திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் இன்று 11.01.2020 அன்று பொங்கல் விழா போஸ்ட்மாஸ்டர் திரு .கடற்கரையாண்டி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .நிகழ்ச்சியை தோழியர் பூர்ணகலா அவர்கள் அருமையாக ஒரு கவிதையோடு தொகுத்துவழங்கினார்கள் .காலை பொங்கல் மதியம் விருந்து அதனை தொடர்ந்து மாலையில் விளையாட்டு போட்டிகளும் மிக சிறப்பாக நடைபெற்றது .ஒரு கிராமத்தில் என்னென்ன விளையாட்டுகள் நடைபெறுமோ அனைத்தும் நமது வளாகத்தில் நடைபெற்றது .நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நமது கோட்ட ASP (OD ) திரு .வேதராஜன் முன்னாள் நமது மகிளா கமிட்டி நிர்வாகி திருமதி H .பொன்னம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் . பொங்கல் நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு விழாக்களை சிறப்புற அமைத்து தந்த அனைத்து தோழியர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment