...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, January 8, 2020

            புனித போரில் உன்பெயரை எழுது !
வா போராடு ! எல்லோரோடு சேர்ந்து போராடு !
போராட சொல்வதுதான் சங்கம் 
போராட வேண்டாம் என்பதற்கு 
எதற்கு ஒரு சங்கம் ?

சிலுவை என்றாலும் 
சிறைச்சாலை என்றாலும் 
சித்திரவதை என்றாலும் 
சிரித்துக்கொண்டு ஏற்றவர்கள் 
நம் தலைவர்கள் 

சஸ்பென்ஷன் --வேலைநீக்கம் இவைகளையும் 
எதிர் கொண்டவர்களே இந்த தலைவர்கள் 
அச்சுறுத்தல் அடக்குமுறைகள் என 
அனைத்தையும் சந்தித்தவர்களே 
எங்கள் தலைவர்கள் 

இடமாற்றம் -தண்டனைகள் என 
அடுத்தடுத்த தாக்குதல்களை சந்தித்தவர்களே 
எங்கள் தலைவர்கள் 
சுகம் காண சங்கம் அல்ல -தொழிலாளியின் 
சுமை தாங்கவே தொழிற்சங்கம் 

அரசாங்கத்தை -ஆட்சியாளர்களை 
அச்சுறுத்தும் அபார சக்தி 
சங்கத்திற்கு மட்டுமே உண்டு 
அதிகாரங்களை -அதிகாரிகளை 
அலட்சியம் செய்யும் ஆற்றலும் 
என் சங்கத்திற்கே உண்டு 

வேலைநிறுத்தம் வேடிக்கை காட்டுவதற்கு அல்ல 
தொழிலாளியின் உள்ளத்தில் வெடிக்கும் உணர்வை 
வெளிக்கொணரவே போராட்டங்கள் 
தீர்வை நோக்கி எங்களின் புனித பயணங்கள் 
இன்றல்ல நேற்றல்ல என்றென்றும் தொடரும் 

ஏளனங்கள் அவமானங்கள் எச்சரிக்கைகள் 
எங்களை முடுக்கிவிட கிடைத்த பாராட்டுக்கள் 
சொல் அம்புகள் விமர்சன கணைகள் -எங்கள் 
நெஞ்சிலே பாய்ந்தாலும் ஓய்ந்திடப்போவதில்லை 

கோடிக்கணக்கில் தொழிலாளி 
ஒன்று திரளும் போது -உன்னால் மட்டுமே 
ஒதுங்கி நிற்க எப்படி முடியும் ?
இப்படியே நீ இருந்துவிட்டால் 
நம் வாழ்வு எப்போதுதான் விடியும் ?

இன்றோடு முடிவதில்லை இந்த போராட்டம் 
நாளையும் நாளை மறுநாளும் தொடரும் 
வா !இந்தமுறை இல்லையென்றாலும் 
அடுத்த முறையாவது வா !
அடுத்த தலைமுறையை பாதுகாத்திட 
அடுத்த முறையாவது வா !வா !

இந்த புனித போரில்  உன் 
பெயரையும் சேர்த்து எழுது ! பொது இயக்கத்தில் 
உன் புகழையும் கோர்த்து பழகு !
                              தோழமையுடன் ----SK .ஜேக்கப் ராஜ் ---------












0 comments:

Post a Comment