ல என்றென்றும் தொடரும் 

ஏளனங்கள் அவமானங்கள் எச்சரிக்கைகள் 
எங்களை முடுக்கிவிட கிடைத்த பாராட்டுக்கள் 
சொல் அம்புகள் விமர்சன கணைகள் -எங்கள் 
நெஞ்சிலே பாய்ந்தாலும் ஓய்ந்திடப்போவதில்லை 

கோடிக்கணக்கில் தொழிலாளி 
ஒன்று திரளும் போது -உன்னால் மட்டுமே 
ஒதுங்கி நிற்க எப்படி முடியும் ?
இப்படியே நீ இருந்துவிட்டால் 
நம் வாழ்வு எப்போதுதான் விடியும் ?

இன்றோடு முடிவதில்லை இந்த போராட்டம் 
நாளையும் நாளை மறுநாளும் தொடரும் 
வா !இந்தமுறை இல்லையென்றாலும் 
அடுத்த முறையாவது வா !
அடுத்த தலைமுறையை பாதுகாத்திட 
அடுத்த முறையாவது வா !வா !

இந்த புனித போரில்  உன் 
பெயரையும் சேர்த்து எழுது ! பொது இயக்கத்தில் 
உன் புகழையும் கோர்த்து பழகு !
                              தோழமையுடன் ----SK .ஜேக்கப் ராஜ் ---------












Tuesday, January 7, 2020

    வெற்றி பாதையில் நாளைய வேலைநிறுத்தம் ............அனைவருக்கும் எங்கள் வீர வாழ்த்துக்கள் ...
                 நமது கோட்டத்தில் நாளைய வேலைநிறுத்தம் மற்றுமொரு வெற்றிசரித்திரம் படைக்கப்ட்டும் .ஆம் இப்பொழுதே அதிகப்படியான SO கள் மூடப்படுவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன .மூன்று தலைமை அஞ்சலகங்களும்  வெறிசோடாப்போகின்றன ......நாளை காலை 10.30 மணிக்கு பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் ...
அனைவரும் வாரீர் !வாரீர்!
                                                   தோழமையுடன் நெல்லை NFPE

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 
                                       08.01.2020 வேலைநிறுத்தத்தை வெற்றிபெற செய்வோம் .
   இரண்டு கால்கள் உள்ள எல்லாராலும் நடக்க முடியும் -இரண்டு கைகள் உள்ள எல்லாராலும் எழுதமுடியாது என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் கூற்றுப்படி யார் வேண்டுமானாலும் சங்கம் அமைக்கலாம் ஆனால் எல்லா சங்கத்தாலும் போராட முடியாது .ஆம் அஞ்சல் துறையை பாதுகாக்க வேண்டிய புனித போரில் நம்மால் மட்டுமே பங்கேற்கமுடியும் என்பதில் பெருமை கொள்வோம் .நாளை ஒருநாள் வேலைநிறுத்தம் செய்யாமல் ஒதுங்கி கொண்டால் உங்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும் எத்தனை மணிக்கும் வரலாம் எத்தனை மணிக்கும் போகலாம் அடுத்த நாள் குறிப்பிட்ட நேரத்திற்கு அலுவலகம் செல்லவில்லையா ? சேமிப்புக்கணக்குகளை பிடிக்கவில்லையா ? அப்பொழுது தெரியும் நிர்வாகத்தின் உண்மை முகம் .இதோ தொழிலாளியின் உணர்வை தட்டியெழுப்பிய ஒரு குரலை கேளுங்கள் !
அஞ்சல் தொழிற்சங்கத்தின் நிறுவன தலைவர் தோழர் பாபுதார பாதா 1921 யில் லாகூர் மாநாட்டில் ஆற்றிய தலைமையுரை ....
நமது அழுகைகளும் கூக்குரலும் கருணை மனுக்களும் வேண்டுகோள்களும் பலனளிக்கபோவதில்லை .தொழிலார்கள் பிச்சைக்காரர்கள் அல்ல கொடுப்பதை பெற்றுக்கொள்ள !
என் தோழர்களே !நீங்கள் உதாசீனப்படுத்துவதை உணருகிறீர்களா ?உங்கள் உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என்று எண்ணுகிறீர்களா ? அப்படி எண்ணினால் உங்களுக்கு ஒரு வழி தான் உண்டு ஒரே ஒரு வார்த்தை தான் ஒன்றுபடுங்கள் உயர் அதிகாரிகள் உங்களை மதிக்கவேண்டும் என்றால் ......உங்களை பாதிக்கும் நிர்வாக முடிவுகளில் உங்களை அதிகாரிகள் கலந்து ஆலோசிக்கவேண்டும் என்றால் உங்கள் கருத்துக்கள் ஏற்கப்படவேண்டும் என்றால் ஒன்றுபடுங்கள் 
--------------------------------------------------------------------------------------------------------------
வேலைநிறுத்த அறிவிப்புகளின் எதிரொலி GDS கோரிக்கைகளின் மீது அஞ்சல் வாரியம் அறிவித்த அடுத்தடுத்து  உத்தரவுகள் 
*Combined duty allowance தொடர்பாக அனைத்து single handed BO களில் BPM கள் Mail carrier & Mail delivery பணிகளை சேர்த்து பார்க்கும் போது  பணி நேரம்  4 மணி நேரம் அல்லது 5 மணி நேரத்திற்கு மேலாக உள்ளதா என கேட்டு அனைத்து Circle office க்கும் விவரங்களை கேட்டு இலாகா*.6.01.2020 சுற்றறிக்கை அனுப்பியுள்ளது .
*Additional increments தொடர்பாக இலாகாவால் அமைக்க கமிட்டி
*விடுப்பு சேமிப்பு 180 நாட்கள் தொடர்பாக இலாகாவால் அமைக்க பட்ட கமிட்டி
                    ஒரு வேலைநிறுத்த அறிவிப்பிற்கு பிறகுதான் அஞ்சல் வாரியம் தனது மௌனத்தை கலைக்கிறது .ஒரு அரசாங்கத்தின் மௌனத்தை கலைக்க இன்னும் தொடர் இயக்கங்களை நடத்திடுவோம் 
வெல்லட்டும் !வெல்லட்டும் ! நாடுதழுவிய வேலைநிறுத்தம் வெல்லட்டும் .
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Monday, January 6, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
               08.01.2020  வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச்செய்வோம் 
  நமது கோட்டத்தில் கடந்த சிலநாட்களாக நடைபெற்ற வேலைநிறுத்த சுற்றுப்பயணம் மிக சி றப்பாக அமைந்தது .SINGLE HAND  SPM மற்றும் INCHARGE யில் உள்ள அனைத்து போஸ்ட்மாஸ்டர் களும் கீழ்கண்ட தகவல்களை e mail மூலம் கோட்ட அலுவலகத்திற்கு 07.01.2020 அன்று காலை கொடுத்துவிடகேட்டுக்கொள்கிறோம் 

To
The SSPOs 
Tirunelveli Division Tirunelveli 
Sir,
Sub : Intimation regarding participation in one day strike on 08.01.2020.
As per the call of NFPE and its affiliated Unions  I am going to participate in the one day strike on 08.01.2020.
Hence, it is requested to depute an official to take charge of this office at the close of 07.01.2020.
                                                                                Thanking you 

                                                                                                                               Yours faithfully
--------------------------------------------------------------------------------------------------------------------------
தபால்காரர் சங்கத்தின் 28 வது அகிலஇந்திய மாநாடு 
  அஞ்சல் நான்கின் 28 வது அகிலஇந்திய மாநாடு கர்நாடக மாநிலம் உடுப்பியில் 23.04.2020 முதல் 25.04.2020 வரை நடைபெறுகிறது .மாநாட்டிற்கு வர விரும்பும் அஞ்சல்நான்கின் தோழர்கள் நமது கோட்ட பொறுப்பு செயலர் தோழர் P .பாலகுருசாமி அவர்களிடம் தகவல்களை தெரிவிக்கவும் 
---------------------------------------------------------------------------------------------------------------------
08.01.2020 வேலைநிறுத்த நாளன்று காலை 10.30 மணிக்கு பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .அனைத்து தோழர்களும் ஆர்பாட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
----------------------------------------------------------------------------------------------------------------------
RMS பகுதியில் வேலைநிறுத்தம் 08.01.2020 அன்று  00.00 மணிக்கு தொடங்குகிறது 
--------------------------------------------------------------------------------------------------------------------
போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் P3
P.பாலகுருசாமி கோட்டசெயலர் (பொ ) P4  நெல்லை 

Saturday, January 4, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                  இந்த ஆண்டின் RULE 38 உத்தரவுகள் நேற்று வெளியாகியுள்ளன .நமது கோட்டத்தை விட்டு செல்பவர்களுக்கும் நெல்லையை நோக்கி வருகிறவர்களுக்கும் NELLAI NFPE தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .
                                   நெல்லையில் இருந்து .....
தோழர் C .மகேந்திரன் போஸ்ட்மேன் டவுண் -----கோவில்பட்டி 
                                         நெல்லைக்கு வருகிறவர்கள் ......
தோழர் டிசென் PA  ராஜபாளையம் (அகிலஇந்திய கபாடி வீரர் )
தோழியர் வள்ளி @ராஜேஸ்வரி தபால்காரர் மதுரை 
தோழர் சிவசுப்பிரமணியன் தபால்காரர் தென்சென்னை 
தோழர் அஜன் அமலேஷ் தபால்காரர் தருமபுரி 
தோழியர் அன்புசெல்வி தபால்காரர் மத்தியசென்னை 
தோழியர் மாரியம்மாள் தபால்காரர் மத்தியசென்னை 
தோழர் சதீஷ் குமார் தபால்காரர் மத்தியசென்னை 
-----------------------------------------------------------------------------------------------------------------------
                                                 08.01.2020 வேலைநிறுத்தம் 
கடந்த இருதினங்களாக நமது கோட்டத்தில் பல்வேறு ஊழியர்களை சந்தித்து 08.01.2020 அன்று நடைபெறும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க அழைப்புவிடுத்தோம் .அனைத்து பகுதி ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உறுதியாக உள்ளனர் .நமதுகோட்டத்தில் நமது உறுப்பினர்களின் பங்கு 100 சதம் இருக்கும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .
                                               மாநில மாநாடு நன்கொடை 
  வேலைநிறுத்த சுற்றுப்பயணத்தோடு நமது மாநில மாநாட்டிற்கான நன்கொடைகளை பெற்றுவந்தோம் ..விடுபட்ட தோழர்கள் மாநாட்டு நன்கொடையாக ரூபாய் 100 மட்டும் POSB 0072773482 (ஜேக்கப் ராஜ் )கணக்கில்  செலுத்திடுமாறு மீண்டும் நினைவு படுத்துகிறோம் .
------------------------------------------------------------------------------------------------------------------
அஞ்சல் நான்கின் நெல்லை கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா அவர்களின் சகோதரர் மகள் திருமணவிழா 05.01.2020 அன்று பாளையம்கோட்டை  இதயா திருமணமண்டபத்தில் நடைபெறுகிறது .இல்லறவாழ்வில் அடியெடுத்துவைக்கும் புதுமண தம்பதிகளுக்கு NELLAI NFPE வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .
  நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -P.பாலகுருசாமி கோட்டசெயலர்கள் நெல்லை 

Friday, January 3, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                               08.01.2020 வேலைநிறுத்தம் வெல்லட்டும் 
                      *   நேற்றைய வேலைநிறுத்த சுற்றுப்பயணத்தில் தென்பகுதியில் பெரும்பாலான ஊழியர்களை சந்தித்தோம் .குறிப்பாக ரூல் 38 யின் கீழ் நமது கோட்டத்தில் வந்த  புதிய தோழர்கள்/தோழியர்களை சந்திக்கும் வாய்ப்புகிடைத்தது .இன்று நமது மாநகர் பகுதி மற்றும் மானுர் கங்கைகொண்டான் 7சங்கர்நகர் பகுதிக்கு செல்கிறோம் .அத்துடன் மாநில மாநாட்டிற்கான நன்கொடைகளையும் பெற்றுவருகிறோம் .
                    *பெப்ருவரி 9-11கோவையில் நடைபெறும்  P-3மாநில மாநாட்டிற்கு இதுவரை 13 தோழர்கள் வருவதாக உறுதிசெய்துள்ளனர் .மேலும் வரவிரும்பும் தோழர்கள் நமது இளைய தோழர் அர்ஜுனன் SPM பெட்டைக்குளம் அவர்களை (9942666070) என்ற எண்ணில் தொடர்புகொண்டு ரயில்கட்டணமான ரூபாய் 600 யை அவரது POSB 1066600623 கணக்கில் செலுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
                  *ஜனவரி 2020 க்கான பஞ்சபடி 4 சதம் அதிகரிக்கும் என தெரிகிறது 
                 * வேலைநிறுத்தம் செய்வதாக அறிவிப்பு கொடுத்த NFPE &FNPO சம்மேளனங்களுக்கு அஞ்சல் துறை நமது கோரிக்கைகளை பரீசீலிப்பதாகவும் வேலைநிறுத்தத்தை கைவிடவும் வேண்டுகோளை வழக்கம் போல் விடுத்துள்ளது .
 நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -P.பாலகுருசாமி கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, January 2, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                         நேற்று நமது கோட்ட்டத்தில் பல்வேறு அலுவலகங்களில் புத்தாண்டு தினத்தை நமது ஊழியர்கள் ஒன்றுசேர்ந்து மிகச்சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர் .பணிபுரியும் இடங்களில் எந்தவித பாகுபாடுகள் ஏதுமின்றி ஒரே குடும்பமாய் ஒரே தோழமையாய் இந்த உறவுகள் தொடர நெல்லை NFPE வாழ்த்துகிறது .திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழக்கமாக கவிதை இசைத்திடும் தோழியர் முத்துலட்சுமி மற்றும் புதிதாக தோழியர் பூர்ணகலா அவர்களுக்கும் வாழ்த்துக்களை கவிதையாக தந்தனர் .நமது உறுப்பினர்களின் திறமைகளை வெளிக்கொணர இது போன்ற நிகழ்ச்சிகள் பேருதவியாக இருந்தது மேலும் ஒரு சிறப்பாகும் .
இதோ தோழியர் பூர்ணகலா அவர்களின் கவிதை ........

கிழக்கே உதிக்கும் 
பெரும் சூரியனாய் 
மேற்கே மகிழும் 
சிறு பறவைகளாய் 
எட்டு திக்கும் முழங்கும் 
புது சங்காய் 
ஆர்ப்பரித்து ஓடிவரும் 
குளிர்ந்த நீரோடையாய் 
நம் வாழ்வில் 
இதுவும் கடந்து போகும் 
எதுவும் நம்மை 
கடத்தி செல்லாது 
என அன்புடன் வாழ்த்தும் 
என்றும் அன்புடன்                ------     பூர்ணகலா மணிகண்டன் ---------
-------------------------------------------------------------------------------------------------------------------
                       08.01.2020 வேலைநிறுத்தம்  வெல்லட்டும் 
நடைபெறவிருக்கும் 05.01.2020 வேலைநிறுத்தத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் நமது கோட்ட சங்க தலைவர் தோழர் T.அழகுமுத்து அவர்கள் தலைமையில் கோட்டம் முழுவதும் பிரச்சார பயணம் மேற்கொள்கிறோம் .NFPE -FNPO-மற்றும் AIGDSU சங்கங்கள் முழுமையாக பங்கேற்கும் வேலைநிறுத்தம் வெல்லட்டும் ..
-------------------------------------------------------------------------------------------------------------------
                          39 வது அஞ்சல்மூன்றின் மாநில மாநாடு 
நமது தமிழ்மாநில சங்கத்தின் 39 வது மாநில மாநாடு வருகிற பெப்ருவரி 9-11 மூன்று நாட்கள் நடைபெறுகிறது .மாநாட்டு நன்கொடையாக நமது உறுப்பினர்கள் தலா ரூபாய் 100 மட்டும் தந்திடுமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறோம் 
--------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -P.பாலகுருசாமி கோட்டசெயலர்கள் நெல்லை